புதினா ஆலூ

தேதி: July 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (8 votes)

 

உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
அம்சூர் பொடி - அரை தேக்கரண்டி அல்லது எலுமிச்சை - 1/2
புதினா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
புதினா - கொஞ்சம்
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
புதினா - 2 மேசைக்கரண்டி அளவு


 

அரைக்க வேண்டியவற்றை கையால் இடித்து அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும்.
பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் புதினா தூள் சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக பொடியாக நறுக்கிய ஃப்ரெஷ் புதினா இலைகள் தூவி எடுக்கவும். சுவையான புதினா வாசம் மிக்க ஆலூ தயார்.

பேபி பொடேட்டோ பயன்படுத்தியும் செய்யலாம். புதினா தூள் கடைகளில் கிடைக்குமா என தெரியாது. ஆனால் புதினா வாங்கி வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்து வைத்து கொண்டால் நிறைய மசால் வகைகளுக்கும் கூட பயன்படும். அம்சூர் பொடிக்கு பதில் எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் கடைசியாக அடுப்பில் இருந்து எடுத்த பின் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புதினா ஆலூ நள்ள வாசனையா இருக்கும் போல. நான் அடுத்த வாரம் சாம்பார் வைக்கும் போது இத செஞ்சு பாக்குறேன்,வாழ்த்துக்கள் வனிதா.

puthina aalu.....parka azhaga iruku...yentha kulambuku nalla irukum nu..solla mudiyuma

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

வனி, புதினா ஆலு .. வாசம் காங்கோ வரைக்கும் வந்துருச்சின்னு சொன்னா நீங்க நம்ப போறதில்லை. மனக்கண்ணில் செய்து டேஸ்டும் பார்த்துட்டேன். பிரமாதம் !!! நிஜத்திலும் ஒருநாள் செய்துட்டு சொல்லிடறேன். புளியோதரை,எலுமிச்சை சாதத்திற்கு பொருத்தமோ பொருத்தம் போங்க... வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

puthinaa aalu vaasam qatar varaikum vanthuruchu ga..
kaango vanthuruchunu sonna nambava maadaga

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

Vani.....
i tried today.... my son liked very much... thank you......

GOOD LUCK !!!
Anitha

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல பெயர் :) மிக்க நன்றி. சாம்பார், தயிர் சாதம், லெமன் ரைஸ் போன்றவைக்கு நன்றாக இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துச்சா வந்துச்சா??? செய்தா வாசத்தோட சுவையும் வரும் ;) ஹிஹிஹீ. அவசியம் உங்க லேபில் முயற்சி செய்துட்டு சொல்லுங்க... மனக்கண்ணில் கிடைத்த சுவை கிடைத்ததா என்று :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. குட்டீஸ்க்கு பிடிச்சுதுன்னு கேட்பது எப்பவும் தனி மகிழ்ச்சி தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா