சிம்பிள் சிக்கன் மசாலா

தேதி: July 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
தாளிக்க:
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கசாகசா - அரை தேக்கரண்டி
கிராம்பு - ஒன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லி பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும், பின்பு கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளையும் சேர்க்க வேண்டும்
பச்சை வாசம் போகும் வரை பொடி வகைகளை நன்றாக வதக்கவும்
வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்
சிம்பிளான சிக்கன் மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் ...சூப்பர் !குக்கரில் வைத்தால் பத்தே நிமிடத்தில் செய்து விடலாம் போலிருக்கே ... வாழ்த்துக்கள் !!!

கௌதமி சிம்பிள் சிக்கன் மசாலா சிம்பிளி சூப்பர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கௌதமி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயமா சிம்பிள் சிக்கன் மசாலாதான். ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
அபி.

வாழ்க வளமுடன்

சிம்ப்ள் சிக்கன் மசாலா. நள்ளா இருக்கே நானும் இப்படிதான் செய்வேன் நள்ளா பண்ணிருகின்க வாழ்த்துகள்.

சுலபமா உடனே செய்ய கூடிய சிக்கன் மசாலா :) வாழ்த்துக்கள், படங்கள் நல்லா தெளிவா அழகா இருக்கு. அவசியம் செய்து பார்த்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் சூப்பர் ரெசிபி உடனே செய்து பாக்கிரேன்.

K. ஐஷ்வர்யா கிருஷ்னன்.