வெள்ளரிக்காய் புளிக்கறி

தேதி: July 13, 2012

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய மஞ்சள்நிற வெள்ளரிக்காய் -1
புளி-எலுமிச்சை அளவு
அரைப்புக்கு:
தேங்காய் -அரை கப்
சின்ன வெங்காயம்-கால் கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-சிட்டிகை
சீரகத்தூள்-சிட்டிகை
மிளகு -கால் டீஸ்பூன்

தாளிக்க
எண்ணை.கடுகு,வெந்தயம்,கறிவைப்பிலை,
நீளவாக்கில் நறுக்கிய சின்னவெங்காயம்-கால் கப்


 

அரைப்புக்கு தேவையானதை நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வெள்ளரிக்காயை 1 கப் நீரில் வேகவிடவும்..
பின் பாதி வெந்ததும் புளிதண்ணீர் சேர்க்கவும்.பச்சை வாசம் போக கொதித்ததும் வெந்த காயில் அரைப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி தாளிப்புக்கு தேவையானதை தாளித்து குழம்பில் கொட்டவும்
.


இது நாஞ்சில் நாட்டில் செய்யப்படும் புளிக்கறி..இதற்கு எந்த நீர்க்காய்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.புளிப்புக்கு வேறு காயோடு மாங்காய் சேர்த்தால் புளி சேர்க்க தேவையில்லை..
இது மிகவும் திக்காகவும் இல்லாமல் மிகவும் தண்ணியாகவும் இல்லாமல் இருக்கவேண்டும்.புளிக்கறிக்கு பொதுவாக மிளகு சேர்க்கமாட்டார்கள்.நான் வாசத்திற்காக சிறிது சேர்ப்பது வழக்கம்.சுடுசாதத்திற்கு இந்த குழம்பு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை ஊற்றி கீரை தொவரனுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்