குடும்பத் தலைவிக்கு பயன்படும் கணினி

அறுசுவையில் சமையல், கைவினை, பிரச்னைக்கு தீர்வு என எல்லோரும் அவரவருக்கு தெரிந்த விஷயங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். நமக்கு தான் அது எதுவுமே தெரியாதே, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. எப்படி பார்த்தாலும் எனக்கு ஏதோ கொஞ்சமாவது தெரிந்தது கணினி குறித்து தான்.. சரி அதை பற்றியாவது பேசலாமே என்று நினைத்தேன்... அதற்கு தான் இந்த இழை. ஏற்கனவே இருக்கும் கணினி குறித்த இழை பெரிதாக இருக்கவே, நான் புதிதாக ஒன்று தொடங்குகிறேன்.

பொதுவாக குடும்பத்தலைவிக்கு கணினி மூலம் ஏற்படும் பயன்கள் என தொடங்குவோம், எப்படி போகிறது என்று பார்த்து விட்டு, மற்ற பகுதிகளையும் எடுத்துக் கொள்வோம் :P

உங்களுக்கு ஏதாவது தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இருந்தாலும் சொல்லுங்கள் முடிந்தால் இங்கே பேசுவோம்..:D

மற்றவர்களும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் :D

சுவர்ணா, benazirjaila, நிகிலா, ரேவதி, கவிதா, கல்பனா, சரண்யா, உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி :)

கவிதா, எனக்கு ஆட்சேபனை எல்லாம் இல்லை :)
முதல் பதிவில் நானும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்லி இருக்கிறேன்...
//தெரிந்தவர்கள் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளலாம்.//

ஆனால் அது மற்றவரின் பார்வையில் படாமல் போக வழி இருக்கிறது, அதனால் இப்போது forum topicலேயே சேர்த்தாகி விட்டது :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்று கொஞ்சம் வேலை இருப்பதால் நம் எக்சல் தொடரை இன்று தொடர முடியவில்லை. அதற்கு பதில் இன்று ஒரு சின்ன கணினி தொடர்பான டிப் பார்ப்போம்.

சில சமயம் பல்வேறு காரணங்களுக்காக சில குறிப்பிட்ட இணையதளத்தை/தளங்களை மட்டும் லோட் ஆகாமல் தவிர்க்க முடிந்தால் நன்றாக என்று நினைப்போம். எடுத்துக்காட்டாக என் மகளுக்கு யூ ட்யூபில் பல்வேறு வீடியோக்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அவள் பார்க்க ஆரம்பித்து விட்டால், அவளை அதில் இருந்து திசை திருப்புவது மிகவும் கடினம். லேப் டாப்பை ஷட் டவுன் செய்யலாம் என்றால் எனக்கு அதில் வேறு வேலை ஏதாவது இருக்கும் (வேறு வேலை வெட்டி ஏது :)). இது போன்ற நேரத்தில் இந்த டிப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதளங்களை லோட் ஆகாமால் தவிர்க்க பல வழிகள் உள்ளது. உங்கள் பையர் வால் (firewall) அல்லது router செட்டிங்கிலும் இதை செய்யலாம். ஆனால் நான் சொல்வது விண்டோஸ்ஸில் இருந்து செய்யும் ஒரு வழி.

1. Windows 7ல் முதலில் ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து - "Search programs and files" என்று இருக்கும் டெக்ஸ்ட் பாக்ஸில் %windir%/system32/drivers/etc என்று டைப் செய்து enter பட்டனை பிரஸ் செய்யுங்கள்.
Windows XPல் முதலில் ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து - Run கிளிக் செய்யுங்கள்- இப்போது தோன்றும் டெக்ஸ்ட் பாக்ஸில் %windir%/system32/drivers/etc என்று டைப் செய்து enter பட்டனை பிரஸ் செய்யுங்கள்.

2. இப்போது ஒப்பன் ஆகும் டைரக்டரியில் hosts என்று ஒரு பைல் இருக்கும்.

3. உங்கள் பாதுகாப்பிற்கு இந்த பைலை முதலில் வேறு இடத்தில காப்பி செய்து பத்திர படுத்தி கொள்ளுங்கள். ****இது மிகவும் முக்கியம்... ஒருவேளை நீங்கள் ஏதேனும் தவறாக டைப் செய்து சேவ் செய்தாலும் இந்த பேக்கப் செய்த பைலை கொண்டு பிரச்சனையை சமாளித்து கொள்ளலாம். *****

4. பேக் அப் எடுத்த பிறகு hosts பைலை notepad அல்லது textpadல் ஒப்பன் செய்யுங்கள்.

