தேதி: June 30, 2012
சதுர வடிவ வண்ண காகிதங்கள்
டூத்பிக் அல்லது மெல்லிய குச்சி
இப்போது முக்கோணங்களை படத்தில் உள்ளது போல் விரிக்கவும்.

ஒவ்வொரு முக்கோணத்தின் முனையையும் நடு கோட்டை மையமாக கொண்டு மேல் பக்கமாக மடிக்கவும்.

4 முனையையும் மடித்த பின் இப்படி இருக்கும்.

இனி கீழிருந்து மேலாக மீண்டும் நடு கோட்டை மையமாக கொண்டு படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.

இருபக்கமும் இதே போல் மடிக்கவும்.

இனி ஒரு பக்கத்தை இன்னொரு பக்க மடிப்பின் உள்ளே அழுத்தி விட்டு லாக் செய்யவும்.

இப்போது கீழே இப்படி இருக்கும். இந்த சிறு ஓட்டையின் உள்ளே டூத் பிக் உள்ளே விட்டு மடிப்பை எடுத்து விடவும்.

மடிப்பு எடுக்கப்பட்டு எல்லா பக்கமும் வெளியே எடுக்கப்பட்டு இப்படி சதுர வடிவம் கிடைக்கும். பூவின் அடிபாகம் தயார்.

மேலே இதழ்களை மெதுவாக விரல்களால் எடுத்து மடித்து விடவும்.

அழகான டூலிப் பூக்கள் தயார். இனி இவற்றுக்கு இலைகள் செய்து பூக்குடையாக அலங்கரிக்கலாம். பார்க்க சிரமமாக தெரிந்தாலும் ஒரு பூ மடித்து பார்த்து விட்டால் அடுத்து அடுத்த பூக்கள் ஒவ்வொன்றும் செய்ய 5 நிமிடங்கள் போதுமானது.

