ஆனந்த அரட்டை !!!

கோழிகளே, நானும் அரட்டையை தொடங்கி எம்புட்டு நாளாச்சு. அதனால் இன்னைக்கு என் கையால் தொடங்கி வச்சிருக்கேன். அளவில்லாத உங்கள் அரட்டையை ஆனந்தமாக இங்கே தொடருங்க :)

கல்பனா / வனிதா,
எனக்கு ஒரு சந்தேகம்...
எக்சல் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும்.. படமோ விடியோவோ இல்லாமல் விளக்குவது சற்றே கடினம்...

youtubeல் வீடியோ அப்லோட் செய்து விட்டு, இங்கே அதை பற்றி விவரிக்கலாமா? youtube லிங்க் அறுசுவையில் போடலாமா?

நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லவும் :) நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹலோ நித்யா,
நாங்கள் நலம். நன்றி :)
நீங்கள் எப்படி இருக்கீங்க? உங்களுக்கு பார்சல் நேற்றே அனுப்பியாகி விட்டது எப்படியும் ஒரு மாதத்தில் வந்து சேர்ந்துடும்.. கவலை படாதீங்க :)

சாரி எல்லாம் ஏன் எப்போதும் வேஸ்ட் செய்றீங்க.. பத்திரமா ஸ்டாக் வச்சுக்கோங்க வேண்டிய போது பயன்படும்... :P

உங்களுக்கு உடம்பு இப்போ நல்லா குணமாகி விட்டதா?

டேக் கேர்... பை..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Unga pudhu arattai izhai la enaku thanglish entry ku exception unda akka? Ungal reply ku piragu thaan nan thodarvadhum thodaramal iruppadhum... Pls give me a quick reply akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் பிந்து எப்படி இருக்கீங்க? இன்னிக்குதான் முதல் முறையாக உங்ககிட்ட பேசுறேன்னு நினைக்கிறேன் :)

மற்ற தளங்களின் லிங்க் இங்கு போடக்கூடாது என்பது நம் அறுசுவையின் விதிமுறைகளில் ஒன்று.

வனி உறவினர் வருகையில் பிசியா இருக்காங்க போல அதான் பதில் வரலை கல்ப்ஸும் பிசியாதான் இருக்கனும் அதான் பதில் இல்லை,இருவருமே இதை பார்த்ததும் உங்களுக்கு பதில் அளிப்பாங்க.
எப்பவும் தூங்க போகும் முன் நம்ம தளத்தை பார்வையிடுவது வழக்கம் அதான் உங்களுக்கு எனக்கு தெரிந்ததை சொன்னேன் தவறாக நினைக்கவேண்டாம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா,
நன்றி :) பிரச்சனை இல்லை... மேனேஜ் செய்துக் கொள்ளலாம்..
செய்யலாமா தெரியலை அதனால் தான் கேட்டேன் இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது :) பதிலுக்கு நன்றி :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அட இங்கதான் இருக்கீங்களா பிந்து :) அறுசுவையை யாரெல்லாம் பாத்துட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு வழி ஏற்பாடு பன்னினா ரொம்ப வசதியா இருக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா, விழித்திருக்கும் போது எல்லாம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அறுசுவை ரெப்ரெஷ் செய்வது வழக்கமாகி விட்டது..

என்ன செய்வது arusuvai addiction :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//என்ன செய்வது arusuvai addiction :P// உண்மைதான் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் சும்மா சொன்னேங்க... நீங்க வேற சீரியஸா எடுத்துக்காதீங்க...
சரி நான் போய் என்னோட oracle tutorial continue செய்றேன்...

உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி :) உங்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்... பை... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து, உங்களோட பதிவை இப்ப தான் பார்த்தேன்.

//எக்சல் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும்.. படமோ விடியோவோ இல்லாமல் விளக்குவது சற்றே கடினம்...

youtubeல் வீடியோ அப்லோட் செய்து விட்டு, இங்கே அதை பற்றி விவரிக்கலாமா? youtube லிங்க் அறுசுவையில் போடலாமா?// இது குறித்து விளக்கத்தை அட்மின் அண்ணா தான் தரவேண்டும் என நினைக்கிறேன். அண்ணாவை பார்ப்பதே அரிதாக உள்ளது. இதை வனி பார்த்தாலும் நிச்சயம் பதில் தருவாங்க. அதுவரை பொறுத்தருள்வீங்க தானே ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்