5. அந்த பைலின் இறுதி வரியில் 127.0.0.1 www.123.com என்று டைப் செய்யுங்கள். (www.123.com இருக்கும் இடத்தில உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரி கொண்டு மாற்றி கொள்ளுங்கள்.)

6. இந்த பைலின் இறுதியில் எம்ப்டி (empty) லைன் அல்லது ஸ்பேஸ் இருக்க கூடாது அதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

7. இப்போது இந்த பைலை சேவ் செய்து மூடி விட்டு, புது ப்ரவ்சறை திறந்து நீங்கள் சேர்த்த அந்த இணையதள முகவரியை முயற்சி செய்து பாருங்கள்.

8. பிங்கோ..... :) உங்களுக்கும் மீண்டும் அந்த இணையதளம் வேண்டும் எனும் போது, நீங்கள் சேர்த்த அந்த வரியை hosts பைலில் இருந்து ரிமுவ் செய்து விடுங்கள் அவ்வளவு தான்.

பி.கு:
இந்த டிப் பயன்படுத்தியும் அந்த இணையதளம் லோட் ஆனால் கவலை படாதீர்கள். அதே இணையதள முகவரியை www இல்லாமல் டைப் செய்து நாம் முன்பு சேர்த்த லைனுக்கு அடியில் சேருங்கள். அதாவது முதலில் 127.0.0.1 www.123.com என்ற லைனை சேர்த்திருந்தால், இப்போது 127.0.0.1 123.com என்ற லைனை சேர்க்க வேண்டும்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் bivi,this is very useful trend.நான் என் குழந்தைக்கு youtube ல் english ryhmes,tamil baby songs download செய்வேன்பா.அதைபோல் எப்படி games download செய்வதுனு சொல்லமுடியுமா.pls

hai pindhu enakku oru doubt na eppadi en kurippukalai padhivu seivadhu plz help me sollunga

ANAIVARAYUM NESI

it's gud job,carry on.

ஹாய் bivi, என்னபா பதிலே காணும்.reply plss..

கலை,
பதில் சொல்ல தாமதமானதற்கு மன்னிக்கவும்.
இலவசமாக கேம்ஸ் டவுன்லோட் பண்ண பல இணையதளங்கள் இருக்கின்றன.
இங்கே மற்ற தளங்களின் லின்க்குகள் தரலாமா என்று தெரியவில்லை... நீங்கள், கூகிளில் freeware games download என்று தேடினாலே பல தளங்களை கண்டுபிடிக்கலாம். மறக்காமல் நீங்கள் டவுன்லோட் செய்யும் கேம்ஸை அன்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்த பின்பே பயன்படுத்துங்கள்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அகல்யா,
என் பெயர் Bindu அல்லது தமிழில் பிந்து என்று சொல்லுங்கள்...

நீங்கள் கேள்வி கேட்டு நிறைய நாட்கள் ஆகி விட்டன... உங்களுக்கு இந்நேரம் பதில் கிடைத்திருக்கலாம்... இல்லை என்றால் சொல்லுங்கள், உங்களுக்கு எந்த விதமான குறிப்புகள் பதிவு செய்ய வேண்டும்????

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து,
நீங்கள் தளங்கள் தரவேண்டம்பா.step by step எனக்கு சொல்லிதந்தால் போதும்பா.நீங்கள் சொன்னது போல் google free games download search போய் பார்தேன்.ஆனால் அதை செய்த பிறகு file open செய்தால் openfile-security warning காட்டுது. do you want to run this file - வருதுபா.run செய்தால் program needs your permission to continue வருதுபா. continue செய்தால் ஏதேதோ வருதுபா.download செய்த பிறகு அன்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்வதும் சொல்லிதாங்கபா.pls

பிந்து ஏன்பா இத பாதிலேயே விட்டுட்டீங்க நான் நோட்லாம் போட்டு ரொம்ப ஆர்வமா கத்துக்க ஆரம்பிச்சேன்.
ஓ சமைத்து அசத்தலாம்ல பிஸியாகிட்டீங்களா? நேரம் கிடைக்கும் போது இத முடிந்தால் கண்டினியூ பண்ணுங்கப்பா

மேலும் சில பதிவுகள்