குழந்தை பற்றிய பாடல்கள்

பிறந்திருக்கும் உங்கள் குழந்தைக்காகவும். பிறக்க போகும் என் குழந்தைக்காகவும். கொஞ்சம் குழந்தை பற்றிய சினிமா பாடல்கள் தாருங்களேன் தோழிகளே

அன்புத் தோழி!!
இந்த பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

1) படம்: அபியும் நானும்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…
------------------------------------------------------------

2) படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]
----------------------------------------------------------------------------

3) படம் : வால்டர் வெற்றிவேல் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்
வரிகள் : வாலி

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஒ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா

நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் இன்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கொண்டு சூடர் வீசும் தெய்வம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஒ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

கேளடி கண்மணி படத்தில் கற்பூர பொம்மை ஒன்று ....

பவித்ரா படத்தில் அழகு நிலவே கதவு திறந்து ....

கல்கி படத்தில் முத்து முத்து மலரே....

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் த்யாகம்
அழுகை தான் ஞ்யானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

பூமியை நேசிக்கும் வேர் போலவே

உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போஅலவே

உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ரெண்டே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்கு கவிதையில்
எழுதும் கடிதம்!

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா

எழுதுகிறேன் ஒரு கடிதம்

மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

முந்நூறு நாள் கர்ப்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே

நாள் ஒரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீ ஆடடி
உலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல்
ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடை ஏது
விழாமலே விழும் மழை நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராது துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது

பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே

வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
மலடியின் மகளே
மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

from Chinna kannamma

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வசத்தில் வந்து உதித்து
உயரில் கலந்தாய் என் உயிரே
உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே
(எந்தன் )
வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தாங்க சிலையே

தாயின் மடி சேரும் கன்று போல
நாலும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா .....
(எந்தன் )

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி ...
உறவின் பலனாக காதலின் அமுதாக
பிறந்தை நீயும் கனியே
காண கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிகின்ற வைரமே
கோடி குடுத்தாலும் உன்னை போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்கா மணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே...
ஆராரோ ஆரிராரோ.. ஆரிரோ ஆரிரரோ..
ஆராரோ ஆரிராரோ.. ஆரிரோ ஆரிரரோ..

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ரொம்ப பிடிச்சிருக்கு thank you very much

நம்பிக்கையே வாழ்க்கை

திரைப்படம்: ரிக்க்ஷா மாமா

தங்க நிலவுக்குள்
நிலவொன்று
மலருக்குள் மலர் இண்ட்று
வந்ததே

எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள்
சுகம் ஒன்று தந்ததே

கொடி முல்லை கொடி கட்டும்
மன்னனோ
இன்ப சிரை பட்டு
திரை இட்ட கன்னனோ

கொடி முல்லை கொடி கட்டும்
மன்னனோ
இன்ப சிரை பட்டு
திரை இட்ட கன்னனோ

நிளவுக்குள்
வன்ன மலருக்குள்

தங்க நிலவுக்குள்
நிலவொண்ட்று
மலருக்குள் மலர் இண்ட்று
வந்ததே

எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள்
சுகம் ஒன்று தந்ததே

===ஸ்
முதுக்கள் கொட்டிய நட்சதிரம்
அந்த நட்சதிரம்
என் பக்கம் வரும்
விதுக்கள் கட்டிய
முது சரம்
என் பக்கம் வந்து
பொன் முதம் தரும்
ஒரு முது தான்
உடைபட்டு தான்
பூவாய் மாரும்
அதை தொட்டு தான்
அணை கட்டி தான்
பாடும் ராகம்
வன்ன சிலை பெட்று
தரும் அன்பு சின்னக்கிளி
கலை கட்று தரும் அந்த
வன்னக்கிளி
சிந்திடமால் வந்த தேனே
சொந்தமானேன் நான்

===

நிளவுக்குள்
வன்ன மலருக்குள்

தங்க நிலவுக்குள்
நிலவொண்ட்று
மலருக்குள் மலர் இண்ட்று
வந்ததே

எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள்
சுகம் ஒன்று தந்ததே

===

இந்த பூவைக்கு
பூ வைது சூடிடும்
மாமனுக்கு
நல்ல தொகையின் தொகையில்
சொக்கிடும் மாமனுக்கு

அன்புகும் பங்கிர்கு
ஆள் வர போகுது
அம்ம என் அப்ப
என்றாடிட போகுது

===

வெட்கதில் மின்னிடும் தங்கக் குடம்
அது தொட்டு தரும்
உன் சொர்கம் வரும்
கர்பனை கட்டிய முல்லைசரம்
எனை கட்டி கொள்ள
தன்ன் கைய தரும்
பல வன்னம் தான்
ஒரு என்னம் தான்
பாலாய் ஊரும்
ஒரு செல்லம் தான்
இவன் செல்வன் தான்
நாளை தோன்றும்
கன்னம் ரனில் சின்னம்
பல என்று
என்னி தரும்
இன்னும் பல இன்பங்கலை
சொல்லி தரும்
முது மாலை
நிதம் போட
சிதமானேன் நான்

===

நிளவுக்குள்
வன்ன மலருக்குள்

தங்க நிலவுக்குள்
நிலவொண்ட்று
மலருக்குள் மலர் இண்ட்று
வந்ததே

எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள்
சுகம் ஒன்று தந்ததே

கொடி முல்லை கொடி கட்டும்
மன்னனோ
இன்ப சிரை பட்டு
திரை இட்ட கன்னனோ

கொடி முல்லை கொடி கட்டும்
மன்னனோ
இன்ப சிரை பட்டு
திரை இட்ட கன்னனோ

நிளவுக்குள்
வன்ன மலருக்குள்

தங்க நிலவுக்குள்
நிலவொண்ட்று
மலருக்குள் மலர் இண்ட்று
வந்ததே

எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள்
சுகம் ஒன்று தந்ததே
------------------------------------

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

படம் : தெய்வத் திருமகள்

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

நன்றி நன்றி நன்றி ......ஜூன் ஜுலை மாதத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில் - பிரியமானவளே படப் பாடல் வரிகள் தரமுடியுமா?

நம்பிக்கையே வாழ்க்கை

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

நம்பிக்கையே வாழ்க்கை

சுபா சூப்பர்ங்க

எவர் கிரீன் பாடல்கள்.

"இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவினில் தொட்டிலை" இதை யாரவுது எழுதுங்கப்பா

மேலும் சில பதிவுகள்