இங்கே ஆங்கில / தமிழ் துப்பறியும் தொலை காட்சி தொடர்கள் பார்ப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா?
விசாரணை, Murdoch mysteries, Midsomer murders, Agatha Christie(Hercule Poirot, Miss Marple), Sherlock holmes, CSI, Monk, Numbers இப்படி ஏதாவது?????
இப்போது ஏதேனும் புதிய சீரியல் இருந்தாலும் சொல்லுங்கள்... இது போல தொடர் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது... நன்றி...
தொலை காட்சி தொடர்.........
மேலே சொன்னது போல் இப்போது ஏதேனும் புதிய தொடர் இருந்தாலும் சொல்லுங்கள்... இது போல தொடர் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது...
ரொம்ப போர் அடிக்கிறது :(
நன்றி...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
இதுக்கு முன்னாடி CSI பார்த்திருக்கேன். இப்ப இல்ல. ரீசண்ட்டா நண்பர் ஒருவர் தந்து Sherlock holmes படம் 2 பார்த்தேன். ஒன்னும் சூப்பர் படமில்லை... நாட் பேட் ரேஞ்ச் தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா...
Game of shadows பார்த்தீங்களா???? நான் இன்னும் பார்க்கலை... நம்ம ஊரில ஏதோ ஒரு சேனல்ல பழைய Sherlock Holmes சீரீஸ் போடுவாங்க ரொம்ப நல்லா இருக்கும்...
உங்களுக்கு CSI பிடிக்குமா? ஆச்சர்யமா இருக்கு :) நீங்க டி வி, படம் எல்லாம் பார்க்க மாட்டீங்கன்னு நினைச்சேன் :)
:)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
பிடிச்சுலாம் பார்த்ததில்லை... சிரியாவில் அது ஒன்னு தான் பார்க்க முடியும், பார்த்தேன். டிவி பார்க்க மாட்டென்னுலாம் இல்லைங்க... சீரியல்ஸ் தான் பார்க்க மாட்டேன். நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பது உண்டு. ஹீரோ ஹீரோயின் டைரக்டர்ன்னு எல்லாம் அத்துபடியா வெச்சிருப்பார் எங்க ஆள்... அவர் கூட நானும் பார்ப்பேன். சில படம் புரியும், சில படம் புரியாது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹாய் நான்யும் c .s .i பார்பின் அது மட்டும் இல்ல n .c . i .s தான் என் fav . நான் எல்லாம் c .s . i யும் பார்பின் உங்களுக்கு எது புடிக்கும்
:) புரியாத படம் கூட
:) புரியாத படம் கூட பார்ப்பீர்களா? சரி சரி நீங்க ரொம்ப நல்ல வைப் தான்.... :)
நானும் கல்லூரி நாட்களுக்கு பின் பொதுவாய் தொடர்கள் பார்ப்பதில்லை... ஆனால் கடந்த சில மாதங்களாக போர் அடிக்கும் போது இரண்டு தொடர்கள் பார்ப்பேன்... ஒன்றை திடீரென முடித்து கடுப்பேற்றினார்கள், மற்றொன்றை முடிக்காது இழுத்து கடுப்பேற்றுகிறார்கள் :)
சரிங்க மேடம், நான் போய் டென்னிஸ் விளையாட போகிறேன்... என் பிரெண்ட் வரேன்னு சொல்லி இருக்காங்க... முடிந்தால் 1 - 1.5 மணி நேரம் கழித்து இன்று பேசுவோம்.... எதற்கும் உங்களுக்கு 'அட்வான்ஸ்' இரவு வணக்கங்கள் :)
(நாங்க எல்லாம் சொல்லிட்டு தான் போவோம் :p)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)