இதை விட கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

மனைவிமார்கள் மீது சந்தேகபட்டு என்ன என்னவோ கொடுமை கேள்வி படிருகிறோம்...எல்லை மீறிய கொடுரம் இதோ....மனைவியின் அந்தரங்க உறுப்பை பூட்டு போட்டு கொடுமை படுத்தி இருக்கும் கொடூர கணவன்...அதுவும் 4 வருடங்கலாக வெளியே சொன்னால் தனது 5 குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி இருக்கிறான். தனது 12 வயது மகளையும கற்பழிக்க முயன்றிருக்கிறான். இந்த கொடுமை தங்காமல், விஷம் குடித்து அந்த தாய் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள். அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து போது தான் இந்த கொடுமை எல்லாம் தெரிந்து இருக்கிறது....

ஒனஎ இந்திய என்ற செய்தி தாளில் முதலில் இந்த செய்தியை படித்த போது என்னால் நம்ப முடியவில்லை...பின்னர் தினகரனில் உம இந்த செய்தி வந்துள்ளது....இது மட்டும் இல்லை, 6 வயது சிறுமிய கற்பழித்து கழுத்தில் bladal கீறி கொலை, சந்தேக அப்ட்டு மனைவ்யை கொன்று புதைதா கணவன் ....இது எல்லாமே நம் நாட்டில் நடந்த அவலங்கள்...பெண்களுக்கு எபோது விடிவு காலம் வரும் :(

இந்த மாதிரி கொடுமை காரங்களை எல்லாம், அரஸ்ட்டு ஜெயில் என்று போக கூடாது, நடு ரோட்டில் நிக்க வச்சு சுடனும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இந்தியா வில் தான் இந்த கொடுமை நிறைய நடக்கிறது. தினம் தினம் பத்திரிகை வாசித்தால் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்று தோன்றுகிறது. நம்மில் பலருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களை நினைத்தால், ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும் போது எனக்கு அடிவயிரு கலங்குகிறது.நாம் கண்ணுக்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்து வருகிறோம் ஆனால் ஆண்கள் ஐந்து நிமிட சுகத்திற்காக ஒரு குடும்பத்தையே அழிக்கிறார்கள். என்னை கேட்டால் நம் நாட்டு சட்ட திட்டம் எல்லாம் வீண். யார் பாதிக்க படுகிறார்களோ அவர்கள் உடனே தவறு செய்தவனை நடு வீதியில் நிற்க வைத்து தண்டனை கொடுக்க வேண்டும் அதை எல்லா தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும் அப்படியாவது சில ஜென்மங்கள் தவறு செய்யாமல் இருக்கும் அல்லவா...?

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

பெண்ணாக பிறந்தது பாவம் அல்ல தோழி... இத்தனை கொடுமை நடந்தும் அவனை எதுவும் செய்ய முடிய புழு பூச்சியாக வாழ்ந்திருக்கிறாளே அது தான் பாவம் .... இவன் போன்றோரை அணுவணுவாய் சித்திரவதை செய்து தானே தற்கொலை செய்து கொள்ளும் படி துன்புறுத்த வேண்டும்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இந்த மாதுரி கொடுமை காரனை எல்லாம் அணு அணுவாய் சித்தரவதை செய்ய வேண்டும் . கொல்ல கூடாது . அவன் வாழ்நாள் முழுதும் அந்த வேதனையை அடைய வேண்டும் . தான் செய்த தவறை இனி ஒருவனும் நினைத்து கூட பக்கதவாறு செய்ய வேண்டும் .

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்....//**தினம் தினம் பத்திரிகை வாசித்தால் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்று தோன்றுகிறது. நம்மில் பலருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களை நினைத்தால், ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும் போது எனக்கு அடிவயிரு கலங்குகிறது.நாம் கண்ணுக்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்து வருகிறோம் ஆனால் ஆண்கள் ஐந்து நிமிட சுகத்திற்காக ஒரு குடும்பத்தையே அழிக்கிறார்கள்**// சத்தியமான உண்மை.....இதெலாம் பார்க்கும் பொது, பெண்ணை பிறபதற்கு, பிறக்காமலே இருக்கலாம்....என்று தோன்றுகிறது...
//**இத்தனை கொடுமை நடந்தும் அவனை எதுவும் செய்ய முடிய புழு பூச்சியாக வாழ்ந்திருக்கிறாளே அது தான் பாவம்**// நிச்சயமாக...

