ஸ்பூன் தோரணம்

தேதி: July 16, 2012

5
Average: 4.6 (14 votes)

 

ப்ளாஸ்டிக் யோகர்ட் கரண்டிகள் - 64
பட்டன்கள் - 16
ஊசி
கிச்சன் சிசர்ஸ்
எமரி போர்ட்
வெட்டும் குரடு
முறுக்கும் குரடு
ஹாட் க்ளூ கன் & ஸ்டிக்ஸ்
மெழுகுவர்த்தி
கம்பி
பென்சில்
ப்ளாஸ்டிக் வளையங்கள் - 5

 

பட்டன்களில் இருக்கும் கொழுக்கிகளை வெட்டி வைக்கவும்.
கம்பியை பென்சிலில் சுற்றி எடுக்கவும்.
ஒவ்வொரு வட்டத்தையும் தனியாக வெட்டி வைக்கவும். 21 வளையங்கள் தேவை. (எத்தனை பூக்கள் வைக்கிறோமோ அத்தனை வளையங்கள் தேவை. கூடவே ஒவ்வொரு வரிசைக்கும் மேலும் ஒரு கம்பி வளையம் தேவைப்படும்.)
ஊசியைச் சூடாக்கிக் கொண்டு 27 ஸ்பூன்களில் துளைகள் செய்து கொள்ளவும். (ஒவ்வொரு பூவுக்கும் இரண்டு இதழ்கள். அடியில் வரும் பூவுக்கு ஒரு இதழ் துளை செய்தால் போதும்.)
ஸ்பூன்களை காட்டியுள்ளபடி கத்தரிக்கோலினால் வெட்டி தேவையானால் எமரி போர்ட் கொண்டு சீராக்கி விடவும்.
மேசையில் கடதாசி ஒன்றை விரித்துக் கொள்ளவும். துளை செய்த கரண்டிகள் இரண்டு, துளையில்லாதவை இரண்டு எடுத்து எதிரெதிராக அமையுமாறு வைத்து பட்டனை மேலே ஒட்டிக் காய விடவும். அடியில் வரும் பூக்களுக்கு 3 துளையில்லாத இதழ்கள், ஒரு துளையோடு ஆன இதழ் வைத்து பட்டன் ஒட்டவும்.
க்ளூ நன்கு காய்ந்ததும் கம்பி வளையங்கள் கொண்டு இணைத்து விடவும். குரட்டினால் வளையங்களை இடைவெளி இல்லாமல் நெருக்கி விடவும்.
மேலே ப்ளாஸ்டிக் வளையங்களைக் கோர்த்து விடவும்.
அழகான நிலைமாலை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஸ்பூன் வைத்து இப்படி ஒரு கைவினையா? ரொம்ப வித்தியாசமா யோசிக்கறீங்க. ரொம்ப அழகா இருக்கு,கலக்குங்க :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப நல்ல க்ரியேட்டிவிட்டி... அழகாக இருக்கு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இமா உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது. பொறாமையா இருக்கு. இப்படி அசத்தலாக செய்தால் வார்த்தைக்கு தான் பஞ்சமாக உள்ளது. Amazingly Awesome. பாராட்டுக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

.வாவ் ...............வாவ் என்ன ஒரு கைவண்ணம் சூப்பர் ....

அன்பு இமா,

இப்படியெல்லாம் யோசிக்க முடியுமான்னு மலைப்பா இருக்கு.

லாவண்யா சொல்லியிருப்பது போல, பாராட்டுவதற்கு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ரசிக்க வைக்கும் உங்கள் ரசனையான படைப்புகளுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

எப்படி தான் உங்களுக்கெல்லாம் இந்த மாதிரியெல்லாம் யோசனை வருதோ... அந்த குட்டி ஸ்பூனில் இப்படி ஒரு அழகு தோரணமா... ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்..
அபி.

வாழ்க வளமுடன்

மிகவும் அழகா இருக்கு இமா .

