9 மாத குழந்தையின் உணவு மற்றும் எடை

வணக்கம் தோழியரே,

என் குழந்தைக்கு இப்பொழுது 9 மாதம் ஆகிறது. அவனது எடை இப்பொழுது 6 1/2 கிலோ தான் இருக்கிறான். 9 மாத குழந்தையின் சராசரி எடை என்ன ?

அவனுக்கு எப்படி உணவு கொடுப்பது.. குறிப்பாகக எந்த எந்த நேரதிருக்கு எந்த வகையான உணவு கொடுக்கலாம்..உதாரணமாக பால் சார்ந்த உணவு எந்த நேரம் கொடுத்தல் சீரணம் ஆகும்.ஒரு நேர பட்டியல் இட்டு தாங்க plz ஒரு மாதத்திற்குள் எடை அதிகரிக்கும் உணவு முறை சொல்லுங்க. அவன் இப்பொழுது தான் தவழ try பண்ணுகிறான்.

இட்லி தோசை போன்ற உணவுகளை துப்பி விடுகிறான். மீண்டும் சிறிது நேரம் கழித்து கொடுத்தால் வாந்தி எடுத்து விடுகிறான். Dr இடம் கேட்டால் உணவு முறைகளை மாற்றினால் போதும் என்று கூறுகிறார்கள். plz உதவி செய்யுங்க தோழிகளே ....

என் குழந்தை 9 மாதத்தில் 9kg இருந்தான்.
8 AM - சத்து மாவு கஞ்சி
10.30 AM - Cerelac
1 PM - பருப்பு சாதம்
3.30 PM - any fruit mashed apple/Banana
6PM - Biscuit/ Rusk with milk
8.30PM - இட்லி or தோசை
Nalla mixie la adichu kodungu. En payan oru chinna piece kooda sapada mattan. vomit pannuvan.
Nalla paste mathiri kodutha than sapaduvan.

Hai, hru, baby ku cerelac kodunka. Mukkiyama nalla thookkam venum. Mrg food idli kodukkalam, milk or water la, sugar mix panni kodukalam.. Vomit panna vittudunka. Force pannatheenka. 2 days kalichu try pannunka. Cerelac kodunka. Afternoon, konjam rice, konjam paruppu, chinna piece garlic, carrot, potato, and salt pottu paruppu satham seithu, mixiela adichu kodunka. Apple tholi eduthuttu mixiela adichu kodukalam. Orange m mixie la adichu vadikatti kodukalam. Biscuits kodukalam milk or water la mix panni. Carrot juice kodukalam. Pappa ku nalla thookkam venum. Niraiya water kodunka. Food kodukurappo vilaiyattu kavanathula kodunka. Illana sapda mattanka, Adam pidippanka. Ithellam Enoda friend Enoda baby ku sonathu. Take care. Mother feeding must, Illana formulae kodukareenkala. Doctors kittayae enna kodukalam nu ketta solluvanka. Doctoral consult pannittu, egg boil panni , white egg kodukalam, athu than iPo digest Akum, paruppu sathathoda chinna piece white egg pottu mixiela adichu kodukkalam. Rice la carrot, tomato starting la ovvonna kodunka, ni8 timela digest aka late Akara food kodukatheenka. Mixie la adichapuram half an hour kalichu pappaku kodukka koodathu, Neenka baby ku Vera ethavathu speciala kodutha solunka, Nama share pannikkalam. Oru naal sapduvanka, oru naal sapda mattanka. Ok pa. Take care

எல்லா புகழும் இறைவனுக்கே

Hai, Enoda baby ku 7 months akuthu, avanuku sathu mavu kanji kodukalam a. Athu eppadi prepare pannanum nu solreenkla please

எல்லா புகழும் இறைவனுக்கே

மிக்க நன்றி தோழி உமா .நான் முயற்சி செய்கிறேன் ...

Fine Nisa...
தங்கள் ஆலோசனைக்கு நன்றி Nisa ..

நம்ம விளையாட்டு காட்டினாலும் அவன் சாப்பிட்ட பின்னர் வாந்தி எடுக்கிறான்... எனக்கு என் அத்தை தான் சத்து மாவு செய்து கொடுத்தார்கள் .
அவன் ஆப்பிள் ஆரஞ்சு துளி கூட Taste பண்ண மாட்டேங்கிறான்.நான் எந்த Fruits ம் அவனுக்கு கொடுக்க முடியல...திரும்ப Try பண்ண போறேன்...

நன்றி தோழிகளே

9 மாத குழந்தை இரவு இட்லி சாப்பிடமாட்றா..அவளுக்கு இட்லி சுத்தமா புடிக்கல..2 வாய் குடுக்கதுக்குள்ள அம்புட்டும் கக்கிர்றா..இரவில் செமிக்க கூடிய உணவு சொல்லுங்கல் தோழிs.காலையிலும் இட்லி சாப்பிடமாட்றா...இப்பதைக்கு இட்லி வேண்டாம்னு நினைக்கிறேன்..வாரம் வாரம் இட்லி தந்து முயறசி செய்தும் சாப்பிட வில்லை....எனக்காக உதவுங்க plz

இனி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை திட உணவு தரலாமா..பாப்பா பாட்டில்ல பால் சுத்தமா குடிக்க மாட்சக்கா... அதனால் தான் வருத்தமா இருக்கு.. பகல்ல எதாவது கொசுத்துக்கலாம்.. ஆனால் இரவு 8 அல்லது 7 மணி அளவில் செமிக்க கூடி. உணவு இட்லி தோச தவிர்த்து எனன தரலாம்

குழந்தையின் சராசரி எடை:
9மாதம்
ஆண் பிள்ளை என்றால் 7,5 கிலோவிலிருந்து 11,5 கிலோ
பெண் பிள்ளை என்றால் 7 கிலோவிலிருந்து 11 கிலோ ‍
குறைந்தது 8 கிலோவாது இருக்கும்.
உயரம் : 70 செ.மீ
இது நாட்டுக்கு நாடு.பிள்ளைக்களுக்கு பிள்ளை வேறுப்படலாம் என்று நினைகிறேன்.

இது பிள்ளைக்கு பல் முளைக்கும் வயது. எதாவது கடித்து சாப்பிட‌ நினைகும்.பிஸ்கெட் கொடுக்கலாம். அதன் கைகளிலே கொடுத்து சாப்பிட‌ சொல்லுங்கள். ஆனால்,தனியாக‌ விடாமல் அருகிலேயே இருங்கள்.

காலையில் 7 மணி அளவில் பால் செரியால் கரைத்து கொடுங்கள்.
7.30 மணிக்கு தூங்க‌ விடுங்கள்.
9.30 மணிக்கு குளிக்க‌ வைத்து
10 மணி‍க்கு 1 பிஸ்கெட் கொடுக்கலாம்.
11.30 அல்லது 12 மணிக்கு மதிய‌ சாப்பாடு கொடுக்கலாம்.
மதிய‌ சாப்பாடு: காய்க்கறி,நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக் இருந்தால்,மீன்,கறி,அவித்த‌ முட்டை பாதி,பழங்கள் கொடுக்கலாம்.
12.30 அல்லது 1 மணிக்குள் தூங்க‌ விடுங்கள்.
2 மணி நேரம் தூங்கினால் போதும்.
3 மணிக்கு எங்காவது வாக்கிங் கூட்டி போங்கள். வெளி உலகத்தை பிள்ளைகள் பார்க்க‌ வேண்டும். வெளிக்காற்றும் பட‌ வேண்டும்.
அப்படியே பிஸ்கெட் அல்லது பழம் கொடுங்கள். அது வாழைப்பழமாக‌ இருக்கலாம். அல்லது ஏதாவது க்டினாமானபழத்தை( ஆப்பிள்,பேரிக்காய்..) அரிந்து வேக‌ வைத்து அரைத்துக்கொடுக்கலாம்.சர்ககரை வேண்டாம். 25கிராமிலிருந்து 50 கிராம் அளவில் கொடுக்கலாம்.
நான் தயிர் கூட‌ கொடுத்து இருக்கிறேன்.