சினிமா வில் வருவது போல, யார் வேண்டுமானாலும் யாரையும் கொள்ளலாம்...உயிருக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய் விட்டது...
நேற்று குட ஒரு செய்தி படித்தேன்...கண்டிப்பாக நல்ல விஷயம் இல்லை :(

விடுதியில் தங்கி படிக்கும் குழந்தை, படுகயிலையே சிறுநீர் கழித்து விட்டாள் என்று, அவள் சிறுநீரையே குடிக்க வைத்து தண்டித்து இருக்கிறார் ஒரு ஆசிரியர்....ஆசிரியர் என்று சொல்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை..
இவர்களை எல்லாம் எப்படி தண்டிப்பது என்று தெரியவில்லை....

கௌஹதி இல் 20௦ ஆண்கள் சேர்ந்து, 17 வயது, +1 மாணவியை நடு ரோட்டில் மானபங்கம் படுத்தி இருகிறார்கள்....சென்னை கிண்டி இல பட்ட பகலில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்று இருகிறார்கள்....ஊழல், திருட்டு,கொலை,கொள்ளை,கற்பழிப்பு....என்று இந்த பட்டியல் முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கிறது...இதறுகு முற்று புள்ளி எபோது யாரால் கிடைக்கிமோ, அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

பெண்களுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சு கிடச்சிடுச்சுனு சொல்றாங்களே இது தான் அந்த சுத்ந்திரமோ? என்னைக் கேட்டால் இன்னும் நாம் சுதந்திரம் அடையவில்லை என்று தான் சொல்வேன்.
இன்று கூட நான் ஃபேஸ் புக்ல ஒரு நியூஸ் படிச்சேன்.
குளித்துக்கொன்டிருந்த ஒரு கல்லூரி மாணவியை சக மாணவர்கள் வீடியோ எடுத்து அந்த பெண்ணை தினமும் தொல்லை செய்திருக்கிறார்கள். வெளியே சொன்னால் இணையத்தில் அப்லோட் செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள். அந்த பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு சூசைட் பன்னி இற்ந்துவிட்டாள்.
இது மாதரி நபர்களை தோழி சொன்னதுபோல அனு அனுவாய் சித்திரவதை செய்து கொல்லனும். பெண்கள் என்ன காட்சிப்பொருளா?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அன்புள்ள தோழிகளுக்கு,

காலை வணக்கம். நான் சமீபத்தில் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் " என்ற புத்தகத்தை படிதேன். அதில் உள்ள கருத்துகளை உங்களிடம் பகிர்தல் இந்த நேரத்தில் சரியாக இருக்கும்.

"இந்த பெண்ணுக்கு ஏன் இப்படியொரு கொடுமை நடந்தது என்று யாராவது பதில் சொல்லமுடியும் என்றால் முசோலினி, ஹிட்லர் போன்ற கொடுமைக்காரர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதற்கும் காரணம் சொல்லிவிடமுடியும்.
நமது அறிவு என்பது ஓர் எறும்பு என்றால், வாழ்கையும், உலகமும் யானை போன்றது. யானை காலுக்கடியில் கிடக்கும் எறும்பால் யானையை முழுமையாக பார்த்து விட முடியாது. யானையின் ஒரு பகுதியை தான் பார்க்க முடியும். எறும்பின் பார்வை போல நமது அறிவு கூர்மையானதாக இருக்கவேண்டும்.

விளங்க முடியாத புதிராக வாழ்க்கை இருப்பதால். யார் நம்மை மிதித்தாலும், உதைத்தாலும், மிதியடியை போல சும்மா இருக்க வேண்டும் , அது விதி என்பது நமது அறிவீனம்.

ஆங்கிலத்தில் ஓர் வார்த்தை "assertive என்று உண்டு அல்லவா...இந்த குணம் கொண்டவர்கள் தனது உரிமைகளை விட்டு கொடுக்கமாட்டர்கள். தனது அதிகரத்திற்கும் , உரிமைக்கும் உட்பட்ட பகுதிகளை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்கமாட்டார்கள். நாம் இந்த குணத்தோடு இருக்க வேண்டும்.

எதற்கும் பயப்படதீர்கள் ..... மாத்தி யோசியுங்கள் ... வழி கிடைக்கும்.

Hi, Many more happy returns

good morning

மேலும் சில பதிவுகள்