மிக்சட் வெஜிடபுள் கறி

தேதி: July 31, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பச்சை பயறு - 100 கிராம்
முள்ளங்கி - சிறிதளவு
பரங்கிக்காய் - சிறிதளவு
பீர்க்கங்காய் - சிறிதளவு
கத்தரிக்காய் - 2 (சிறிது)
உருளைக்கிழங்கு - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 8
தாளிக்க:
கடுகு, உளுந்து - அரை மேசைக்கரண்டி
சீரகம் - கால் மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

முதலில் பச்சைபயறை வாசம் வரும் வரை வாணலியில் வறுத்து, கழுவி அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
எல்லா காய்களையும் சுத்தம் செய்து ஒரே மாதிரியான அளவில் நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அரிந்தும், பச்சை மிளகாயை கீறியும், பூண்டை நன்றாக இடித்தும் வைக்கவும்.
பாத்திரத்தில் நீர்விட்டு நறுக்கிய காய்களுடன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து வேக விடவும். முக்கால் வேக்காடு வெந்ததும் ஏற்கனவே வேக வைத்த பச்சை பயறை சேர்ந்து 10 நிமிடம் வேக விடவும்.
பின்னர் இறக்கி, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளிக்கவும். பின் காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிது வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதை இறக்கி வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுவையான சத்தான மிக்சட் வெஜிடபுள் கறி ரெடி. வெயில் காலத்திற்கு ஏற்ற கறி. இது சாதத்திற்கு நன்றாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

1. இங்கே கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டுமே கிடைக்காது. நீங்கள் தாளிக்கும் போது ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து கொட்டிய பின் கொத்தமல்லி இலை தூவி மூடி வைக்கவும்.
2. இதில் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை கூட்டியும் குறைத்தும் செய்யலாம். முக்கியமாய் குழந்தைகளுக்கு என்றால் காரத்தை நன்றாக குறைத்துக் கொள்ளவும். சிறு குழந்தைகளுக்கு மேலாக சூப் மட்டும் எடுத்தும் கொடுக்கலாம்.
3. இதில் சேர்க்கப்படும் அனைத்து காய்கறிகளும் நீர்சத்து உடையவை. ஆதலால் வெயில் காலத்திற்கு ஏற்ற நல்லதொரு கறி இது. இருப்பினும் ஆஸ்த்துமா (அ) வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் இந்த உணவை தவிர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுபெர் டிஷ் அக்கா பாக்கவெ அட்டகாசமா இருக்கு ஹ்ம்ம் செம டேஸ்ட் ஆ இருக்கும் ல அக்கா ரெசிபி கலர்ஃபுல் டிஷ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர், சூப்பர், சூப்பர் அக்கா அருமையா செய்து இருக்கீங்க,நானும் ட்ரை பண்ணிட்டு சொல்லுர,இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்..................

ஹாய் பிரேமா, நல்ல ஒரு ஹெல்தியான டிஷ் சூப்பர்........... வாழ்த்துக்கள்.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Superb pa... Nalla protein rich vegetable mixed healthy curry. nallaa taste ah irukum nu parkum podhe theriyudhu. But inga vegetables mix panni pottu kuzhambu or curry naanga seiya matom so ennala try panna mudiyadhu. so enaku mattum neenga oru parcel podunga pls...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஆரோக்கியமான குறிப்பு வாழ்த்துக்கள்! படங்கள் கொள்ளை அழகு ....!

உங்க மிக்ஸ்ட் வெஜிடபுள் கறி பார்க்க வெஜி சூப் போலவே இருக்கு. யம்மி. எல்லா காய்கறிகளோடு பருப்பும் சேர்த்திருப்பது நல்லாஇருக்கு. சத்தான டிஷ். வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்

கனிமொழி : ஆமா கனி இந்த டிஷ் நல்ல டேஸ்டியா இருக்கும். அதும் அந்த பரங்கிக்காய் நல்லா வெந்து கரைந்திருக்கும்போது சுவை ரொம்பவே நல்ல இருக்கும். பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கனி...

சங்கரி : வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கண்டிப்பா செய்து சாப்பிட்டு சொல்லுங்க...

ரேவதி : வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல....

நித்தி : மிக்க நன்றி... நானும் ஆரம்பத்தில் குழம்பில் இந்த மாதிரி காய்கள் கலந்து போட்டு செய்தது இல்லை, ஆனால் என் கணவருக்கு இந்த மாதிரி நிறைய காய்கள் சேர்த்து செய்தால் ரொம்ப பிடிக்கும். பார்சல் எதுக்கு நித்தி, இந்தியா வரும்போது செய்து நேரிலேயே கொண்டு வந்து தந்திடறேன்...

விப்கி : வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அபி : ஆமாம் அபி, இது சூப் போலே தான் இருக்கும், ஆனால் சாதத்திற்கு சுவை நல்லாவே இருக்கும். செய்து பாருங்க... வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அபி...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நல்ல ஹெல்தியான டேஸ்டியான குறிப்பு. படங்களும் அருமை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரேமா சுவையான சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி : பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் வனி... செய்து பார்த்திட்டு சொல்லுங்க...

ஸ்வர்னா : வாழ்த்துக்களுக்கு வண்டி வண்டியாய் நன்றிகள் ஸ்வர்... அவசியம் செய்து பாருங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்