தேங்காய் தக்காளி சட்னி

தேதி: August 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்-1
பொட்டுக்கடலை-ஒரு கைப்பிடி
புளி- ஒரு சிறு நெல்லி அளவு
பச்சை மிளகாய்-6
கொத்தமல்லி இலை- ஒரு கை
கறிவேப்பிலை- 10 இலைகள்
சிறிய வெங்காயம்[மிகப்பொடியாக அரிந்தது]- அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்


 

தேங்காய்,பொட்டுக்கடலை,புளி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெயை ஊற்றவும். அதில் கடுகு, உ.பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, காயம், கொத்தமல்லியைச் சேர்த்து குழைய வதக்கி அரைத்த சட்னியைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களுடைய தேங்காய் தக்காளி சட்னி இன்று இரவு தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருந்த்து. குறிப்புக்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்