தேதி: July 7, 2012
ஸ்பாஞ்ச் ஷீட் விரும்பிய நிறம்
சார்ட் பேப்பர்
கத்தரிக்கோல்
ப்ரஷ்
கருப்புநிற பேப்பரிக் பெயிண்ட்
க்ரீடம் செய்ய மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.

ஸ்பாஞ்ச் ரோஸ் செய்ய ஸ்பாஞ்ச் ஷீட்டை 15 செ.மீ நீளம், 5 செ.மீ அகலத்தில் நறுக்கி வைக்கவும். அதனை நீளவாக்கில் இரண்டாக மடக்கி அதன் வலது பக்கம் முனையை மிக சிறிதளவு மடக்கி விட்டு 3, 4 சுற்று சுற்றவும்.

அடுத்த வரிசை சுற்றும் போது ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒவ்வொரு முறையும் லேசாக முறுக்கி விட்டு சுற்றவும்.

பூ முழுவதும் சுற்றி முடிந்ததும் அதன் முனையை கடைசி சுற்றின் வரிசையை சற்று விலகி விட்டு அதில் சொருகி விடவும்.

இதேப் போல் மஞ்சள் நிறத்தில் 10 பூவும், சிவப்புநிறத்தில் ஒரு பூவும் செய்து வைக்கவும்.

சார்ட் பேப்பரை 5 செ. மீ அகலத்தில் தலையின் சுற்றளவுக்கு ஏற்ப நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அவற்றின் இருப்புறமும் கருப்புநிற பெயிண்ட் செய்து காய விடவும். அதன் இருமுனையையும் அரை இன்ச் அளவு மடக்கி விடவும்.

இப்போது அந்த பேப்பரின் மேல் க்ளூ வைத்து செய்து வைத்திருக்கும் ரோஜாவை ஒட்டவும். முதலில் வரிசையாக ஐந்து மஞ்சள் நிற ரோஜாவை ஒட்டவும். நடுவில் ஒரு சிவப்புநிற ஸ்பாஞ்ச் ரோஜாவை ஒட்டவும். கடைசியில் ஐந்து மஞ்சள் ரோஜாவை ஒட்டி முடிக்கவும்.

12 செ.மீ அளவில் எலாஸ்டிக்கை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பேப்பர் மடித்த முனையில் பின்பக்கத்தில் எலாஸ்டிக் முனையை வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். மற்றொரு முனையிலும் இதேப்போல் செய்யவும்.

ஸ்பாஞ்ச் ஷீட்டில் செய்த பூ க்ரீடம் ரெடி. மிகவும் எளிதாக செய்யக்கூடியது.

Comments
டீம்!!!
ஐய்யா... இது நவீனா குட்டிக்கு செய்ததா?? அவளுக்கு வெச்சுவிட்டு போட்டோ போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் :) வெரி கியூட். பூ ரொம்ப அழகா செய்திருக்கீங்க. நல்ல ஐடியா. க்ரேட் ஒர்க்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிரீடம்
ஆஹா! அழகா இருக்கு கிரீடம். கிரீடம் மாட்ட இங்கு யாரும் இல்லை. பூக்களை மட்டும் ட்ரை பண்றேன். டீமுக்கு என் பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
ஸ்பான்ஞ் பூ கிரீடம்
அன்பு அறுசுவை டீம்,
அழகாக வந்திருக்கு பூக்களும் கிரீடமும். விளக்கங்களும் படங்களும் தெளிவு.
பாராட்டுக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
akka romba nalla irukku idhe
akka romba nalla irukku idhe madhiri naanum pathivu panradhu eppadinu sollungale