மோர் குழம்பு

தேதி: July 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (14 votes)

தயிர் - 100 மில்லி
வெண்டைக்காய் - 50 கிராம்
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
சின்ன தேங்காய் - 1/2 மூடி (அ) 4 பத்தை
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி (அரை மணி நேரம் ஊற வைக்கவும்)
பச்சை மிளகாய் - 5

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
பின் வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து 2 தேக்கரண்டி எண்ணெயில் நன்றாக வறுத்து கொள்ளவும்.
தயிரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மோராக மாற்றி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை எண்ணெய் கலவையில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
பின்னர் தேங்காய் கலவை நன்கு கொதித்து கொஞ்சமாக சுண்டியதும் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள மோர் கலவையையும் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான வறுத்த வெண்டைக்காய் மோர் குழம்பு தயார். இதற்கு தொட்டு கொள்ள சுட்ட அப்பளம் நன்றாக இருக்கும்.

இதில் வெண்டைக்காய் மட்டும் இல்லாமல் கருணைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கையும் தீயாமல் வறுத்து சேர்த்து செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

எனது மோர் குழம்பு குறிப்பை வெளியிட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

First kurippu Morkuzhambu super da... Innum pala pala kurippugal vazhangi asatha vazhthukkal da...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கனி முதல் குறிப்புக்கு என் வாழ்த்துக்கள்.. இது போல பல 100 குறிப்பு கொடுக்கனும்.மோர் குழம்பு பார்க்காவே சூப்பரா இருக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Colorful a iruku kani dish..keep it up.

மோர் குழம்பு ............

கனி மோர் குழம்பு சூப்பர் பா இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்............

This curry looks good...i dono how to prepare...thx for ur receipe...i will try this week....

நித்யா அக்கா,
ஷமீலா அக்கா,
ஷபானா அக்கா,
இந்திரா அக்கா,
சங்கரி அக்கா : உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு கனிமொழி,

எல்லோருக்கும் பிடித்த ஒரு குழம்பு. படங்களுடன் அழகாக ப்ரசெண்ட் பண்ணியிருக்கீங்க.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சீதாலட்சுமி மேடம் ரொம்ப நன்றி மேடம் உங்களின் வாழ்த்துக்களுக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி அருமை டா. முதல் குறிப்பே நல்ல அழகா செய்து காமிச்சுருக்க. இதேப் போல் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கனும். வாழ்த்துக்கள் டா கனி.

உமா அக்கா உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் கனி. மோர் குழம்பு பார்த்ததும் அம்மா நினைவு வந்தது. நான் அடிக்கடி செய்வேன். உங்க முறையிலும் செய்திட்டு சொல்றேன். நன்றி.
அபி.

வாழ்க வளமுடன்

இன்று உன் மோர் குழம்பு தான் கனி ரொம்ப நன்றாக இருந்தது நம்ம கனி குறிப்பு அதான் இன்னைக்கே ட்ரை பண்ணிட்டேன் இங்கு ரொம்ப வெயில்டா உன் மோர் குழம்பு சாப்டுட்டு கூல் ஆகிய்டோம் இனி அடிக்கடி பண்ணிடுவேன்.அடுத்த குறிப்பு சீக்கிரமே அனுப்பிடு.

நித்யா அக்கா உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி முதல் பதிவிட்ட என் செல்ல அக்காக்கு ஒரு பிக் தாங்க்ஸ் அக்கா

இந்திரா அக்கா : உங்கள் விருப்பம் போல் பல நூறு குறிப்புகளை தர முயற்சிக்றேன்

சங்கரி அக்கா : உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா

ஷபான அக்கா : நீங்களும் ட்ரை பண்ணிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க அக்கா

ஷமீலா அக்கா: நீங்க இந்த வாரம் ட்ரை பண்ணிட்டு எப்பிடி இருக்குனு சொல்லுங்க

அபி அக்கா : ரொம்ப நன்றி அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு ஹ்ம்ம் நீங்க இந்த முறை ல ட்ரை பண்ணிட்டு சீக்கரமா சொலுங்க அக்கா உங்க பதில்காக வெயிட் பணிடே இருப்பேன் அக்கா,

ரூபெய் அக்கா: உங்களுக்கு ஒரு பெரிய தாங்க்ஸ் அக்கா : நா அனுப்புன குறிப்பை உடனே சமைச்சிட்டு பதில் தந்ததிற்கு அக்கா உங்க விருப்படியே சீக்கரமா இன்னும் பல குறிப்புக்கள் அனுப்ப ட்ரை பண்றேன் அக்கா .

