தேதி: July 7, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முழு பூண்டு - 2
தக்காளி - 3
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் - தாளிக்க
பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை சிறியதாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பிரவுன் நிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்றே வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் பொரித்து வைத்திருக்கும், பூண்டு + இஞ்சியை சேர்த்து கிளறவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் ஆன பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

தக்காளி குழைந்து வெந்த உடன், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இந்த பூண்டு தொக்கு, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்திற்கும் ஏற்றது. குழம்பாக வேண்டுமென்றால், இறுதியில் சற்றே தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இந்த முறையில் பூண்டு தொக்கு செய்யும் போது புளி சேர்க்க வேண்டியதில்லை.
Comments
பிந்து
பூண்டு தொக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க வேறு மாதிரி செய்வோம். இனிமேல் இது மாதிரி ட்ரை பண்ணிப் பார்ப்பேன். வாழ்த்துக்கள்
Bindu akka... Garlic thokku
Bindu akka... Garlic thokku nallaa iruku... Idhu unga first kurippa? Presentation nallaa iruku akka...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
பிந்து மேம்
பூண்டு தொக்கு குறிப்புகள் ரொம்ப நல்லாயிருக்குங்க . படங்களும் சூப்பரா இருக்கு .அட்டகாசமான குறிப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் மேம் :-)
நட்புடன்
குணா
பிந்து!!!
முதல்ல பேரை பார்த்துட்டு கீழ போயிட்டேன்... டக்குன்னு “பிந்து”???? அப்படின்னு மண்டைக்குள்ள லைட் அடிச்சுதா... மீண்டும் மேல போய் பார்த்தா... ஆமா!!! பிந்துவே தான்!!! நம்ப முடியவில்லை.... முடியவே முடியாதுன்னு அடம் பிடிச்சுட்டு இப்போ இவ்வள்வு அருமையா ஒரு குறிப்பு... அழகான படங்கள். வாழ்த்துக்கள் பிந்து. :) இன்னும் பல குறிப்புகள் கொடுக்க இப்பவே வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி :)
(^_^)
குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவிற்கு மிக்க நன்றி :)
இது முழுக்க முழுக்க மிஸ்டர் பிந்து செய்து, படம் பிடித்தது. குறிப்பை தமிழில் அடித்து அனுப்பியது மட்டும் நான் :). சில விட்டு போன குறிப்புகள்:
1. இது இல்லத்தரசிகளுக்கும் பயன்படும் ஆனால் முக்கியமாக பேச்சலர்ஸ்க்கு மிகவும் பயன்படும். பூண்டை சிறிதாக கட் செய்ய கஷ்டமாக இருந்தால் வெறும் தோலுரித்து மட்டும் கூட பயன்படுத்தலாம்.அதுவும் கஷ்டமாக இருந்தால் அப்படியே கூட பயன் படுத்தலாம் (இது பேச்சலர்ஸ்க்காக சொல்லப் பட்டது :)).
2. தண்ணீர் சேர்க்காது செய்வதால், ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
3. எங்கள் வீட்டு மிளகாய் தூள் சற்றே காரம் அதிகம் என்பதால் இங்கே ஒரு தேக்கரண்டி என்று கொடுத்திருக்கிறேன், உங்களுக்கு தேவைக்கேற்ப மாற்றம் செய்துக் கொள்ளவும்.
4. பூண்டு மிகவும் குழைந்து விடுவதால், இந்த தொக்கில் கடிபடாது :)
இந்த முதல் குறிப்பை என்னுடைய மானசீக குருக்கள், வனிதா + இளவரசி + ஸ்பெஷல் 'மேடம்' கவிசிவாவிற்கு சமர்ப்பிக்கிறேன் :)
நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
கவுதமி....
கவுதமி, என்னுடைய பெயரில் வெளியாகும் சமையல் குறிப்பை பார்த்து முதல் பதிவிட்டது நீங்கள் தான்... கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்வேன் :) மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
நன்றி நித்யா....
நன்றி நித்யா.... ஆமாம் இது தான் முதல் குறிப்பு :)
நீங்கள் எனக்கு பேஸ்புக்கில் பிரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி இருக்கிறீர்களா என்ன? கடைசி பெயர் மாறி இருப்பதால் கேட்கிறேன்...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
குணா :)
மிக்க நன்றி குணா :) இப்போதே இதை எல்லாம் செய்து பழக்க படுத்தி கொள்ளுங்கள்... பிற்காலத்தில் கட்டாயம் உதவும் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
நன்றி வனிதா மேடம் :)
நன்றி வனிதா மேடம் :)
சிறிது நாளுக்கு முன், நீங்கள் அறுசுவைக்கு குறிப்பு அனுப்புவது பற்றி சொன்ன போது, சற்றே எதிர்மறையாக பதில் சொன்னேன் அதற்கு ஈடு செய்ய தான் இந்த அவசர சமையல் குறிப்பு :)
மன்னிப்பு கேட்பது, தவறுக்கு ஈடு செய்வது, நன்றி சொல்வது, இதற்கெல்லாம் பிந்துவிற்கு நிகர் பிந்து தான் :) (என்ன செய்வது நானே சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கிறது :D)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
ஓ... இளவரசி, கவிசிவாலாம் ட்ரெயினிங்கா... அவங்ககிட்டலாம் நாங்க நிக்கவே முடியாது :) அவங்க எக்ஸ்பர்ட்.
ஆத்துக்காறர் சமையல் வந்தாச்சு... அடுத்து உங்களோடது தானே??? :) கலக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிந்து
பிந்து
முதல் குறிப்புக்கு வாழ்த்துகள். மிஸ்டர் பிந்துவிற்கும் வாழ்த்துகள்.
சுவையான குறிப்பு.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
பிந்து மேம் :-)
// இப்போதே இதை எல்லாம் செய்து பழக்கப்படுத்தி கொள்ளுங்க , பிற்காலத்தில் கட்டாயம் உதவும் //
ஹி.ஹி.ஹி. :-) ஆஹா பிந்து மேம் சொன்னா சரியாத்தான் இருக்கும் . பழகிக்கிறேனுங்க :-)
நட்புடன்
குணா
நன்றி மஞ்சுளா மேடம் :)
மிக்க நன்றி மஞ்சுளா மேடம். என் கணவரிடமும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பூண்டு தொக்கு ....ரெம்ப
பூண்டு தொக்கு ....ரெம்ப அழகாயிருக்கு முதல் குறிப்பே இவ்வளவு தெளிவான படங்கலோடு கொடுத்துருகிங்க வாழ்த்துகள் எனக்கும் பூண்டு ரெம்ப பிடிக்கும் செஞ்சு பாக்குறேன்.
மஹாசிவா....
நன்றி மஹாசிவா.
கட்டாயம் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
ஹாய் பிந்து பூண்டு தொக்கு சூப்பர் கண்டிப்பா ட்ரை பன்னுரேன்..
அன்புடன்,
zaina.
ஜைனா :)
மிக்க நன்றி ஜைனா :) செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க :)
எங்கே உங்களை ரெண்டு நாளா காணும் ?:)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பூண்டு தொக்கு...
வாழ்த்துக்கள் உங்கள் முதல் குறிப்புக்கு.. நிறைய பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள். ஒரு சின்ன சந்தேகம் கடைசி படத்தில் தொக்குக்கு பக்கத்தில் கோக் எதற்கு???? :P
வாழ்க வளமுடன்
நன்றி அபி...:)
நன்றி அபி...:)
அந்த புகை படம் ஒரு பைனல் டச் :) என் கணவருக்கு பிடித்த தொக்கு பக்கத்தில் எனக்கு பிடித்த கோக் + என் மகளுக்கு பிடித்த பூ :)
சிம்பாலிக்கா எங்க குடும்ப போட்டோ.... :D
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பூண்டு தொக்கு ரொம்ப நல்ல
பூண்டு தொக்கு ரொம்ப நல்ல இறுக்கு
இதுவும் கடந்து போகும்
பிந்து
சாரி பிந்து..நைட்டு லேட் ஆகிட்டதுனால பதில் சொல்லாம போய்ட்டேன்...நான் இரண்டு நாளா கானாமலாம் போகலப்பா..அருசுவைல தான் இருக்கேன் சைலென்ட்டா...
அன்புடன்,
zaina.
பூண்டு தொக்கு
குறிப்பு சூப்பர் பிந்து. பார்க்கவே நாவூறுது.
- இமா க்றிஸ்
பூண்டு தொக்கு
கலர்புல்லா கலக்கலா இருக்கு பூண்டு தொக்கு..
வாழ்த்துக்கள்!!!
பிந்து
பிந்து
முதற்குறிப்பு தந்திருக்கீங்க.ரொம்ப அருமை
அப்படியே தொடர்ந்து தந்திட்டே இருங்க
பிந்து
அன்பு பிந்து,
ஆஹா, அழகான புகைப்படங்கள்!
சிற்றுண்டி, சாத வகைகள் எல்லாவற்றுக்கும் மேட்ச் ஆகிற மாதிரி ஒரு நல்ல குறிப்பு.
பாராட்டுக்கள் பிந்து
அன்புடன்
சீதாலஷ்மி
பூண்டு தொக்கு
பிந்து, சமையல் களம், எழுத்து களம்னு விடாம கலக்கிட்டு இருக்கீங்க குறுகிய காலத்தில். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் உங்களின் அறுசுவை பணிகள் சுடர்விட்டு ஒளிர வாழ்த்துகிறேன்.
பூண்டு தொக்கு வெங்காயம் சேர்த்து செய்திருப்பது வித்தியாசமான முயற்சி. செய்து உடனே சாப்பிட கையும், வாயும் துடிக்குது. சீக்கிரமே செய்துட்டு சொல்லிடறேன். வாழ்த்துக்கள் பிந்து :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நன்றி...
நன்றி கவிதா தயாநிதி :)
ரொம்ப நன்றி இமா :) சுவையும் நன்றாக இருக்கும் :) எனக்கே மிகவும் பிடித்திருந்தது :D
மிக்க நன்றி சுபா :)
கட்டாயம் முயற்சி செய்கிறேன் நிகிலா :) பதிவிட்டதற்கு மிக்க நன்றி :)
உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி சீதாலஷ்மி மேடம் :)
கல்பனா, உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :) கட்டாயம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.... மிக்க நன்றி :)
உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் :) இந்த முறை பட்டி மன்றம் அமர்களப்படும் என்று நம்புகிறேன் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
மிஸ்டர்.பிந்து
தொக்கு சூப்பர் சார்....அவங்களோட நல்ல சமையலில் இருந்து தப்பிக்க நீங்க எடுத்திருக்கும் இந்த மிக நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்:)
பிந்தும்மா,சூப்பர் தொக்கு..சாப்பிடறது மட்டும்தான் நீங்களா..;)
இனிமே நீங்களே செஞ்சு போடுங்கோ...நாங்க எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கறோம்...
அப்புறம் மானசீக குருன்னு என்னையல்லாம் சேர்த்து கூட்டாஞ்சோறுக்கே களங்கத்த ஏற்படுத்தக்கூடாது...மிக மிக குறைவா குறிப்புகள் கொடுத்துள்ள என்னை கூட்டாஞ்சோறின் மகாராணிகள் கூட சேர்த்துருக்கீங்களே..இது நியாயமேயில்லை...
வனிவேற இதுல நீங்க சொன்னது கேட்டு சுண்டல் சுடறாங்க பாருங்க;)
மிஸ்டர் அண்ட் மிஸஸ் பிந்து... நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள் ...
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
பூண்டு தொக்கு மிக மிக அருமை
பூண்டு தொக்கு மிக மிக அருமை ...படங்கள் ''பளிச் பளிச் ''...
கடைசி (குடும்ப) படத்திற்கான விளக்கம் சூப்பர் ...வாழ்த்துக்கள்!!!
நன்றி இளவரசி மேடம் :)
:) என்னங்க இளவரசி மேடம் இப்படி சொல்லிட்டீங்க... ஒவ்வொரு ஆணின் சின்ன / பெரிய வெற்றிக்கு பின்னும் ஒரு பொண்ணு வேணும்ங்க....
நான் சொல்லாமல் அவர் தொக்கு எல்லாம் செய்யனும்னு நினைப்பாரா? :P
ஆனால் நிஜமாகவே காரமாக சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகி இருந்ததால், ரொம்பவே சுவையாக இருந்தது... அதுவும் யாராவது செய்துக் கொடுத்தால் எல்லாமே சுவையாக தானே தெரிகிறது :D
நீங்கள் சொன்ன பிறகு முயற்சி செய்யாது இருப்பேனா? கட்டாயம் குறிப்பு அனுப்ப முயற்சி செய்கிறேன் :)
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது :) ஏதோ ஆல்-இன்-ஆல் மேடம்க்கு ரொம்ப போட்டி கூடாதுன்னு நீங்க அமைதியா இருக்கீங்கன்னு தெரியும் :) ஆனாலும், மானசீக குரு என்று சொன்னதற்கு சமையல் மட்டும் காரணம் அல்ல.... வேறு சில காரணங்களும் உண்டு... மனதில் ஒரு கேள்வி எழுந்த உடன், சட்டென்று கேட்டு அறிந்துக் கொள்ளும் அந்த straight forwardness கூட ஒரு காரணம் தான் :)
குறிப்பை பார்த்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி இளவரசி மேடம் :) மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
Vibgy....
ஹாய் Vibgy,
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி :)
நம்மிடம் இருக்கும் கதை விடும் திறனுக்கு முன் இந்த படத்திற்கான விளக்கம் எல்லாம் என்னங்க...வேறு ஜுஜுபி :P
நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பூண்டு தொக்கு
பிந்து,
முதல் குறிப்பிற்கு வாழ்த்துக்கள்! பூண்டு தொக்கு கார சாரமாய் ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். விரைவில் செஞ்சுட்டு சொல்றேன். உங்க விளக்கம் + படங்கள் சூப்பர். தொடர்ந்து அசத்துங்கள்.
பட்டியில் நடுவராய் ரொம்ப அழகா கொண்டு போனீங்க. அதற்கும் என் வாழ்த்துக்கள்! இதை தாமதமா சொல்லறதுக்கு மன்னிச்சுருங்க.
அன்புடன்,
சந்திரா
பூண்டு தொக்கு
வாவ் பிந்து,
குறிப்புகள் எல்லாம் போட்டு, சமையலிலும் அசத்துறீங்க போல இருக்கு...
பூண்டு ஐடம்ஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதும் இந்த பூண்டு தொக்கு குறிப்பு படிக்கும்போதே நாக்கு ஊருது. நிச்சயம் செய்திட்டு சொல்லுறேன்.
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள் .
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
பிந்து
பிந்து சுவையான காரசாரமான பூண்டு தொக்கு கொடுத்ததற்க்கு வாழ்த்துக்கள்...
ட்ராவலுக்கு ஏற்ற தொக்கு, கண்டிப்பா சப்பாத்தியுடன் இதுதான் அடுத்த முறை ரயில் பயணத்துக்கு கொண்டு செல்லனும் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சந்திரா / பிரேமா / சுவர்ணா விஜயகுமார் :)
மிக்க நன்றி சந்திரா :) கதையை படித்து கமென்ட் சொல்கிறேன் என்று விட்டு ஆளையே காணும்?????
கட்டாயம் செய்து பாருங்கள் பிரேமா... நானே இந்த வாரம் மீண்டும் செய்யலாமென்று இருக்கிறேன் :)
மிக்க நன்றி சுவர்ணா விஜயகுமார் :) செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து அக்கா
ஒரு வழியா இதை இன்னைக்கு செய்துட்டேன். எப்பவோ செய்ய நினைச்சது, இனைக்கு நாளைக்கு தள்ளிகிட்டே போயிடுச்சு. :) குழம்பக கொஞ்சம் நீர் விட்டு தான் செய்தேன். நல்ல சுவையா இருக்கு. இன்னும் லன்ச் முடியல... செய்து சுவை பார்த்துட்டேன்... சூப்பர். இனி அடிக்கடி செய்வேன். சுவையான குறிப்புக்கு மிஸ்டர் பிந்துக்கு நன்றியை சொல்லிடுங்க ;) அதை இங்க அனுப்பி வெச்சதுக்கு உங்களுக்கு நன்றி ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
மிக்க நன்றி வனிதா :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
பூண்டு தொக்கு செய்தேன் சூப்பராக இருந்தது.அடுத்த குறிப்பு எப்பொ தரபோறிங்க?
பூண்டு தொக்கு
பிந்து,
சமைத்து அசத்தலாம் பகுதி 1-ல்தான் தெரிந்துகொண்டேன், நீங்க இப்படி ஒரு குறிப்பு போட்டு இருக்கிங்கன்னே!... :)
பூண்டு தொக்கு சூப்பரா இருந்தது. மிஸ்டர் பிந்துவிடம் வாழ்த்துக்களை சொல்லிடுங்க! அப்புறம் உங்களோட கடைசிப்படத்துக்கான /அதாங்க குடும்ப ஃபோட்டோ விளக்கம் செம சூப்பர்ர்ர்! :)
அன்புடன்
சுஸ்ரீ