Pallava raja kallile kalai vannam kandan... Imma teacher kaivinayil kalai vannam kaangireergal... Asathal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சுகி, வனி, லாவி, ஜனனி, சீதாலக்ஷ்மி, அபி, ஏஞ்சல், நித்யா அனைவரது பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

தூள் கிளப்பிடீங்க... ஸ்பூன் & பட்டன்ஸ் வச்சு ரொம்ப அழகா மார்டனா ஒரு தோரணம் உருவாக்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்.

ஆனா என்ன, எங்க சின்ன வாண்டு இதை எல்லாம் எங்க வீட்டில் மாட்ட விடாது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அழகோ அழகு...அசரவைக்கறீங்க:)

என் பொண்ணுட்ட பட்டர்ப்ளை க்ராப்ட் சொல்லி கொடுத்த ஆண்டிதான் இத

பண்ணியிருக்காங்கன்னு சொன்னதும் ஒஹோ இமா ஆண்டிதானே ஞாபகம்

இருக்கு...முகம் காட்டாம நின்னுட்டு இருந்தாங்களேன்னு கேட்கறா :)

செய்யணும்னு ஆசையா இருக்கு..முடியுமான்னு தெரியல முடிஞ்சா கண்டிப்பா

போட்டோ எடுத்து அனுப்பறேன்..

கைவினை டிக்க்ஷனரி நீங்க...

பேசாமா டிக்கட் போட்டு பொண்ண அனுப்பி வைக்கிறேன்

கொஞ்சம் சொல்லி கொடுங்கோ....;)

அவளுக்கு மிக்க ஆசை எங்கிட்டதான் சரக்கு இல்ல சொல்லி கொடுக்க :(

வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆமாம் வாண்டுகள் இருக்கும் இடம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் பிரேமா. கருத்துக்கு நன்றிங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி இளவரசி. பட்டர்ஃப்ளை!! அது ரொம்பப் பழைய கதை ஆச்சே! ;) அனுப்பி வைங்க. ஆனா... என் குழப்படியையும் சேர்த்து கற்றுக் கொள்ளுவாங்க மேடம். பரவாயில்லையா! ;) //சரக்கு இல்ல// இன்னொரு கர்ர்ர். ம்.. ஏதாவது தேவையானால் அறுசுவையில் கேட்கலாம்ல! நான் எப்போவாதுதான் இங்கு வருகிறேன். என் கண்ணில் படாமலும் போகலாம். ஆனால் அறுசுவை தோழிகளிடமிருந்து விதம்விதமா ஐடியாக்கள் கிடைக்குமே.

//முடியுமான்னு தெரியல// கர்ர்ர் ஈஸி க்ராஃப்ட்தானே! முடியும். இது பெரியவங்க பண்ற க்ராஃப்ட். (வெட்டுறது, ஒட்டுறது எல்லாம்.... சின்னவங்களுக்கு சேஃப் இல்லை.) கரண்டி - வடிவம் நிறம் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை; கரண்டி மொத்தமாக இருந்தால் ஊசியை அதிகம் சூடாக்க வேண்டும். பட்டன்கள் - அளவு & நிறம் பொருத்தமாகத் தெரிந்துகொண்டால் போதும். இரண்டு மூன்று நிறங்கள் கூட கலந்து வைக்கலாம். uhu வைத்து ஒட்டலாம். கம்பி வளையம் - ஜுவெல்ரி ஜம்பிங் ரிங்ஸ் பெரிதாக வாங்கினால் பென்சிலில் கம்பி சுற்றி வெட்டும் வேலை மிச்சம். கருப்பு வளையம் - பதிலாக மிகச் சிறிய சைஸில் ப்ளாஸ்டிக் வளையல் வாங்கலாம்.

ஒரு தடவை செய்து வாசலில் மாட்டினால் பார்க்கப் பார்க்க சந்தோஷம்; பார்ப்பவர்கள் கருத்துக் கேட்பதுவும் சந்தோஷம். நேரம் கிடைச்சா ட்ரை பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

wow supero super

I love my mahir

Simply Super!!! Nice creativity!

superb.......

மிக்க நன்றி ரின்சா, விஷ்ணுபிரியா & கல்பனா.

‍- இமா க்றிஸ்