Comments
பூ அழகு!
நீங்களெல்லாம் அருசுவைக்காவே வாழ்பவர்களா? பூ அழகாக இருக்கு. விடுமுறையில் குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைக்க நல்ல வழி.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
தேன்க்யூ
கைவினை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)
ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. //நீங்களெல்லாம் அருசுவைக்காவே வாழ்பவர்களா?// - இப்படி கேட்டா என்ன சொல்றது?? நிச்சயமா எதை செய்தாலும் அறுசுவைக்காக தான் செய்வேன். :) அவசியம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க... நிச்சயம் எஞ்சாய் பண்ணுவாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆச்சரியத்துடன் பாராட்டு!
அன்பு வனிதா!
கருத்து எழுதவே பல முறை யோசிக்கும் எனக்கு உங்கள் பங்களிப்பை பாரட்ட தோன்றிய வார்த்தை அது. கருத்துப்பரிமாற்றம் சரியில்லையோ?
ஜெயந்தி
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
ஜெயலக்ஷ்மி
அப்படி ஏதும் இல்லை ஜெயலக்ஷ்மி... தயங்காம கருத்துக்களை எழுதுங்க :) அது தான் எங்களூக்கும் மகிழ்ச்சி. நீங்கள் சொல்ல வந்ததை சரியாகவே புரிந்து கொண்டேன்... பதில் தான் என்ன சொல்லன்னு தெரியலன்னு சொன்னேன். ;) உங்க வார்த்தைகள் மகிழ்ச்சி அளித்தது... அதில் சந்தேகம் ஏதுமில்லை. நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ட்யூலிப்
அழகா இருக்கு வனிதா.
- இமா க்றிஸ்
வனிதா,
மிகவும் அழகான பூக்கள்.
ஹை !!!
இமா & செபா ஆண்ட்டி... ஆண்ட்டி நலமா இருக்கீங்களா? எத்தனை நாளாச்சு உங்கள் பதிவு பார்த்து!!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஆண்ட்டி. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :) நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்க ஆண்ட்டி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டூலிப் பூக்கள்
வனி,
உங்கள் கைவண்ணத்தை என்வென்று சொல்ல... மனதை பறிக்கும் லாவெண்டர் மற்றும் பிங்க் வண்ண டூலிப் பூக்கள் அசல் போங்க...
வாழ்த்துக்கள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
prema mam
plz tell me how to type in tamil
by,
AnuGopi,
Be happy and Make others happy........
அனுகோபி
அறுசுவையின் கீழே (Bottom of the Page) தமிழ் எழுத்தருவி இருக்கிறது அதில் முயற்சி செய்யுங்கள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
prema mam
after that wt can i do it.......how to send this in tamil form
by,
AnuGopi,
Be happy and Make others happy........
பிரேமா
மிக்க நன்றி :) நேரம் கிடைச்சா முயற்சி செய்து பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு
கீழே தமிழ் எழுத்துதவிக்கு போய் அதில் தமிங்கிலத்தில் அடிக்க கொடுத்திருக்கும் பெட்டியில் தட்டுங்க... கூடவே அந்த பதிவு கீழே தமிழில் மாறி வரும்... அதை காபி செய்து பதிவிட வேண்டிய இடத்தில் தமிழில் பதிவிடலாம்.
உதாரணம்... நீங்க மேலே இருக்கும் பெட்டியில் “vaangka" என்று தட்டினால் கீழே “வாங்க” என்று வரும். எந்த தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்து பயன்படுத்தனும் என்றும் மேலே அட்டவனை இருக்கு பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
mam
thanks mam
by,
AnuGopi,
Be happy and Make others happy........
vanithaa akkaa
vanithaa akkaa
by,
AnuGopi,
Be happy and Make others happy........
vanithaa akkaa
vanithaa akkaa sorry akka i want to download tamil font
by,
AnuGopi,
Be happy and Make others happy........
வனிதா அக்கா நன்ற்
வனிதா அக்கா நான் கட்றுகென்டான்
by,
AnuGopi,
Be happy and Make others happy........
வனிதா...
வனிதா மேடம்,
செவன்த் ஸ்டேப் வரைக்கும் ஓகே... அதுக்கு அப்புறம் இந்த சதுர வடிவம் மட்டும் கொஞ்சம் குழப்பமா இருக்கு... சரியா வர மாட்டேங்குது :) இன்னும் கொஞ்சம் explain பண்ண முடியுமா? நன்றி....
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து மேடம்
அது ஒன்னும் கஷ்டம் இல்ல மேடம் முதல் பூ தான் கொஞ்சம் சிரமமா இருக்கும் ;)
அடி பகுதி இப்போ ‘x' வடிவில் இருக்கா? அதன் நடுவே ஒரு ஹோல் இருக்கா?
அந்த ஹோல் உள்ள டூத் பிக்கின் அடி பகுதியை விடுங்க. உள் பக்கமா மடங்கி இருக்கும் காகிதத்தை வெளிய தள்ளுங்க. அதாவது ‘X'ல் உள்ள ஒவ்வொரு 'V' வடிவமும் பெண்ட் நிமித்தி விட்டீங்கன்னா ’-’ நேர் கோடா வரும். அப்படி வந்தா சதுரம் கிடைக்கும். ட்ரை பண்ணுங்க. மெதுவா பேப்பர்ல ஓட்டை விழாம. நடு ஓட்டை பெருசாகாம.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சரிங்க மேடம்...
