பாசிபருப்பு தோசை

தேதி: July 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (10 votes)

 

பாசிபருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சிறிய வெங்காயம் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை கொத்தமல்லி - தேவையான அளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

பாசிபருப்பை நன்கு ஊற வைக்கவும். சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்
பாசிப்பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்க்கவும்
தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்
தோசைக்கல்லை சுட வைத்து அதில் மாவை தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
சிவந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். இது நன்கு வேக வேண்டும். மிதமான தீயிலேயே சுட வேண்டும்.
சூடான சத்தான பாசிபருப்பு தோசை ரெடி.

விரும்பினால் இஞ்சி சேர்க்கலாம். கேரட், தேங்காய் போன்றவையும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சேர்க்கலாம். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான தோசை இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்தால் ஆம்லெட் போலவே இருக்கும். சூடாக சாப்பிட வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான குறிப்பு. ஈசியானதும் கூட வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நல்ல சுலபமான சத்தான தோசை :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிஜமாகவே முகப்பைப் பார்த்ததும் ஆம்லேட் என்று தான் நினைத்தேன் ....அக்கா சூப்பரான, சத்தான ,சுவையான ,ஈசியான ....குறிப்பு வாழ்த்துக்கள் !!!

பாசிபருப்பு தோசை.நல்லா செஞ்சுருகிங்க. வாழ்த்துக்கள் எனக்கு எப்பவுமே இந்த மாதரி தோசை விரும்பி சாப்டுவேன்.

ப்ரியா,

உங்க பாசிபருப்பு தோசை காலை உணவிற்கு செய்தேன், சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது... நன்றி பா...

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எளிமையாகவும், சுவையாகவும் இருந்தது!! ஆனா நீங்க சொல்ற மாதிரி சூடாக சாப்பிட்டா சூப்பரா இருக்கு!!!

வாழ்த்துக்கள்!!!

அன்பு பிரியா,

எளிமையான, சத்தான குறிப்பு. சீக்கிரமே செய்து பார்க்கிறேன்.

பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

ப்ரியா
ஈவ்னிங் செய்ய நல்லதொரு அயிட்டம்.சுலபமானதும் கூட

பிரியா ,

மிகவும் சூப்பரான குறிப்பு . இந்த மாவை அரைத்தவுடன் தோசை செய்ய வருமா அல்லது சிறிது நேரம் ஊற வேண்டுமா ?

Sukanya Muralidharan

இதுவும் கடந்து போகும்