"***எங்கிருந்து வருகிறது பணம்***"

தோழிகளே,
பலபல சேனல்களில் பல கேம்ஷோஸ் நடத்துகின்றனர்.அதில் சில கிஃப்ட்கள்,வவுச்சர்கள்,இவையெல்லாம் போயி இப்போ பணம் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் யாரோடது?எப்படி இதை பரிசாக கொடுக்கின்றனர்?அறிவித்தது போல பிடிப்பில்லாமல் அனைத்தும் கிடைக்கின்றனவா?இதற்கு டேக்ஸ் இல்லையா? பணம் வைத்து விளையாடப்பட்டால் அது சூதாட்டமாகாதா?
சேனல் உருமையாளரின் பணமென்றால் கணக்கு எங்கே?
விளம்பரதாரரின் பணமென்றால் சான்று எங்கே?

இவற்றை பற்றி யோசியாமல் நாம் ஏன் கேம்ஷோவை பார்க்கிறோம்?ஏன்னா அவ்வளவு பிரெயின்வாஸ் பண்ணி,மேக்கப்போட்டு நம்மை மெய்மறக்க செய்கின்றன சேனல் உலகம்......இதில் யாருக்கு விரயங்கள் அதிகம்.
இதைப்பற்றி தோழிகளின் கருத்தை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்........

இரு சேனல்களில் வந்த கோடி நிகழ்ச்சியாகட்டும்,இப்ப சூப்பர் சிங்கராகட்டும் பணம் யாரோடது?எதற்கு கொடுக்கின்றனர்?

எனக்கும் இதே சந்தேகம் உண்டு ரேணுராஜ்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

//சேம்ஷோவை // - அது கேம் ஷோ தானே??? நல்ல நேரம்... சேம் ஷோ’னு போட்டீங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டிய வைத்துக்கொண்டே அடித்தேனா மிஸ்டேக் வந்துடுத்து......மன்னிக்கவும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.....

Oru channel la 7days 7 kelvi keakuranga. 7 kelvikkum badhil anuppanum. Mes anupina oru mes ku 3 rs, cal pannina network base panni 6 to 10 rs for per min. Mes potta reply mes la edhavadhu details keattu reply panna solvanga. Reply pannina adhukum 3 rs. Charge. Then cal pannina cal exten aagum namma kaasum pogum. evlo per try panranga? so this is one of the way of the prize money...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மக்களே... ரொம்ப சிம்பிள் லாஜிக்.

ஒரு டிவி ப்ரோக்ராம் பார்க்க நாம மாதா மாதம் பணம் கட்டறோம். அதுல ஒரு தொகை டிவி சேனலுக்கு போய் சேரும்.

மக்கள் ஒரு ப்ரோக்ராமை விரும்பி பார்த்தா அந்த ப்ரோக்ராமில் அவங்க விளம்பரம் வந்தா நிறைய பேரை ரீச் ஆகும்னு பலர் போட்டி போட்டு விளம்பரம் கொடுக்கறாங்க. ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் காசு. டிவி சேனலுக்கு போய் சேரும்.

ஏர்டல், டாடா டோகோமோ மாதிரி ஆட்களுக்கு டிவி ப்ரோக்ராமுக்கு மெசேஜ் அனுப்பினா காசு. அந்த காசை அவன் மீண்டும் டிவியில் பரிசுகள் ஸ்பான்ஸர் பண்ண பயன்படுத்தறான்.

பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ் எல்லாம் அவங்க ப்ராடக்ட் வாங்கினா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்னு சொல்றாங்க... அதனால் அவங்க சேல்ஸ் அதிகமாகுது... அதிக லாபம் வந்தா, வரும் பணத்தில் ஸ்பான்ஸர் பண்றாங்க.

ரியல் எஸ்டேட் ஆட்கள் டிவியில் ஒரு வீடு கொடுத்தா அதை பார்த்து அந்த பெயர் பிரபலமாகும்... உதவாத பில்டரை கூட பெரிய பில்டர்டா, இவன் தான் அந்த டிவியில் வீடு கொடுத்தான், இந்த டிவியில் வீடு கொடுத்தான்னு 10 பேர் போவாங்க. அவனுக்கு லாபம் எப்படி வருதுன்னு நான் சொல்லவே வேணாம்... நம்ம ஊரில் ரியல் எஸ்டேட் பற்றி உலகத்துக்கே தெரியும். ஒரு வீடு கொடுக்குறதுலாம் அவனுக்கு பெரிய விஷயமே இல்லை. ஒரு வீடு இப்ப விக்குற விலைக்கு தான் அவன் அந்த மொத்த இடத்தையுமே வாங்கி இருப்பான். ஒவ்வொரு வீடும் வித்தா பார்க்கும் காசு கோடியில் இருக்க... லட்சங்கள் பெரிய விஷயமே இல்லை.

இவங்க வீடு கொடுக்குறதால லட்சம் கூட சும்மா வருமான்னு நம்ம மக்கள் போட்டியில் கலந்துக்கறாங்க... கலந்துக்க மெசேஜ், பொருளுன்னு என்ன என்ன வழி இருக்கோ எல்லாம் பண்ராங்க. போதாதுக்கு வீடு கொடுக்கற ஷோன்னா இன்னும் ஃபேமஸாவும் ஆயிடுது. இன்னும் ஏகப்பட்ட விளம்பரம் கிடைக்குது... அதி இருந்து ஏகப்பட்ட பணம் வருது.

ப்ரோக்ராம் பண்ற ஒரு நடிகைக்கு ஒரு புடவை கொடுத்தா... “அட இந்த சாரீ நல்லா இருக்கே...”னு நாம எங்க வாங்கன்னு தேடுவோம்... ப்ரோக்ராம் முடிவில் “வாட்ரோப் ஸ்பான்ஸர்ட் பை”னு கடை பேரை பார்த்ததும், அடுத்த முறை அந்த புடவை வாங்க அங்க போயிட மாட்டோமா?

ரொம்ப சிம்பிள் தான்... விளம்பரம் என்பது மார்கெட்டிங்... ஒரு பொருள் மக்களிடம் போய் ரீச் ஆக விளம்பரம் வேணும்... இல்லன்னா எவ்வளவு நல்ல பொருள்னு கடைகாறர் சொன்னாலும் “பேரே புதுசா இருக்கே, கேள்விபட்டதே இல்லை”னு வாங்க மாட்டோம். அதனால் தான் ஒவ்வொரு கம்பெனியும் விளம்பரம் தேட ஒன்னு பணம் கட்டி விளம்பரம் போடுறான், இல்லன்னா துணி காஸ்டியூம்னு ஸ்பான்ஸர் பண்றான், இல்லன்னா பரிசுகள் வழங்கி பேரை போடறான்.

மொத்தத்தில் ஒவ்வொரு விஷயமும் விளம்பரப்படுத்த முதல்ல காசு கட்டுறாங்க... அப்பறம் வியாபாரம் அதிகமாகும்... லாபம் அதிகமாகும்... மீண்டும் அதில் ஒரு பங்கு விளம்பரத்திலேயே முதலீடாகும்... (நிச்சயம் இங்கே அது செலவில்ல... முதல் தான்)

புரிஞ்சுதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்