சரிங்க வனிதா மேடம்... முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் மேடம்... :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
நன்றி வனிதா:)
நன்றி வனிதா:)
கடைசியா எப்படியோ செஞ்சு முடிச்சாச்சு....... பேப்பர் எப்படி கிழியாமல் இருந்தது என்று தான் புரியவில்லை :)
நல்ல tension reliever:) காலையில் இருந்து ஒரு சிறு பிரச்சனையால் கொஞ்சம் அப்செட்டாக இருந்தேனா.... உங்க டூலிப் செய்து இப்போ மனசு தெளிவாயிடுச்சு :) அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :D
பேஸ் புக்கில் போட்டாச்சு... உங்களுக்காக தான் பப்ளிக் வியூவில் போட்டிருக்கிறேன்... என்னோட மொபைலில் தான் படம் பிடித்தேன்... ரொம்ப எல்லாம் கிளியரா இருக்காது.. நேரம் கிடைத்தால் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்... டீச்சர் பார்த்து கமென்ட் சொன்னால் தானே தெரியும் :)
நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
ஹாய் வனிதா மேம்
இது பார்பதற்கு ரொம்ப அழகா இருக்குது. பட் எனக்கு குழப்பிடுச்சு. இதை ட்ரை பன்னிட்டு சொல்றேன். எப்படி நீங்க இவ்ளொ சூப்பரா திங்க் பன்னுரீங்க? வெரி நைஸ்.
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
Doubt
Nandraha irukirathu. nanum try pannunen.Lock pannuvathu eppadi. இனி ஒரு பக்கத்தை இன்னொரு பக்க மடிப்பின் உள்ளே அழுத்தி விட்டு லாக் செய்யவும். ithilirunthu ennum konjam detaila sollungalen. Pls..........
டூலிப்ஸ்
பிந்து... உண்மையில் நல்ல பொழுதுபோக்கு இந்த பேப்பர் வேலைகள்... மனசு எதையும் யோசிக்காது, இதை செய்யும் போது. எனக்கு தூக்கம் வரலன்னாலே கையில் எடுத்துடுவேன் பேப்பரை. எனக்காக ஃபேஸ்புக்கில் போட்டதுக்கு மிக்க நன்றி. அவர் ஐடியில் இருந்து பார்த்ததால் அங்க கமண்ட் ஏதும் போடல ;) பார்க்க மட்டுமே எனக்கு அனுமதி. ஹிஹிஹீ.
ரேவதி... மிக்க நன்றி. கடைசியா பேப்பர் எடுத்து விடுவதில் தான் கொஞம் சிரமம்... அதுவும் ஒரு பூ தான், அதை எடுக்க கத்துகிட்டா அடுத்தது சுலபம் தான். நானெல்லாம் தின்க் பண்ணலங்க, எல்லாம் நெட்ல பார்த்து கத்துகிட்டது தான். :)
ராஜி... மிக்க நன்றி. லாக் செய்வது... இரண்டு பக்கமும் உள் பக்கம் பார்த்தது போல் மடிக்கறீங்க தானே... அப்போ /\ கிடைக்கும் மடிப்பு நடு பகுதியில். இவற்றை ஒன்றின் மேல் ஒன்று ஓவர்லேப் ஆகி வருவது போல் மடித்து ஒரு முனையை மற்றொன்றின் உள்ளே விட்டால் லாக் ஆயிடும். ஒன்றுமில்லை... இரண்டு மடிப்பும் பிரிந்து போகாமல் இருக்க தான். புரியும்படி சொல்லிருக்கனா? இல்லன்னா கேளுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vanitha akka... Ungaloda
Vanitha akka... Ungaloda explanation parthuten. Try pannittu solren akka...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
வனிதா டூலிப் பூக்கள் செய்ய உதவி செய்யுங்கள்.
வனி,
செய்முறை பகுதி 1 நல்ல வந்தது, ஆனால் செய்முறை பகுதி 2 இல் நான் பண்ணினது ஒரே சொதப்பல் தான், கடைசி ஸ்டேஜில் மொட்டு மட்டும் தான் இருக்கு, இதழ்கள் எங்கே என்று தெரியவில்லை. ப்ளீஸ் ஹெல்ப் மீ டு ட்ரை.
உங்க மெயில் ஐ டி என்னோட ஈமெயிலுக்கு அனுப்புங்க. இது என்னோட ஐடி haribaskar.n@gmail.com அப்பறம் நான் எப்படி செய்கிறேன் என்று உங்களுக்கு போட்டோ அனுப்பிகிறேன், தவறிருந்தால் திருத்துங்கள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
பிரேமா
இந்த 2வது பகுதியில் 4வது ஸ்ட்பெ மடிப்பை விட்டிருப்பீங்க... அது தான் இதழ் கொண்டு வரும் மடிப்பு :) கவனிச்சு இன்னொரு முறை மடிச்சு பாருங்க... கிடைச்சுடும். நான் மெயில் அனுப்பறேன், அதுக்கு முன்னாடி ஒரு முறை முயற்சி செய்துட்டு சொல்லுங்க :) ஐடி உங்களோடதா உங்கள் கணவரோடதா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டூலிப் இலை செய்வதில் சந்தேகம்
ஐயா பூ இதழ்களுடன் வந்துவிட்டது, இலையில் 11th ஸ்டேஜ் எப்படி என்று புரியவில்லை.
பொது தலமாதலால் என் மின்னஞ்சல் குடுக்காமல் என் கணவருடையது குடுத்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் என் கணவருடைய ஐடியும் நான் தான் உபயோகிப்பேன்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
பிரேமா
அட... கலக்குங்க :) சூப்பர், மகிழ்ச்சியா இருக்கு.