உமா அக்கா : உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி அக்கா
சீதாலட்சுமி மேடம் : உங்களின் பதில் பதிவுகளுக்கு மிக்க நன்றிகள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி, பட்டிமன்றத்தை கலக்கி முடிச்சிட்டு இப்போ சமையல் குறிப்பு பக்கம் வந்தாச்சா? சூப்பர்ங்க...
உங்க குறிப்பும் சூப்பர், உங்க படங்களும் சூப்பர்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்களின் பதில் பதிவுகளுக்கு நன்றி பிந்து மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மோர் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு கனிமொழி.. என் ஹஸ் இந்தமாதிரி வெண்டைக்காய் போட்டு செஞ்சி கேட்டுட்டே இருந்தாங்க நாளைக்கு கண்டிப்பா செய்து கொடுத்து பாராட்டு வாங்கிட வேண்டியதுதான்.. நல்ல குறிப்பு தந்ததற்க்கு ரொம்ப நன்றி கனிமொழி..

அன்புடன்,
zaina.

மோர் குழம்பு முதல் குரிபே அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள்......

முதல் குறிப்பே சரியான விளக்கத்துடன் அழகா ப்ரெசென்ட் பண்ணி இருக்கீங்க. நீங்க சொல்லி இருக்க பொருட்கள் வைத்து தான் நானும் செய்வேன், இப்போ தயிர் ஸ்டாக் இல்லை, வாங்கினதும் அடுத்த முறை நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

இன்னும் பல குறிப்புகள் கொடுத்து சமையலிலும் கலக்க வாழ்த்துக்கள் பா.

ஒரு சந்தேகம் நான் வெண்டைக்காயை வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தனியாக வேக வைத்து பின் குழம்பில் சேர்ப்பேன். உங்கள் செய்முறையில் வெறும் வதக்கி மட்டும் சேர்த்து இருக்கிறீங்கள், இப்ப செய்யும்போது வெண்டைக்காய் நல்ல வெந்திருக்குமா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அடடா... சமையல் குறிப்பு பக்கமும் வந்தாச்சா?? கலக்குங்க கனி கலக்குங்க :) நல்லா இருக்கு மோர் குழம்பு. நாளைக்கு இதை தான் செய்ய போறேன்... செய்துட்டு சொல்றேன் எப்படி வந்ததுன்னு :) வாழ்த்துக்கள்... இன்னும் பல 100 குறிப்புகள் தர.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா உங்களின் குறிப்புடன் கூடிய படங்களை பார்த்து தான் நாமளும் ஏதாது ரெசிபி ட்ரை பண்ணி அறுசுவை கு அனுப்பனும் நு ஐடியாவே வந்துச்சு அதுக்கு முதலில் உங்களுக்கு என் நன்றிகள் உங்கள் விருப்பம் போலவே பல 100 படைப்புகளை தர முயற்சிக்றேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மேடம்

எண்ணையில் வதக்கும் போதே வெண்டைக்காய் நன்றாக வெந்து விடும்
நீங்க தண்ணீர் சேர்க்க தேவை இல்லை
மேலும் நாம் வெண்டைகாயை வதக்கும் போதே சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் நன்றாக வெந்து விடும்
தண்ணீர் சேர்க்கும் போது வெண்டைக்காய் கொழ கொழ வென்று ஆகி விடும் மேலும் அதை அப்படியே மோர் குழம்பில் சேர்க்கும் பொழுது குழம்பும் சீக்கிரமே கெட்டு விட வாய்ப்புகள் அதிகம்
அதனால் நீங்கள் வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் , பெருங்காய தூள் சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் போதுமானது மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஜைனா உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்
நீங்கள் நா குறிப்பிட முறையில் செய்து பார்த்து விட்டு எனக்கு சொல்லுங்கள் எப்படி வந்தது என்று

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களின் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி ரெண்டு நாளா என்னால சரியாய் அறுசுவைக்கு வர முடியல டா. இப்ப தான் பாத்தேன் வாழ்த்துக்கள் கனி . இதுபோல மேலும் நெறைய குறிப்புகள் தரனும் . மோர் குழம்பு சூப்பர். நான் சண்டே ட்ரை பண்ண போறேன் உன் அண்ணாக்கு கனி டிப்ஸ் சொல்லி.

