குடும்பத் தலைவிக்கு பயன்படும் கணினி

அறுசுவையில் சமையல், கைவினை, பிரச்னைக்கு தீர்வு என எல்லோரும் அவரவருக்கு தெரிந்த விஷயங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். நமக்கு தான் அது எதுவுமே தெரியாதே, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. எப்படி பார்த்தாலும் எனக்கு ஏதோ கொஞ்சமாவது தெரிந்தது கணினி குறித்து தான்.. சரி அதை பற்றியாவது பேசலாமே என்று நினைத்தேன்... அதற்கு தான் இந்த இழை. ஏற்கனவே இருக்கும் கணினி குறித்த இழை பெரிதாக இருக்கவே, நான் புதிதாக ஒன்று தொடங்குகிறேன்.

பொதுவாக குடும்பத்தலைவிக்கு கணினி மூலம் ஏற்படும் பயன்கள் என தொடங்குவோம், எப்படி போகிறது என்று பார்த்து விட்டு, மற்ற பகுதிகளையும் எடுத்துக் கொள்வோம் :P

உங்களுக்கு ஏதாவது தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இருந்தாலும் சொல்லுங்கள் முடிந்தால் இங்கே பேசுவோம்..:D

மற்றவர்களும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் :D

ஆமாம் பிந்து ஏன் இந்த இழைய பாதியிலேயே அம்போனு விட்டுட்டீங்க.excel ஓரளவு தெரியும் நீங்க சொல்றத வச்சி எனக்கு தெரியாததையும் கத்துக்கலாம்னு இருந்தேன் ஆனா ஏமாத்தீட்டீங்களே.உங்கள் நேரம் ஒத்துழைத்தால் இதை தொடரவும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அறுசுவையை விண்டோஸ் (XP / Vista / Windows 7) பயன்படுத்தி பிரவுஸ் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி :) இனிமேல் நீங்கள் தனியாக வேறு பக்கத்தில் தமிழில் அடித்து கருத்து பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல நல்ல சர்வீஸ்களை இலவசமாக தரும் கூகிள் புதிதாக ஒரு சேவை துவங்கி உள்ளது.. இந்த கூகிள் ப்ரோகிராமை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் நேராக கருத்து தெரிவிக்க இருக்கும் பாக்ஸில் நீங்கள் தமிங்கலத்தில் அடிப்பது ஆட்டோமேட்டிக்காக தமிழில் மாறி விடும் :)

1. முதலில் http://www.google.com/inputtools/windows/index.html சென்று தமிழ் தேர்வு செய்து, டவுன்லோட் செய்யுங்கள்.
2. அதை மற்ற ப்ரோகிராம்களை இன்ஸ்டால் செய்வது போலவே இன்ஸ்டால் செய்யுங்கள்.
------i) இன்ஸ்டால் செய்து எப்படி அல்லது கான்பிகர் செய்வது எப்படி என்று உங்களுக்கு கேள்வி இருந்தால், கூகிளின் இந்த உதவி பக்கத்தை பயன்படுத்துங்கள் - http://www.google.com/inputtools/windows/installation.html.
3. இப்போது, எங்கே தமிழில் டைப் செய்ய வேண்டும் என்றாலும், உங்களின் லேங்குவேஜ் பாரில் தமிழ் தேர்வு செய்து விட்டு தமிங்கலத்தில் அடித்தால் போதும்..

சூப்பர் :)

ஏதேனும் உதவி தேவை என்றால் கேளுங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கலை, உமா, இந்திரா,
இந்த இழையை மறந்து தான் போய் விட்டேன் :( சாரி...

இன்னும் ஒன்றிரண்டு நாளில் கலை உங்கள் கேள்விக்கும், நம்ம பட்ஜெட் தொடரின் அடுத்த பகுதியையும் அப்டேட் செய்கிறேன்...

நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...நன்றி!

