நான் இதற்கு ளேமேல் என்ன செய்ய தோழிக

எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்
. நான் இந்த பதிவை ஏற்கனவே அறுசுவையில் போட்டு விட்டேன் உங்கள் அனைவரின் அறிவுரை படி நான் மிகவும் பொறுமையுடன் தான் நடந்து கொண்டேன் மற்றும் என் சகோதரிகள் குடும்பத்தில் இருந்தும் சமாதானத்திற்கு வந்து பேசி பார்த்தனர் ஆனாலும் அவர் சமாதானம் ஆக மறுக்கிறார் . அவருடைய் சுய நலத்திற்காக ஒரு சிறிய பிரச்சனையை பெரிது படுதுகிரரோ என்று எனக்கு இபொழுது தோன்றுகிறது .
இந்த பிரச்னை தீரவே தீராதோ என்று எனக்கு இபொழுது பயம் வந்து விட்டது . என் மனம் கவலை படுவதை பற்றி அவர் கவலையே படுவதில்லை . அவர் பட்ட அவமானம் பற்றியே பேசி கொண்டு இருக்கிறார். நான் என் பிறந்த வீடு தரப்பு நியாயம் சொல்வதை காதில் கூட போடுவது கிடையாது . சில சமையம் என் மீது எரிந்து விழுகிறார் .மிகவும் வேதனையாக உள்ளது தோழிகளே . எந்த செயலும் முழுமையாக என்னால் செய்ய முடியவில்லை . கடைசி வரை என் குடும்பத்தாருடன் சேரவே முடியாதோ என்று பயமாக உள்ளது , நான் என செய்வது தோழிகளே. நினைத்து நினைத்து மனது மிகவும் பாரமாக உள்ளது .

உங்களின் ஆதங்கம் புரிகிறது தோழி. நீங்கள் பிறந்த வீட்டினரிடம் எந்த அளவு அன்பும் பாசமும் வைத்துள்ளீர்கள் என்பதும், அவர்களை எந்த அளவுக்கு மிஸ் பண்றீங்க என்பது புரியுது. இருந்தாலும் "இதுவும் கடந்து போகும்". இது மாதிரி உங்களுக்கு மட்டும் தான் என்றில்லை எவ்வளவோ வீடுகளில் நடக்கிறது. அதனால் உங்களுக்கு நடப்பது சரி என்று நான் சொல்ல வில்லை. எல்லாம் மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது முற்றிலும் உண்மை.

நீங்களே சொல்றீங்க உங்களின் கணவர் தான் அவமான பட்டதையை தான் பெரிது படுத்துகிறார் என்று. பின்பு எதற்க்காக அந்த நிகழ்வை பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டும். நமக்கு இப்பொழுது வாழ்வில் எது முக்கியம் என்பதை நீங்க முதலில் பாருங்கள். உங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் வளர்ப்பை கவனிக்கவும். நீங்கள் எப்போ நடந்த விஷயத்திற்காக சதா சர்வ நேரமும் உங்கள் கணவரிடம் உர் என்று இருந்தால் அது குடும்பத்தில் ஒரு வித கசப்பான அனுபவத்தை மட்டுமே பரப்பும். இது உங்களின் வாழ்க்கை அதை எப்படி சீர் செய்வது என்பது உங்களுக்கு தெரியும்.

கல்யாணம் ஆனவுடன் பெண்கள் செய்யும் முதல் தப்பு எப்பொழுதுமே பிறந்த வீடு மட்டும் அம்மா புகழ் பாடுவது தான். தவிறில்லை. இருந்தாலும் அதுவே புராணமாக இருக்க கூடாது. அவர்களே திருமணம் செய்து நம்மை கணவரின் பொறுப்பில் அனுப்பி வைக்கிறார்கள். நம்பி தானே அனுப்பி வைக்கிறார்கள். நாமும் நம்பி தானே வரோம். பிறகு இங்கே வந்த பிறகு எதற்க்காக இத்தனை பிரச்சனைகள். அவர் இப்பொழுது ஏதோ ஒரு கோவத்தில் இருக்கிறார். மிகவும் காயப்பட்டுள்ளார். உங்கள் வீட்டினரும் காயப்பட்டுள்ளார்கள் தான் இல்லை என்று சொல்ல வில்லை. உங்களுக்காக அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா? சமாதானம் பேசவே வந்தார்கள் என்றால் உங்களுக்காக கண்டிப்பாக பொறுத்துக் கொள்வார்கள் இல்லையா? அங்கே போக வேண்டாம் அவர்கள் இங்கே வர வேண்டாம் என்று தானே சொன்னார்? பேச வேண்டாம் என்று சொல்ல வில்லை இல்லையா? கெட்டதிலும் ஒரு நல்லதை பாருங்கள். பொறுமையாக இருங்கள். உங்கள் வீடினரையும் பொறுமையாக இருக்க சொல்லுங்க. எல்லாம் சரி ஆகும். அவரும் அந்த ஒரு நிகழ்விலிருந்து வெளி வர நேரம் கொடுங்கள். அது வரையிலும் தப்பி தவறி கூட அந்த நிகழ்வை பற்றியோ இல்லை உங்கள் வீடு சொந்தங்களை பற்றியோ பேச வேண்டாம். ஒன்றுமே பெரியதாய் நடந்து விட வில்லை. எல்லாம் சரி ஆகி அவரே உங்களை உங்களின் வீடிற்கு அழைத்து செல்வார். அதுவரையிலும் பொறுமையாக இருங்க.