இரவு 7 அல்லது 7.30 க்கு சாப்பாடு செரியால் அல்லது காய்கறி சூப்.காய்கறி சூப் என்றால்,உதாரணத்திற்கு உருளைக்கிழங்கும் கேரட்டும் போட்டு வேகவைத்து அரைத்து கொடுக்கலாம். கட்டியாக‌ இருக்கக்க்கூடாது, கொஞ்சம் தண்ணீராக‌ இருக்க‌ வேண்டும் அதாவது கஞ்சிப்பதம்.

தினமும் கொடுத்ததையே திருப்பி திருப்பி கொடுக்க‌ வேண்டாம். ஒரு மெனு லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள். அதன் படி கொடுக்கலாம்.
இட்லி, இடியாப்பம்,ஆப்பம், பருப்பு சோறு, மீன் போட்டு பிசைந்த்த‌ சோறு, கறியும் காயக்கறிகள் வேக‌ வைத்து அரைத்த‌ ப்யூரே இதுப்போல் கொடுங்கள்.
இரவில் சீக்கிரமாக‌ செரிக்கக்கூடிய‌ உணவைக்கொடுங்கள்.
செரிக்காத‌ காய்கறிகளோ,முட்டை,மீன்,கறியோ கொடுக்காதீர்கள்.
பிள்ளைக்களுக்கு உணவு கொடுக்கும் போது ஒரே இடத்தில் உட்கார‌ வைத்து கதை சொல்லிக்கொண்டோ,சின்னப்பிள்ளைகளுக்கான‌ புத்தகத்தை வைத்து காட்டிக்கொண்டு சாப்பாடு கொடுங்கள். விளையாட்டு பொருள்களை தவிர்த்து விடவும். விளையாட்டில் மனம் சென்றால் சாப்பிடுவது கடினம்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி. ஆனால் இரவு செரிக்க கூடிய உணவு என்ன குழந்தைகக்கு என்று உதவுங்கள் தோழி

9 மாதக்குழந்தைக்கு சிலர் எல்லா காய்கறிகளையும் கொடுக்கிறார்கள். நான் என் குழந்தைகளுக்கு கொடுத்தது மட்டும் சொல்கிறேன்.

உருளைக்கிழங்கு,கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, வள்ளிக்கிழங்கு, தக்காளி, சுக்கினி, ஸ்பினச், பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் பூசணி

பழங்கள்: ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய்(பழமாக‌), அப்ரிக்காட், அன்னாசி

மீன்: நாக்கு மீன்,

முட்டை: பாதிக்கும் குறைவாக‌

கறி:எல்லா கறியும் கொடுக்கலாம். ஹாம் கொடுக்கலாம்,ஆனால் போர்க், கோழி மட்டும் வேண்டாம்.

இரவில் கொடுக்கக்கூடியது: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், சுக்னி

இரவில் கறி, மீன், முட்டை கொடுக்க‌ வேண்டாம்.

நான் காய்கறியை வேக‌ வைத்து கொஞ்சமாக‌ சோறு(அரை டீஸ்பூன்) அரைத்து சூப் கொடுப்பேன். அல்லது பாலில் செரியால் கலந்து கொடுப்பேன்.

சர்க்கரை சேர்க்க‌ வேண்டாம். தேன் மட்டும் சேர்கலாம். உதாரணம்:வாழைப்பழதில் தேன் கலந்து கொடுக்கலாம். பாலில் தேன் கலந்து க்கொடுக்கலாம்.

ஜுஸ் கொடுக்கலாம்.

காபி,டீ,சோடா வேண்டாம்.

இரவில் திட‌ உணவு கொடுக்க‌ மாட்டேன்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் சில பதிவுகள்