டூலிப் பூக்கள் செய்முறை பகுதி - 1

தேதி: June 30, 2012

5
Average: 4.8 (4 votes)

 

சதுர வடிவ வண்ண காகிதங்கள்
டூத்பிக் அல்லது மெல்லிய குச்சி

 

ஒரு காகிதத்தை முக்கோணமாக மடித்து சதுரமாக வெட்டி எடுக்கவும்.
இதை முக்கோணமாக மடிக்கவும்.
விரித்து மீதம் உள்ள இரண்டு முனைகளை இணைத்து எதிர் திசையில் ஒரு முக்கோணமாக மடிக்கவும்.
விரித்துப் பார்த்தால் இப்படி ‘X’ வடிவம் கிடைக்கும்.
இப்போது அதை செவ்வக வடிவில் மடிக்கவும்.
மீண்டும் பிரித்து எதிர் திசையிலும் செவ்வகமாக மடிக்கவும். இனி பிரித்து பார்த்தால் ‘X' கோட்டின் நடுவே ஒரு '+' கோடும் இருக்கும்.
இனி கார்னரில் உள்ள மடிப்பை அப்படியே சேர்த்து மடிக்கவும்.
நடுவில் உள்ள கோட்டை உள் பக்கமாக அழுத்தி அடுத்த கார்னர் மடிப்பையும் சேர்க்கவும்.
இதே போல் எல்லா முனையையும் சேர்த்து மடிக்கவும்.
இப்போது 4 முனைகளும் மடிக்கப்பட்டு இப்படி கிடைக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்