ரொம்ப பயனுள்ள இழை தொடங்கியிருக்கீங்க பிவி. வாழ்த்துக்கள்.
நான் அறுசுவைக்குள் வந்து 2 வாரங்கள்தான் ஆயிற்று. ஒவ்வொன்றையும் திருவிழா பார்க்கும் குழந்தையை போல் தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.
இடையில் ஆர்வக்கோளாறில் இரண்டு மூன்று இழை வேறு தொடங்கிவிட்டேன். இப்பொழுதுதான் எல்லவற்றையும் பொறுமையாக படித்துகொண்டிருக்கிறேன்.
எவ்வளவு திறமைசாலிகளிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்திறுக்கிறது என்று பூரிப்படைகிறேன்.
ஒரு பக்கம் கைவினை, சமையல், அறிவுப்பூர்வமான விவாதங்கள், சுற்றுலா நாம நேரிடையா போய்யிருந்தாக்கூட இப்படி பார்த்திருப்பமானு தெரியல.
இப்ப நீங்க கணிணி வகுப்பு எடுத்துட்டிருக்கீங்க. நாங்க எல்லாம் பணம் கட்டாம படிக்கிரோம்னு அடிக்கடி கட்டடிக்காதீங்க டீச்சர்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

இடையில குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
நீங்க பிவியா? பிந்துவா? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

சமையலைத் தாண்டி பெண்களுக்கு உபயோகமான இழை உங்களுடையது. என்போன்ற கருத்து எழுதவே யோசிக்கும் சமூக சேவகிகளின் சார்பாக வாழ்த்துகிறேன் பிந்து. தொடருங்கள் உங்கள் சேவையை.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நேரடியா தமிழ்ல பதிவிடறதுக்கு உபயோகமான தகவலை பகிர்ந்துருக்கீங்க. நன்றி . காப்பி பேஸ்ட்க்கு ஒரு வணக்கம் கார்டு போட்டாச்சு .:)

நேரடியா தமிழ்ல பதிவிடறதுக்கு உபயோகமான தகவலை பகிர்ந்துருக்கீங்க. நன்றி . காப்பி பேஸ்ட்க்கு ஒரு வணக்கம் கார்டு போட்டாச்சு .:)

கலை,
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் நீங்கள் கேம்ஸ் டவுன்லோட் செய்வது பற்றி கேட்டிருந்தீர்கள். பிரீவேர் கேம்ஸ் எனும் போது, பொதுவாக நல்ல ரிலையபிள் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்வது நல்லது.

http://download.cnet.com/windows/games/?tag=rb_content;main ஒரு நல்ல ஆப்ஷன். அதில் பல பிரிவுகளில் கேம்ஸ் பிரித்து வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டிய கேட்டகரியை தேர்வு செய்து விட்டு, இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன்களில் "ப்ரீ" என்னும் ஆப்ஷனை தேர்வு செய்தால், வெறும் ப்ரீ கேம்ஸ் பட்டியல் வரும். அதில் இருந்து உங்களுக்கு விருப்பமான கேம்ஸ் நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.

மற்றபடி அவ்வளவாக தெரியாத சைட்டுகளில் இருந்து டவுன்லோட் செய்தால் சற்றே எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது 7 உபயோகப் படுத்துகிறீர்களா? எந்த அன்டி-வைரஸ் சாப்ட்வேர் உபயோகப் படுத்துகிறீர்கள்? பொதுவாக எல்லா வித அன்டி-வைரஸ் சாப்ட்வேரும், உங்களின் டாஸ்க் பாரின், வலது பக்கம் சிறிய ஐக்கானாக இருக்கும். நீங்கள் அதை ஒப்பன் செய்தால், பைல் ஸ்கேன் செய்யும் ஆப்ஷன் இருக்கும், அதை பயன்படுத்தி நீங்கள் டவுன்லோட் செய்த புதிய பைலை ஸ்கேன் செய்யலாம். நீங்கள் எந்த அன்டி-வைரஸ் உபயோகப் படுத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள், முடிந்தால், ஸ்டேப் பை ஸ்டேப் செய்முறை தர முயற்சிக்கிறேன் :)

ஒருவேளை டவுன்லோட் செய்யாமல், ஆன்லைனிலேயே நீங்கள் விளையாட விரும்பினால், http://www.miniclip.com/games/en/ ஒரு நல்ல தளம். பல வகையான விளையாட்டுக்கள் இங்கேயும் இருக்கின்றன. இங்கே இருப்பவை எல்லாம் பிளாஷ் கேம்ஸ்.

http://www.sticksports.com/games/stick-cricket/ தளத்தில் பலவிதமான ஸ்போர்ட்ஸ் கேம்ஸ் இருக்கிறது.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்