இந்த விஷயம் இல்லாமல் நீங்கள் இருவரும் சந்தோஷமாக தானே இருக்கீங்க? இதனால் எதற்க்காக நீங்கள் உங்கள் வாழ்வில் உள்ள சந்தோஷத்தை விட்டு கொடுக்குறீங்க? அவர் வீடிற்கு அழைத்து சென்றால் சந்தோஷமாக போய் வாருங்கள். நீங்கள் அப்படி சந்தோஷமாக இருப்பதை பார்த்து அவரின் சொந்தங்களே உங்களின் மனநிலையை புரிந்துக் கொண்டு உங்களின் கணவருக்கு புதி மதி சொல்லக் கூடும். காலம் மாறும். எல்லாம் கண்டிப்பாக மாறும். நம்பிக்கை தான் வாழ்க்கை. நமது அம்மா அப்பா எப்படி நமக்காக சந்தோஷமாக இருந்தார்களோ அதே போல் நீங்களும் உங்களின் கணவரும் உங்களின் குழந்தைக்காக சந்தோஷமாக இருங்க. முதலில் நீங்கள் உங்கள் இருவரை புரிந்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். நம்புங்கள். எல்லாம் உங்கள் கையில் தான்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Naaன் முன்னாடியே கூறி இருந்திரன் அம்மைக்கும் எனக்கும் சண்டை ஆதலால் வளைகாப்பு செஞ்சுக்க மாட்டேன் என்று ..எங்கம்மா அதை பற்றி கவலை பட வில்லை ... இன்கள் எல்லாரும் எங்கம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுனீங்க அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மா என்று .. இப்போது சரி வளைகாப்பு வேண்டாம் வீட்டுக்கு பிரசவத்துக்கு வருவதற்கு வேண்டாம் என்கின்றனர் என் மாமியார் வைத்து பார்த்து கோல் என்கின்றனர் .. இது சண்டை போடும் நேரமா ? பாசமே இல்லாத அம்மா வெறுப்பாக உள்ளது ....
என் வீட்டுக்காரரை அவமான படுத்தும் வகையில் பேசுகின்றனர் ..அவர் ரொம்ப நல்லவர் .எவ்வளவு செய்து இருக்கிறார் என் வீட்டுக்கு .. என் அம்மாவுக்கு ஒரு பையன்
இருந்து இருந்த எண்ணலாம் செய்வானோ அதெல்லாம் செய்து கொடுத்ததும் நன்றி கேட்ட தன்மை ..என்னை கஷ்ட படுத்துறங்க ..என் சகோதரிகள் காத்து கொண்டிருந்த மாதிரி பேசுகிறார்கள் ..நான் ஊருக்கு போகவில்லை என்றாலும் கேட்க மாற்றார் என் கணவர் ..

எனக்கு அம்மா மேல் கோவம் அதிகரிக்குறது ..
வயதான காலத்தில் உள்ளனர் ..அதனால் கஷ்ட மாக இருக்குறது எனக்கு .. பிறந்த வீட்டில் மரியாதையை இல்லை என்று என் மாமியாருக்கு தெரிந்தால் அதேவியே பேசி பெரிது படுத்தி விடுவார்கள் ..எங்கம்மா நாங்கள் கட்டிய வீட்டில் உள்ளார் ..யாருமில்லை என்று தங்க வைத்து உள்ளோம் ..நீ வந்தா காலி செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார் ..எனக்கு ஒன்றுமே புரியவில்லை ..என் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ..
அவர்கள் காலி செய்து போ என்று கூறிவிடலாம் என்று தோன்று கின்றது ..

'இன்கள் எல்லாரும் எங்கம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுனீங்க அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மா என்று .' :-) உங்க அம்மா யார் என்று பதில் சொன்ன யாருக்கும் தெரியாது கண்ணா. எதற்காக அவருக்கு சப்போர்ட் பண்ணப் போகிறார்கள்! என்ன லாபம்! நீங்க சொன்னவற்றை வைத்து & எழுதிய விதத்தை வைத்து அவரவருக்குத் தோன்றியதைச் சொல்லியிருப்போம். இப்படிக் குற்றம் சாட்டுவது போல் சொன்னால் எப்படி! :-)

உங்கள் பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்போதும் எந்தக் கேள்வியையும் வைக்கவில்லை நீங்கள். நீங்களே யோசித்து உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள்.

முடிந்தவரை மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks ...

மேலும் சில பதிவுகள்