எப்படி 5 மாத குழந்தையை 6 மணி நேரம் பிரிந்து பரிச்சை எழுதுவது ?

தோழிகளே,

என் குழந்தைக்கு, 6 மாதத்திற்கு பிறகு தான் மற்ற உணவுகள் கொடுக்கவேண்டுமென்று டாக்டர் சொல்கிறார் ஆனால் அவளுக்கு இப்போழுது 5 மாதம் தான் ஆகிறது.

நான் ஒரு 6 மணி நேர பரிச்சை எழுதவேண்டியுள்ளது. அவள் இப்பொழுது தாய் பால் தான் குடிக்கின்றாள்.

இந்த 6 மணி நேரம் எப்படி அவளை விட்டு விலகி பரிச்சை அறையில் இருப்பது என்று எனக்கு புரியவில்லை. அவளை எப்படி பசியாற்றி அழுகாவிடாமல் நானும் என் கணவரும் சமாளிக்கபோகின்றோமென்று தெரியவில்லை. கவலையாகயிருக்கின்றது. வ்ழி தெரிந்தால் கூறுங்கள், உடனடியாக.

நன்றி

இராஜலெச்சுமி

ஒன்னும் சிரமம் இல்லைங்க. தாய்பால் ஸ்டெரிலைஸ்டு பாட்டிலில் எடுத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணலாம். கரக்ட்டா நீங்க பரிட்ச்சைக்கு உள்ளே போகும் முன் குழந்தையை ஃபீட் பண்ணுங்க. நல்லா தூங்க வைங்க. பரிட்சைக்கு போங்க. எப்படியும் குறைந்தது 2 மணி நேரம் தூங்குவாங்க. மீண்டும் முழிச்சு அழும்போது அவரிடம் உள்ள ஸ்டோர் பண்ண பாலை கொஞ்ச நேரம் வெளியே எடுத்து வெச்சிருந்து கொடுக்க சொல்லுங்க. மீண்டும் எப்படியும் 3 மணி நேரம் வரை தாக்கு பிடிக்கும். முடிஞ்சா ஸ்டோர் பண்றது 2 பாட்டிலில் ஸ்டோர் பண்ணுங்க. 6 மணி நேரம் பிரெச்சனையே இல்லைங்க. பயப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒன்னும் கஷ்டம் இல்ல பா, குழந்தைக்கு தேவையான பாலை breast pump பயன்படுத்தி எடுத்து வச்சுருங்க அல்லது உங்கள் குழந்தை formula குடிக்கும் பழக்கம் இருந்தால் பிரச்சனையே இல்ல, தாய்ப்பால் மட்டும் தான் என்றாலும் பாட்டிலில் எடுத்து உங்கள் கணவரிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள், தாய்ப்பாலை 4 மணி நேரம் வரை ரூம் temperature ல் வைக்கலாம் fridge ல் 24 மணி நேரம் வரை வைக்கலாம், freezer ல் 3 மாதம் வரை வைக்கலாம். இது என் குழந்தை மருத்துவர் சொன்னது தான்..., அதனால் நீங்கள் இரண்டு முறையாக எடுத்து வைத்து கொடுக்கலாம்., ஆனால் இதிலும் ஒரு பிரச்னை இருக்கிறது உங்கள் குழந்தைக்கு பாட்டிலில் குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்படி இல்லனா அதுக்கு கொஞ்சம் பழக்கப் படுத்துங்க, ஏன்னா சில குழந்தைகள் bottle குடிக்க சிரம படுவாங்க, என் பையனுக்கும் 4 மாதம் தான் ஆகுது, அவன் bottle ல் பால் குடிக்கவே மாட்டான், இப்பதான் 1 வாரமா நான் பாட்டிலில் கொடுத்து பழக்கி வச்சுருக்கேன், நீங்களும் முயற்சி செய்து பாருங்கள், தேர்வுக்கு வாழ்த்துக்கள்!!! ஆனால் 6 மணி நேரம்!!! என்னப்பா எழுத போறீங்க !!! :) :) :)

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்