புளிக்கூழ்

தேதி: July 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

இட்லி அரிசி - 2 டம்ளர்
புளிக்கரைசல் - 3/4 டம்ளர்
உப்பு
மஞ்சள் பொடி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 100 மி.லி
சமையல் எண்ணெய் - 50 மி.லி
வரமிளகாய் - 12
கடுகு
கடலை பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை


 

அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். புளிக்கரைசலை எடுத்து வைக்கவும்.
மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைக்கவும்.
தோசை மாவு பதத்தை விட சற்று தண்ணியாக கரைக்கவும்.
கடாயில் இரண்டு எண்ணெயையும் ஊற்றி தாளிக்க கூறிய பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு மாவு கரைசலை ஒரு கையால் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி வைத்து மாவை வேக வைக்க வேண்டும். அடிக்கடி கிளறி விடவும். சற்று கவனத்துடன் செய்ய வேண்டும். கட்டி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கையினால் தொட்டால் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து விடவும்.
எண்ணெய் தடவிய தட்டில் பரத்தி ஆறியதும் துண்டுகள் போடலாம். காரமும், புளியும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்படி ஒரு உணவு நான் கேள்விப்பட்டது கூட கிடையாது மஞ்சுளா வித்தியாசமா இருக்கு. ஈஸியாவும் இருக்கு. செய்து பார்க்கிறேன் அந்த கடைசி படத்துல பார்க்க கேசரி போலவே இருக்கு அப்படியே அனுப்பி வைங்களேன் அந்த ப்ளேட்ட.

arumaiyana unavuvagai

அன்பு மஞ்சுளா,

மோர்க் கூழ் கேள்விப்பட்டிருக்கிறேன், புளிக்கூழ் செய்முறை இப்பதான் பார்க்கிறேன்.

ஃபோட்டோஸ் நல்லா எடுத்திருக்கீங்க. குறிப்பாக தாளிதம் ஃபோட்டோவில், எண்ணெய், சுற்றிலும் மிளகாய், கருவேப்பிலை என்று எடுத்திருப்பதும், ஃபைனல் ஃபோட்டோவும் ரொம்ப நல்லா வந்திருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

இதுவும் பெரும்பான்மையான மக்களால் மறக்கப்பட்ட சுவையான பாரம்பரிய உணவு. வாழ்த்துக்கள் மஞ்சு. தொடருங்கள் உங்கள் பங்களிப்பை.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நீங்க குடுக்குற குறிப்புக்கள் அனைத்தும் புதுசா வித்யாசமா இருக்கு வாழ்த்துக்கள்.

எல்லாரும் சொல்லி இருப்பது போல் வித்தியாசமான குறிப்புகள் உங்களுடையது. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஞ்சு,

இது போலே மோர்கூழ் சாப்பிட்டு இருக்கேன்..
ஒருநாள் ட்ரை பண்ணுறேன்..
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

மஞ்சு வித்தியாசமான இதுவரை கேள்விபடாத குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு, ஒருமுடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல.. என்னென்னவோ அயிட்டம் சொல்றீங்க. கண்ணை கட்டி விட்ட மாதிரி இருக்கு போங்க..வித்தியாசமான குறிப்பா தந்து எங்களை கட்டி போட்டு வச்சிருக்கீங்க. தொடர்ந்து கட்டி போட்டு வைங்க .. வாழ்த்துக்கள் மஞ்சு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் டீமுக்கு நன்றி.
வாழ்த்திய அன்பு தோழிகள் அணைவருக்கும் நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு