வணக்கம் தோழிகளே
இந்த தளத்திற்கு நான் புதியவள். என் தலையில் புண் மாதிரி பக்கு பக்கா உள்ளது. இது என்ன என்று எனக்கு தெரியவில்லை. முடியும் அதிகமாக கொட்டுகிறது. தயவு செய்துச் இதற்கு ஒரு நல்ல தீற்வு கூறவும்.

ஹலோ அம்மு, தவறாக நினைக்க
ஹலோ அம்மு,
தவறாக நினைக்க வேண்டாம்
இது ஒரு தமிழ் இணையத் தழம்,தயவு செய்து இதில் தமிழை உபயோகிக்கவும்,நீங்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிங்கலத்தில் கேட்ப்பதால் விடை தெரிந்தவர்கள் கூட பதில் அளிக்காமல் இருக்கலாம்.
உங்களுக்கு ஆங்கிலம் தான் உபயோகிக்க வேண்டும் என்றால் YAHOO ANWSERS சென்று கேளுங்கள்
நன்றி தோழி
முடி வளர...
ஹலோ அம்மு,
எனக்கும் இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. டாக்டரிடம் காட்டியபோது, சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் என்று சொல்லி, topisol என்ற ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்தார்கள். அதை வருடக் கணக்கில் உபயோகித்தும், நிறுத்தினால் உடனே மீண்டும் வந்து விடும். பிறகு நான் ஒரு வலைத்தளத்தில் பார்த்த விளம்பரத்தை முயற்சி செய்து பார்த்தேன். HAR VOKSE எனப்படும் அயல் நாட்டு மாத்திரைகள். முழுக்கவும் இயற்கைப் பொருள்களால் ஆனது என்பதால், இதை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏதும் வருவதில்லை. இப்பொழுது முடி உதிர்வது நின்றுவிட்டது. அடர்த்தி கூட அதிகமாகி வருவதாகப் பார்ப்பவர்அள் சொல்கிறார்கள்.
thalayil pun
same as above
எனக்கும் இந்த பிரச்சனை பல(8)
எனக்கும் இந்த பிரச்சனை பல(8) வருடங்களாக உள்ளது.2004 டாக்டரிடம் காட்டிய போது சத்து குறைவு என்று கூறி ஒரு சாப்பு candid tv shampoo எழுதிக்கொடுத்தார்கள் அதன் பின் முடி அதிகம் வளர்ந்தது ஆனால் அந்தசாம்பு ஒரு துருநாற்றம் வீசும் அதனால் அதை விட்டேன் 2 முறை உபயேகித்தேன். நல்ல பலன். ஆனாலும் முடி உதிர்ந்தது பின் 2006 ல் நாட்டுமருந்து சாப்பிட்டேன். பின் 90% சரியானது ஆனால் இப்போது ஒரு இடத்தில் உள்ளது தயிர் தலையில் தேய்த்தால் உடனே சரியாகிறது ஆனால் மீண்டும் உடல் சூடானால் வருகிறது.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
HAR VOKSE
ஹலோ தோழி
என் பெயர் கணேஷ் எனக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது இன்று தான் மொட்டை போட்டால் முடி வேகமாக வளறும் என போட்டேன் இப்பொழுது தான் தலையில் அதிகமாக புண் இருப்பதை கவணித்தேன் இதற்கு விடை காணும் பொழுது உங்கள் பதிவை படித்தேன் அந்த HAR VOKSE மருந்து எங்கே கிடைக்கும், விலை, எப்படி உபயோகப்படுத்துவது?
HAR VOKSE
ஹலோ

கணேஷ்
உங்களுக்காக அதைப் பற்றி இணையத்தில் தேடப் போக... முதலாவது வந்து கண்முன் நின்ற விடயம்... 'ஆண்கள் முடி வளர்ச்சிக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம், பயனில்லை,' என்று சொல்லிற்று. ;) நல்ல கமண்ட்சும் கிடைச்சிருக்கு. நீங்களே படிச்சுப் பார்த்தால்தான் நல்லது.
அமேசன்ல 60 மாத்திரை உள்ள பாட்டில் $66 அளவு + போஸ்டேஜ் போட்டிருக்கிறாங்க. (எந்த நாட்டு டாலர் என்று பார்க்கல.)
இப்போ மொட்டையாக இருக்கிறது என்றால் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக இதுதான் நல்ல சந்தர்ப்பம். போங்க.
நீங்க ஹெல்மெட் போடுவீங்களா? சிலருக்கு அதுவும் சிரமத்தைக் கூட்டும்.
- இமா க்றிஸ்