பரோட்டா சால்னா (சைவம்)

தேதி: August 22, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (7 votes)

 

உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - அரை கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்


 

பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, நடுத்தரமான கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
சுமார் அரை லிட்டர் தண்ணீரில் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், தேங்காய் விழுது, உப்பு, வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் அனைத்தையும் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், 1/3 பகுதி வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய்தூள் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து, மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி மூடி போட்டு, கிழங்கு வேகும்வரை வைக்கவும்.
கிழங்கு வெந்தவுடன் சிறிது தண்ணீரில் கடலை மாவை கரைத்து அதில் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது மிக சுலபமான சுவையான பரோட்டா சால்னா.


கறி, கோழியில் செய்வதாக இருந்தால் அதற்கு வேறு முறை.

மேலும் சில குறிப்புகள்


Comments

Thanks for your parotta salana recipe. I really expected the non vegetarian recipe using chicken or Mutton. Hope u wud post Nonveg. Parotta Salna recipe served in hotels.

I will try your veg recipe and let u know the result

Thanks
Noodles

I will post soon non vegetarian parotta salna for u!

Thanks for ur immediate reply.

if u have Goat leg paya recipe post that too.

I have 2 reciepes which u want! I will post within one week! ok?

Ok

Thanks for posting Paya and Salna(Non veg)

recipes.

சால்னா பற்றி தெரிந்து கொண்டேன்.
thanks.
ஆனால் இது எத்தனை members சாப்பிடலாம்?
plz reply me
bye

ஹாய் அஸ்மா மேடம் நேற்று பரோட்டாவுக்கு உங்களின் சால்னா செய்தேன்.. எனக்கும் என் ஹப்பிக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது..இனி அடிக்கடி செய்வேன்..நன்றி..

அன்புடன்
ஷராபுபதி

நன்றி தேவிஷரவாணி! உங்கள் பெயர் இப்படிதானே?

This is Regarding sauteing the 2/3 of onion, tomatoes and chopped potatoes.

Should all the above three items, added all at once or one by one???In that case should the onions be sauted until golden brown...

Kindly help out...

Warm Regards,...

பெர்ரி அவர்களுக்கு,

தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில், 1/3 அளவு வெங்காயம் உள்ளதல்லவா? பச்சை மிளகாய் பொரிந்து வெண்ணிறத்தில் வந்த பிறகுதான், அந்த 1/3 வெங்காயத்தை நீங்கள் போட்டு, அது பொன்னிறத்தில் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து தூள் தீய்ந்து போகாத அளவு மட்டும் வதக்கிவிட்டு உடனே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை ஒன்றாகவே போட்டு வதக்கவேண்டும். இரண்டாவதாக போடக்கூடிய வெங்காயம் முறுகக்கூடாது. அது கிழங்கு, தக்காளியோடு சேர்த்து வதக்க மட்டுமே. சரியா? விளக்கம் போதுமா?

டியர் அஸ்மா எப்படி இருக்கீங்க?உங்க பரோட்டா சால்னா (சைவம்)செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது..அனைவரும் விரும்பு சாப்பிட்டனர் நன்றி

இன்ச்டன்ட் வெஜ்டபில் பவுடர்னா என்ன வெஜ் இன்ஸ்டன்ட் சூப்பா?நான் இதை என்வீட்டில் இருப்பவங்களிடம் எழுதி கொடுத்து வாங்கி வர சொன்னேன் ஆனால் கடைகாரர் இன்ஸ்டன்ட் சூப்பை கொடுத்து இருந்தார் ரிட்டன் கொடுக்கவும் முடியல அதனால் அதையே ஒரு ஸ்பூன் சேர்த்துட்டேன் சுவை அருமை..வாசனையும் சூப்பர்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு