தேதி: August 1, 2012
ப்ரிண்ட் அவுட் எடுத்த விருப்பமான படம்
ohp ஷீட் அல்லது எக்ஸ்ரே
அக்ரிலிக் கலர்ஸ்
தண்ணீர்
ப்ரஷ் - 00
கிலிட்டர்ஸ் கோல்டு மற்றும் ப்ளூ நிறங்கள்
மார்க்கர் - கருப்புநிறம்
ohp ஷீட் அல்லது எக்ஸ்ரே ஷீட்டின் மேல் ப்ரிண்ட் அவுட் எடுத்த படத்தினை வைக்கவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

படங்களுக்கு வண்ணம் தீட்டும் போது 1:1 என்ற அளவில் தண்ணீரும், பெயிண்ட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டின் மேல் ஒரு துளி பெயிண்ட், ஒரு துளி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்துக் கொள்ளவும்.

இப்போது படங்களுக்கு பொருத்தமான வண்ணம் தீட்டவும். தாமரை பூவுக்கு பிங்க் கலரில் வண்ணம் தீட்டவும்.

மாலைகளுக்கு மஞ்சள்நிறமும், முகம், கை, பாதத்திற்கு க்ரீம் நிறமும் பயன்படுத்தவும்.

மாலையின் இடையில் சிவப்புநிறம் கொடுக்கவும். ஆடைகளுக்கு நீலநிறமும், அதன் கீழ் பார்டருக்கு பேர்ல் கோல்டுநிறமும் கொடுக்கவும்.

டர்பன் மற்றும் தோகைக்கு படத்தில் உள்ள படி வண்ணம் கொடுக்கவும். முதல் வட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் வெள்ளைநிறம் கலந்து பெயிண்ட் செய்யவும். அடுத்த வட்டத்திற்கு ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.

ஆடைகளின் மேல் கோல்டு கிலிட்டர்ஸால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும்.

தண்டைக்கும் கிலிட்டர்ஸ் கொண்டு அலங்கரிக்கவும். சிறிய மாலைகளுக்கு ப்ளூ நிற கிலிட்டர்ஸூம், நகைகளுக்கு கோல்டுநிற கிலிட்டர்ஸூம் கொடுத்து முடிக்கவும். கடைசியில் கருப்புநிற மார்க்கரை கொண்டு படத்தில் உள்ளது போல் அவுட் லைன் கொடுத்து முடிக்கவும்.

இந்த படத்தின் ஓரத்தை சுற்றி பார்டர் வரைந்து கலர் கொடுக்கவும். அழகான மைசூர் கஞ்சிஃபா பெயிண்டிங் ரெடி. படத்திற்கு வண்ணம் கொடுப்பது என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது. இதை லேமினேட் அல்லது ப்ரேம் செய்து வைக்கலாம்.

Comments
டீம்
வாவ்.... வார்த்தையே இல்லை!!! ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
admin
woooooooooooow romba azhaga irukku. chancey illa. admin ku vazhththukkal.
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
Ohp Sheet
What is the purpose of ohp sheet?
அன்புடன்
லக்ஷ்மி
ohp ஷீட்
லெஷ்மி மேடம்,
தண்ணீரும், பெயிண்டும் கலந்து பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரில் பெயிண்ட் செய்வதால், பேப்பர் மடங்காமல் இருக்க அடியில் பேப்பரையோ அல்லது அட்டையோ பயன்படுத்தினால் தண்ணீரில் ஊறி இரண்டும் ஒட்டிக் கொள்ளவோ அல்லது அடியில் இருக்கும் பேப்பரின் மேல் பெயிண்ட் பரவ வாய்ப்பு உள்ளது. ohp ஷீட் அளவுக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்த பேப்பர் இருப்பதால் உங்கள் வசதிக்குகேற்ப திருப்பி வைத்து வரையலாம். பெயிண்ட் ஷீட்டின் மேல் பட்டாலும் துடைத்து விட்டு வேறு ஏதாவது கைவினை செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
Thanks
Arusuvai team, thanks for your kind reply :)
அன்புடன்
லக்ஷ்மி