சோயா கோஃப்தா கறி

தேதி: July 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கோஃப்தா செய்ய:
வெள்ளை கொண்டக்கடலை - 2 கப்
சோயா சன்க்ஸ் - 10
கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
மல்லி இலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 4 தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
கிரேவி செய்ய:
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
புதினா - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரக தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும். ஊற வைத்த கடலையை நன்கு சாஃப்டாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் சோயாவை சுடு நீரில் போட்டு எடுத்து வைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் கோஃப்தா செய்ய கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, சிறிதளவு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.
வாசம் அடங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் எல்லா பொடி வகைகளையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பொரித்து வைத்துள்ள கோஃப்தாவை சேர்க்கவும்.
எட்டு முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சோயா கோஃப்தா கறி ரெடி. சப்பாத்தி, பூரிக்கு சரியான சைட் டிஷ்.

நான் இங்கே சேர்த்திருப்பது சோயா க்ரான்யுல்ஸ். சோயா இல்லையென்றால் ஒரு உருளையை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். உருண்டையாக பிடித்து பொரிக்கும் போது மிதமான தீயில் பொரிக்கவும். அடிக்கடி கிளறாமல் இருந்தால் உடையாது. கோதுமை சேர்த்திருப்பதால் பொரிக்கும் போது உதிர்ந்து போகாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் தான் இன்னைக்கு முதல் பதிவு.

லாவண் எப்படி இருக்கீங்க?பசங்க நலமா?நான் இரண்டு மாசம் வெக்கேஷனுக்கு இந்தியா போயிருந்தேன்.அதான் அறுசுவை பக்கம் வர முடியவில்லை.வந்து சில நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் வேலை காரணமாக அறுசுவையில் பதிவிட முடியவில்லை.ஆனால் தினமும் பார்ப்பேன்.இன்று கண்டிப்பா பதிவு போட்டே ஆகணும் என்று வந்துட்டேன்.

நான் சப்பாதிக்கு என்ன சைட் டிஷ் பண்ணனும் என்று நினைச்சுட்டு இருந்தேன் நீங்க கொடுத்துடீங்க.சூப்பர்.கொண்டைக்கடலை இல்லாமல் சோயா உருளை சேர்த்து செய்யலாமா.

உங்களுடைய பஞ்சாபி சோலே கறியும் சூப்பர்.அதுக்கு இங்கேயே பதிவு கொடுத்துட்டேன்.அதுவும் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.இன்னும் வித்தியாசமான குறிப்பு கொடுத்து அசத்துங்கள்.

Expectation lead to Disappointment

பார்த்ததுமே தெரிகிறது எவ்வளவு டேஸ்டா இருக்கும்ன்னு...எங்க வீட்டுல டெய்லி சப்பாத்தி செஞ்சாலும் பரவால்ல ஆனா சைட்டிஷ் மட்டும் புதுசு புதுசா இருக்கனும்...கண்டிப்பா இன்னைக்கு இதை ட்ரை பன்னிட வேண்டியதுதான்..நன்றி லாவண்யா..

அன்புடன்
zaina.

அன்புடன்,
zaina.

நல்ல வகை... இது போல் சிலர் செய்வது ஒரு மாதிரி நொத நொதன்னு இருக்கும், இது ரொம்ப நல்லா வந்திருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன். முடிஞ்சா இன்னைக்கு இரவே செய்துடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா,
இது போலே சிக்கன் கொண்டு செய்வதுண்டு..
pantry -இல் சோயா சந்க்ஸ் கொஞ்சம் இருக்கு..
இப்போ செய்துடலாம் லிஸ்டில் நிறைய இருக்கு..
செய்யத்தான் நினைக்கிறேன்..செய்யாமல் இருக்கிறேன்...
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவி கோஃப்தா அட்டகாசமா இருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கடைசி படம் சூ...ப்பர் லாவி. ;))) பெரூ.. சா மூக்கு, மீசைல்லாம் வைச்சு கலக்குது. ;) ஏதாச்சும் கார்ட்டூன் காரக்டரா!! இல்ல சும்மா பண்ணினீங்களா?

‍- இமா க்றிஸ்

நான் கோப்தா செய்யும் போது எண்ணெய் அதிகம் குடிக்கிறது. அது எதனால் என்று யாராவது சொல்லுங்க pls. i am going to try this recepie today so that asking.reply me.

லாவண்யா,
சென்ற வெள்ளி உங்கள் சோயா கோஃப்தா கறி செய்தேன்.. ரொம்ப அருமையாக இருந்தது... சூப்பர் டேஸ்ட்ங்க... :-)

மன்னிக்கவும் அன்றே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன்.. மிஸ் செய்து விட்டேன்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)