இலைக்கு பேப்பரை 10வது ஸ்டெப் வரை முடிசுட்டீங்க தானே... இப்போ ஒரு பக்கம் சின்ன மடிப்பும், ஒரு பக்கம் அகலமாவும் இருக்கு தானே?? இரண்டுக்கும் நடுவே முதல்ல மடிச்ச மடிப்பும் ’+’ இப்படி வருது தானே... சின்ன பகுதி உள்ளே வருவது போல் அப்படியே நீளவாட்டி மடிச்சிருக்கேன்... வேற ஒன்னுமே இல்ல. இப்ப உள்ள இருக்க சின்ன பகுதியை (தண்டு) பூ உள்ளே விடுங்க, வெளிய இருக்க பெரிய பகுதியை (இலை) வெளிபக்கமா வளையுங்க... வந்துருச்சா??
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டூலிப் பூக்கள்
இலை செய்திட்டேன், ஆனா நான் பண்ணின இலை நீங்க பண்ணின மாதிரி எக்சேட்டா இருக்கான்னு தெரியலை, ஆனால் ஒரு தண்டு ஒரு இலை வந்திடுச்சு, எனிவே சோ ஹாப்பி, என்னவரிடம் கலர் பேப்பர் கொண்டு வரும்படி சொல்லியிருக்கேன். கிடைச்சதும் பூக்கூடை பினிஷ் பண்ணிட்டு போட்டோ போடுறேன். ரொம்ப தாங்க்ஸ் நான் சில்லியா கேட்கும் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து வைத்ததற்கு.
யு நோ இங்கே ஒரு இந்தோனேசியாகாரங்க அவங்க பொண்ணுக்கு என்னை இதை சொல்லி குடுக்க சொல்லி கேட்டிருக்காங்க. சோ முதல் பூக்கூடைய அவங்களுக்கு தான் ப்ரெசென்ட் பண்ணும்னு இருக்கேன்.
உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா, நான் இருதுவரை சின்ன புள்ளைங்க செய்யுற விமானம் கூட செஞ்சது இல்லை, வெறும் கப்பல் மட்டுமே, அதும் கத்திக்கப்பல் எல்லாம் தெரியாது. சோ முதல் முறையா ஆரிகாமி பண்ணினதில் இப்ப ரொம்பவே இன்ட்ரஸ்ட் வந்திடுச்சு.
மிக்க நன்றி.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
பிரேமா
வந்துட்டுதா??? குட் குட். சந்தோஷம். :) சின்ன சின்ன சந்தேகம் போட்டோஸ் பார்த்து செய்யும்போது வர தான் செய்யும்... ஒன்னும் பிரெச்சனையே இல்லை :) அதை சொல்லி தருவதில் மகிழ்ச்சியே... ஏன்னா நீங்க அதை செய்து முடிக்குறது தான் கொடுத்த விளக்கத்தின் வெற்றி. இல்லன்னா இவ்வளவு நேரம் இதெல்லாம் செய்து படம் எடுத்து போட்டு என்ன பயன்... :)
வெரி குட்... சீக்கிரமே ஒரு பூ கூடை செய்து முடிச்சு படம் எடுங்க. அப்பறம் கிஃப்ட் பண்ணுங்க. நல்ல சொல்லி கொடுங்க... இப்படி தான் எதிலும் முதலடி வைக்கணும் :) வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா!
வனிதா மேடம்,
இந்த மாதிரி எல்லாம் என்கிட்டே நீங்க சொல்லவே இல்லை...
போங்க உங்க பேச்சு கா :(
P.S:
======
எடிட் செய்வது இல்லை என்று புது சபதம் எடுத்து கொண்டிருப்பதால், இங்கேயே இதையும் சொல்ல வேண்டிய கட்டாயம்...
பிரேமா... சும்மா தான் சொன்னேன்.. தப்பா எடுத்துக்காதீங்க... வனிதா மேடம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க(ன்னு ஒரு நம்பிக்கை :P)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
அடடா... கா விட்டாச்சா?? கதைக்கு ட்ரிகர் கிடைச்சுடுச்சா? சந்தோஷம்... சீக்கிரம் கதை எழுதுங்க :)
அது சரி... //இந்த மாதிரி எல்லாம் என்கிட்டே நீங்க சொல்லவே இல்லை...// - எந்த மாதிரி?? என்ன சொல்றீங்க?? எனக்கு புரியல... ;( விளக்கம் ப்ளீஸ்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா!!!!
பிரேமாக்கு கொடுத்த motivation talk தான்... என்கிட்டே இப்படி எல்லாம் நீங்க சொல்லவே இல்லையே....
இது எல்லாம் சின்ன ட்ரிகர்... இதை எல்லாம் வச்சு எப்படி கதை எழுதுறது :)
ஆனால் அடுத்த கதை உங்களை வச்சு தான் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
அடடா... இப்படிலாம் இருக்கா?? ;) என் பதிவில் கூட வித்தியாசம் இருக்குன்னு இப்ப தான் தெரியுது :) ஹிஹிஹீ.
என்னை வெச்சு கதையா?? என்னை வெச்சு காமடி கீமெடி பண்ணலயே??? ;(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanitha akka
Hai akka!
How are you? Naan rombave try pannen akka. but enala madikka matumthan mudinthathu. pls eanaku nenga entha flowers seiratha vedio eduthu enoda mail id ku anupurengala akka pls........... romba asaya eruku etha pannanumnu pls help panrengala akka. ennoda mail id raji.rpl2005@gmail.com.
thanks akka
ராஜி
சாரிங்க இப்ப தான் உங்க பதிவை பார்க்கிறேன். இங்க இது போல் மெயில் ஐடிலாம் குடுக்காதீங்க, பொது தளம் எல்லாரும் பார்ப்பாங்க, பாதுகாப்பிருக்காது. நான் போட்டோவே ஒரு கையில் செய்துகிட்டே ஒரு கையில் எடுக்கணும் ;) இதுல எங்க வீடியோ எடுக்க? ரொம்ப கஷ்டங்க. ரொம்ப சாரி ராஜி. நீங்க இதன் வீடியோ நெட்ல தேடி பாருங்களேன், கிடைக்கும் கண்டிப்பா. :) கோவிக்காதீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா