அவசரம் குழந்தை "பபுல்கம்" விழுங்கிட்டான். என்ன செய்வது?

தோழீஸ் என் 4 வயது சுட்டிப்பையன் பபுல்கம் விழுங்கிட்டான். தண்ணீர் கொடுத்து வாமிட் பண்ண சொன்னேன் வரலைன்னு அழறான்.பின்பு வாழைப்பழம் கொடுத்துள்ளேன்.என் அப்பா அது ஒன்றும் செய்யாதுன்னு சொல்கிறார்.நான் என்ன செய்வது? அவனுக்கு வயிற்றில் ஒன்றும் பிரச்சனை வராதே? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ்.......:-((

நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஒரு முறை நானும் முழுங்கிட்டேன்... என்னை எதுவும் பண்ணலை... ஒண்ணும் ஆகாதுனு தான் நினைக்கிறேன்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

பயப்படாதீங்க ..... 5 வயசில என் தம்பியும் இதே மாதிரி விழுங்கிட்டான் ... நான்தான் கொடுத்ததே .. அம்மா என்ன ஓட ஓட அடிச்சாங்க ;) .... பயந்து போய் நீங்க செய்த மாதிரியே தண்ணி வாழைப்பழம் எல்லாம் கொடுத்தாங்க .... அவனும் வொமிட் பண்ணல .... ஆனா எல்லாரும் பயந்து போனோம் .... பிறகு அதை மறந்தும் விட்டம் ... இப்ப அவனுக்கு 23 வயசு .... எதுவும் ஆகலைங்க ... பயப்பிடாதீங்க ... இருந்தாலும் கவனமில்லாம இருக்க வேணாம் ... அனுபவம் உள்ளவர்கள் வந்து பதில் போடும் வரை காத்திருங்கள் ... இத பற்றி நல்லா தெரிஞ்ச தோழிகள் ஏதும் செய்யலாமா எண்டு சொல்லுவாங்க .. வெயிட் பண்ணுங்க ... என் அனுபவத்த சொன்னா உங்க டென்ஷன் குறையுமே எண்டு சொன்னன் .... இனி கவனமா இருங்க ....:)))))))))))))))))

கிருத்தி,ஜனனி,
மிக்க நன்றி பதிலுக்கு,கவனமாவா? இனிமே பபுல் வீட்டுக்குள் என்ன, வாசலுக்கே வரவிடமாட்டேன்ல,
4நாள் முன்பு மிட்டாய் என்று நினைத்து சென்டர் ஃபுரூட் கொடுத்துட்டோம்ப்பா,ஸ்கூல்ல இருந்து வந்து ரகளை செய்யரான்னு கொடுத்துட்டேன். மிக தப்பாபோச்சு........

நான் கூட 2 முழுங்கிருக்கேன் ;) ஒன்னும் பண்ணல. பயமா இருந்தா டாக்டரிடம் கேட்டுடுங்க. ஏன் வீணா குழப்பிகிட்டு டென்ஷனாகறீங்க? :) பயப்பட வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பபுள்கம் வாயில் ஒட்டாது. ஈரம் (எச்சில்) இருப்பதால்.வயிற்றிலும் ஒன்றும் செய்யாது.

ரேணுகா,
எனக்கு தெரிந்த வரையில் கவலை பட எதுவும் இல்லை, என்னுடைய மகளும் இரண்டு முறை பபிள் கம் விழுங்கி இருக்கிறாள். முதலில் நானும் பயந்து தான் போனேன்... போதாது என்று சுற்றி இருப்பவர்கள் வேறு ஏதேதோ சொல்லி பயமுறுத்தி விட்டார்கள் + கொஞ்சம் லெப்ட் அண்ட் ரைட் டோஸ் வேறு :D ஆனால் கூகிளில் தேடி பார்த்ததில் நாம் பயப் படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பது புரிந்தது...

இருந்தாலும் சற்றே எச்சரிக்கையோடு இருங்கள்...

என் மகள் இப்போதும் பபிள் கம் சாப்பிடுவதை நிறுத்தவில்லை... அவளே சற்று எச்சரிக்கையோடு துப்பி விடுவாள் :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Renuka akka... Konja naal munnadi discovery channel la bubble gum muzhungitta stomach la enna aagum nu oru research panni kamichanga. Adhula naalaga naalaga konjam konjama karainju kazhivoda veliyeridum nu sonnanga. But kuzhandhai enbadhala neenga oru pediatriciana consult pannidunga. Ungalukkum nimmadhiya irukum. kuzhandhai apparam bayandhu edhayum sapdama irundhira poran.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனி,நித்தி,பிந்து, மிக்க நன்றிகள்ப்பா,எனக்கு ரொம்ப பயமாகிடுத்து.அவனுக்கும் அடிதான் பாவம் அழுதான்.:-((
நேற்று டாக்டரிடம் போனில் நிலைமையயும் அவன் எப்படி இருக்கான்னும் சொல்லி நான் என்ன செய்யனும்னு கேட்டேன்.
அவர் கூலா சிரிச்சுட்டே உள்ள போயிடுச்சுள்ள ஒன்னும் பன்னவேண்டாம்.லங்ஸ்கு போனா இருமல் இருக்கும் ,உள்ள போய்டா ஒன்னும் பன்னாதுன்னுட்டார்.........இப்பதா நிம்மதியா இருக்கு.
அவர் வந்து கேட்கும்போது, இனி என்க்கு பபுல் வேண்டாம்ப்பா,மிட்டாய் மட்டும் வாங்கிட்டு வாங்கன்னு நல்லபிள்ளையா சொல்றான்பா......
மீண்டும் நன்றி தோழிகளுக்கு......

பபுல்கம் தான் நன்றி சொன்ன மாதிரி இருக்கு... “பபுல்கம் - நன்றிகள்” ஹிஹிஹீ. எப்படியோ ஒன்னும் பிரெச்சனை இல்லைன்னு உங்க மனசு அமைதியானா சரி :) ஒன்னும் ஆகாதுன்னு நாங்க அனுபவத்தை சொன்னாலும் டாக்டர் சொன்னா தானே பெத்த மனசு கேட்கும் ;) எல்லாருக்கும் அப்படி தான் இருக்கும்... இனி பபுல்கம் குடுக்காதீங்க, கொஞ்சம் வளரட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்