ஹாய் கனி
சமையல் குறிப்பு கொடுக்க வந்தாச்சா?இதே முறையில் தான் நானும் செய்வேன் கனி
நிறைய குறிப்புகல் தர வாழ்த்துக்கள் கனி

உங்கள் ஆசை போலவே பல நூறு குறிப்புகள் குடுக்க முயற்சி செய்கிறேன் அக்கா நீங்களும் ட்ரை பண்ணிட்டு எப்டி இருக்குனு சொலுங்க க்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அது என்ன எல்லாரையும் அக்கா நு கூபிடுறீங்க...
என்னை மட்டும் என்ன மேடம் நு கூப்பிடறீங்க...
இது அநியாயம்.

சும்மா தான் சொன்னேன்... :-)

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சாரி பிரேமா அக்கா இப்போ ஓகேயா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

i am new to arusuvai. I have been following this site from a long time. but today only i registered. presentation super.

indha comment dhan ennoda first comment.

வாழ்த்துக்கள்.மோர் குழம்பு நல்ல இருக்கு. ட்ர்ய் பண்ணிட்டு சொல்லுறேன்.

மேடம் உங்களின் முதல் பதிவினை எனுடைய குறிபிர்க்கு வழகியமைக்கு மிக்க நன்றி நீங்களும் இதே முறையில் செய்து பார்த்துட்டு எப்டி இருந்தது என்று பதில் பதிவு தாருங்கள் மேலும் பதிவினை தமிழில் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும் :

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனி,மோர் குழம்பு ம்ம்ம்ம்ம்,னான் செய்து சுவைது விடேன்,சூப்பெர்,என்னுடைய வாழ்த்துகள்,

Madam thanks for ur comment neenga senchathum ilaama marakaama pathil pathivu thanthathukkum mikka nandri ungalin vaazthukalukku nadri madam . english la type pandrenu thapa ninaikaatheenga gmail work aagala so athaan english la type panni iruken illa na tamil la thaan pathivitu irupen madam thanks once again

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி,
வெங்காயம் அரைத்து செய்தது இல்லை..
அவசியம் ட்ரை பண்றேன் ..
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

மேடம் மன்னிக்கவும் இதில் நா வெங்காயமே சேர்க்க வில்லை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முதல் குறிப்பிற்கு வாழ்த்துக்கள். மோர்குழம்பு என்றால் எத்தனை வகை என்றாலும் அலுக்காமல் செய்யலாம். அதுவும் வெண்டைக்காய் என்றால் விட்டு வைக்கலாமா?

ஒரு சின்ன சந்தேகம் அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களில் "கடுகு" என்று இருக்கிறது. அது சரியா இல்லை "மிளகு" சேர்க்கனுமா? இல்லை இவ்வளவு கடுகு சேர்த்தல் கசக்காதா?

//கவிதா

"சின்ன தேங்காய்" என்பதை தானே பை டீஃபாள்ட்டா "சின்ன வெங்காயம்" என்று எடுத்துக்கிட்டீங்க?//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா மேடம் உங்களின் பதிவுகளுக்கு மிக்க அன்றி அண்ட் கடுகு ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம் கசக்காது மிளகெலாம் சேர்க்க கூடாது தேங்காயுடன் சேர்த்து அரைக்கும் பொழுது கசக்காது அண்ட்

கவிதா மேடம் லாவண்யா மேடம் சொன மாறி தான் நீங்க சின்ன தேங்காய் ன்றதா தான் வெங்காயம் நு எடுதுகிடீங்கனு நினைக்றேன் மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முதலாவது குறிப்பா! பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

உங்க மோர் குழம்பு தான் நேற்று மதிய உணவுக்கு :) வித்தியாசமான முறை தான்... ரொம்ப நல்லா இருந்தது. நான் இதுவரை கடுகு, தனியாலாம் சேர்த்து அரைச்சதில்லை. மனமா இருந்தது. பிடிச்சுது. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இம்மா அக்கா உங்களின் வாழ்த்துக்களுக்கும் உங்களின் பதிவுகளுக்கும் மிக்க நன்றி

வனிதா அக்கா : நீங்க ட்ரை பந்தும் இலாம் ஆதற்கான பீட் பேக்கையும் குடுத்ததுக்கு மிக்க நன்றி அக்கா உங்கள் பதில் பதிவுகளுக்கும் என் நன்றிகள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்