காகித பூக்கள்

தேதி: July 19, 2012

5
Average: 4.6 (8 votes)

 

கலர் பேப்பர்ஸ்
க்ளூ
மெட்டல் வயர்

 

முதலில் பூ செய்ய பேப்பரை மூன்று பக்கம் ஒரே அளவு உள்ள முக்கோணங்களாக வெட்டி எடுக்கவும். முக்கோணத்தின் ஒவ்வொரு முனையையும் மையமாக கொண்டு மீதி இரண்டு முனையை சேர்த்து மடித்து முக்கோணத்தின் நடுவில் படத்தில் உள்ளது போல் 3 கோடுகள் விழும் படி மடிக்கவும்.
இப்போது நடுவில் உள்ள கோடுகள் இணையும் பகுதியை சேர்த்து பிடித்து மடிக்கவும்.
இனி ஒவ்வொரு முக்கோணமாக தெரியும் பக்கத்திலும் மேலே பேப்பரை சிறிதாக வெளிப்பக்கம் மடிக்கவும்.
இப்போது உள்பக்கம் பேப்பரை விரல்களால் பூ இதழாக எடுத்து விடவும்.
பின்னர் நடுவில் வரும் ‘V’ வடிவத்தை படத்தில் உள்ளது போல் மடிக்கவும். இது பூ பிரிந்து வராமல் இருக்க உதவும்.
இப்போது பார்க்க இப்படி இருக்கும். இது போல் விரும்பிய நிறங்களில் செய்து தயாராக வைக்கவும்.
தண்டு செய்ய பச்சை காகிதங்களை விரும்பிய நீளத்தில் செவ்வக வடிவில் வெட்டி எடுக்கவும். அதன் உள்ளே ஒரு மெட்டல் வயர் வைத்து சுருட்டி ஒட்டவும்.
ஒட்டிய பின் முன் பக்கம் சிறிது நறுக்கவும்.
அதன் உள்ளே பூவின் பின் பக்கத்தை விட்டு ஒட்டி விடவும்.
இப்போது தண்டோடு பூக்கள் தயார். இவற்றை நீங்க விருப்பம் போல் வளைத்து உண்மையான பூவில் தண்டு போல வடிவம் கொடுக்கலாம்.
இலைகள் செய்ய பச்சை காகிதங்களை இது போல் வெட்டி எடுக்கவும்.
இவற்றின் 4 பக்கங்களையும் பின் பக்கமாக சிறிது மடிக்கவும். மடிப்பதால் இலையை சுருட்டி விட்டால் அப்படியே நிற்கும். வடிவமும் பார்க்க நன்றாக இருக்கும்.
இனி அதை சுருட்டி விட்டு இலையின் வடிவம் கொடுத்து பூ ஜாடியில் அலங்கரிக்கலாம். அழகான காகித பூக்கள் தயார். முழுவதும் செய்து முடிக்க 1 - 2 மணி நேரம் போதுமானது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பூக்கள் செய்து பார்த்தேன்! அழகு! அருமை! இலைகளுக்கு என்ன வடிவத்தில் காகிதத்தை வெட்டவேண்டும்.

ஜெயா

உங்கள் கைவண்ணம் கலக்கல் போங்க... சிரமம் பார்க்காமல் செய்யும் உங்கள் கை வேலைப்பாட்டு ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்... பூக்களின் நிறம் அழகு...

மென்மேலும் கலக்க வாழ்த்துக்கள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அழகா இருக்கு வனி. செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Vanitha akka... Unga kaila edho magic iruku... Oru oru padaippum adhai presentation seiyum vidhamum azhago azhagu akka... Vazhthukkal akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப அழகா இருக்கு வனிதா தத்ரூபமா இருக்கு பூக்கள் போலவே. எனக்கு இலைகள் ரொம்ப பிடிச்சிருக்கு அழகா அரேஞ் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணக் காகிதப் பூக்கள், கொள்ளை அழகு!

பாராட்டுக்கள், வனிதா!

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

ஜெயா... பூ அதுக்குள்ள செய்துட்டீங்களா??? வாவ்!!! தேன்க்யூ சோ மச் ஜெயா. இலை வடிவம் என்னன்னு சொல்ல... இலை போலவே இரண்டு முக்கோணம் சேர்ந்த வடிவம். ஒன்னு கொஞ்சம் நீளமா, ஒன்னு கொஞ்சம் சின்னதா. புரியுதா? எனக்கு அதை என்ன வடிவம்னு சொல்லன்னு புரியல... ஏறக்குறை டயமண்ட் ஷேப். செய்து பார்த்து சொல்லுங்க. :)

பிரேமா... மிக்க நன்றி. இவை எல்லாம் இங்க உள்ள சில குட்டீஸ்கு கற்று தந்த சுலபமான வேலைகள். ட்ரை பண்ணி பாருங்க. :)

இமா... மிக்க நன்றி. அவசியம் செய்து எனக்கு அனுப்புங்க :)

நித்யா... மிக்க நன்றி. கையில் மேஜிக் எல்லாம் இல்லை நித்யா... நீங்களாம் ட்ரை பண்ணி பாருங்க, இதை விட நல்லா பெர்ஃபக்ட்டா செய்வீங்க :)

உமா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் படிச்சாலே நான் மிதக்கிறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிமை..இனிமை..அருமை ....அழகு!!!!!!!!!!!
வாழ்த்துக்கள்:)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி. குட்டியை செய்ய வைக்கலாம் தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேப்பர் பூக்கள் அழகா இருக்கு வனி. பூவோடு தண்டு பகுதி இணைத்து இருக்கிறது ஸ்ட்ரா ஒட்டினது போல் இருக்கு. பேப்பர் மாதிரி தெரியல. ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. கைவினைகளில் உங்க பதிவில்லாம ரொம்ப மிஸ் பண்ணேன்... பிசியாகிட்டீங்களா? இனி ரெகுலரா வருவீங்க தானே? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா