சமையலில் சொல்ல விரும்பினேன்

ஹாய் ! புதுசா சமைக்க வருபவர்களுக்கு டிப்ஸும்,குழம்புபொடி தயாரிக்கும் முறையும், குழம்புபொடி உபயோகித்து உணவு பொருட்கள் செய்யும் முறைகளையும் பற்றி பேசுவோமா..

குழம்புபொடி தயாரிக்கும் முறை

1) நீட்ட மிளகாய் வற்றல் - 1/4 கிலோ,கொத்தமல்லி (அ) தனியா - 1/2 கிலோ -->வெய்யிலில் 2 நாள்கள் காய வைக்கவும்.
2) கறிவேப்பிலை 2 (அ) 3 டம்ளர் - வெறும் வாணலியில் வறுக்கவும்.கையில் பொடித்தால் பொடியணும்.முறுகலாக இருக்கணும்.இளம்பச்சை நிறம் மாறி கரும்பச்சை நிறமாகிருக்கும்.கண்டிப்பாக கருக கூடாது.
3) கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம்,சோம்பு(அ)பெருஞ்சீரகம், கடலை பருப்பு, துவரம் பருப்பு,பொரிகடலை - தலா 50 கிராம்,பச்சரிசி - 1 கைப்பிடி,கட்டி மஞ்சள் - 2 துண்டு,கட்டி பெருங்காயம் - 2 துண்டு -->அனைத்தையும் சேர்த்து வெறும் வாணலியில் கடுகு வெடித்து,பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும்.

அனைத்தையும் சேர்த்து மெசினில் அரைக்கவும்.அரைத்த பொடியை பேப்பரில் ஆற வைத்து பெரிய சில்வர் பாத்திரத்தில் பிளாஸ்டிக் ஷீட் வைத்து மூடவும்.தேவைக்கு சிறிய டப்பாவில் எடுத்து வைத்து கொள்ளவும்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சாம்பார் முறை 1.
1) தண்ணீரில் காய்களையும்,பல்லாரி(அ)வெங்காயம்,தக்காளி,காய்க்கு தேவையான உப்பு,மஞ்சள் தூள் அனைத்தையும் அவிக்கவும்
2) காய் வெந்து முடியும்போது புளிகரைசல் விடவும்.
3) புளியின் பச்சை வாசனை போனதும் பொடியும், 1 நிமிசம் கழித்து குக்கரில் அவித்த பருப்பும்,மீதி உப்பு சேர்க்கவும்.
4)பருப்பு கொதி விட்டதும் காயம் சிறிது சேர்க்கவும்.
5)இறக்கியதும் கொத்தமல்லி கீரை பொடியாக அரிந்து சேர்க்கவும்
6)கடைசியாக தாளிப்பு:கடுகு,உளுந்து,சீரகம்,கறிவேப்பிலை.காய்ந்த மிளகாய் வற்றல்.பொடியாக நறுக்கிய பொடி வெங்காயம்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சாம்பார் முறை 2.
1) புளிகரைத்த தண்ணீரில் பொடியும்,காய்களையும்,பல்லாரி(அ)வெங்காயம்,தக்காளி,காய்க்கு தேவையான உப்பு,மஞ்சள் தூள் அனைத்தையும் அவிக்கவும்
3)காய் வெந்து முடியும்போது குக்கரில் அவித்த பருப்பும்,மீதி உப்பு சேர்க்கவும்.
4)பருப்பு கொதி விட்டதும் காயம் சிறிது சேர்க்கவும்.
5)இறக்கியதும் கொத்தமல்லி கீரை பொடியாக அரிந்து சேர்க்கவும்
6)கடைசியாக தாளிப்பு:கடுகு,உளுந்து,சீரகம்,கறிவேப்பிலை.காய்ந்த மிளகாய் வற்றல்.பொடியாக நறுக்கிய பொடி வெங்காயம்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சாம்பார் முறை 3.
1)முதலில் தாளிப்பு:கடுகு,உளுந்து,கறிவேப்பிலை. 2)பல்லாரி(அ)வெங்காயம்,காய்களையும்,தக்காளி,காய்க்கு தேவையான உப்பு,மஞ்சள் தூள் அனைத்தையும் சிறிது(அ)பாதி வேக்காடு வதக்கவும்
3)புளிகரைத்த தண்ணீரில் பொடியும் சேர்த்து காயை முழுதாக வேக விடவும்
4)காய் வெந்து முடியும்போது குக்கரில் அவித்த பருப்பும்,மீதி உப்பு,காயம் சேர்க்கவும்.
5)இறக்கியதும் கொத்தமல்லி கீரை பொடியாக அரிந்து சேர்க்கவும்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

வாழைத்தண்டு, கீரை, முட்டைகோஸ், சவ்ஸவ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய், கொத்தவரை குடைமிளகாய், கோவக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், நூல்கோல் பரங்கிக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், மாங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

1)எண்ணெய்யில் வெண்டைக்காய்,வாழைக்காய்,கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் இவற்றில் ஏதேனும் ஒன்று.குழம்பு பொடி,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்..
2)ஒரு கொதி வந்த தண்ணீரில் 3 நிமிடம் சேனைக்கிழங்கு போடவும்.பின் பொடியும்,உப்பும் சேர்த்து வதக்கவும்
3)ஏற்கனவே அவித்த சேப்பங்கிழங்கு (அ) கருணைக்கிழங்கு ,குழம்பு பொடி,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்..
4)எண்ணெய்யில் குழம்பு பொடி,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்..பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். பூசணிக்காய் சேர்த்து முறுகலாக வதக்கவும்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

Akka rendu perukku sambar,kuzhambu like mutton,chicken evlo masala vaikanum nu sollunga akka.enaku next month marriage.so samayalil sila kootu,poriyal vagaigal muraiyum sollunga.konjam tips kooda sollunga.samayal arichuvadi padichen.but adhu paadhiyoda nindruvittadhu.adhu pol veru ilai irundhaalum link kudunga akka.illaina neengale indha ilaiyil sollunga akka enna madhiri beginnersku helpful a irukkum.

Anything is good for something

-

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

அன்பு நித்யசரவணன் சகோதரிக்கு
அறுசுவையில் நிறைய தோழிகள் அளவுகளோடும்,படங்களோடும் குறிப்பு கொடுத்துள்ளனர்.நீங்கள் கவனித்தால் தெரியும்.நான் அளவு எதுவும் சொல்லலை.உப்பு,புளி,காரம் என்பது அவரவர் விருப்பம். தனி தனி குறிப்பாக அனுப்பமுடியாமலும்,சில ஐடியாக்களை விளக்கமாகவும் சொல்லவும் நினைத்தேன்.Only for beginners and newly married members.எனது குறிப்பினால் ஒருவருக்காவது உபயோகம் இருக்கும் என்று நம்புகிறேன்ப்பா.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்