சுகந்தி,மற்ற தோழியரின் உதவி தேவை,மிகவும் அவசரம் ,ப்ளிஸ்ஸ்ஸ்

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு மார்பில் சிறு கட்டி போல உள்ளது. உடனிடையாக இந்தியா போய் அந்த கட்டியை சர்ஜரி செய்து எடுத்து பயாப்ஸி செய்து பார்க்க வேண்டும் என்று இங்குள்ள டாக்டர்கள் கூறியுள்ளார்கள். அதை கேட்டதிலிருந்து எனக்கு மனசு மிகவும் கவலையாக உள்ளது.என் தோழிக்கு அம்மா இல்லை,மாமியார் வீடும் வழியில்லை.அவளுக்கு உதவுவதற்கு யாருமில்லை.என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மனக்குழப்பத்தில் உள்ளாள்.அவளுக்கு ஒரு சின்ன பையனும்,கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.

இது ஆரம்ப நிலை என்பதால் டாக்டர் அவசரப்படுத்துகிறார்.மேலும் பயாப்ஸி செய்து அதில் வரும் ரிசல்ட் பார்க்க வேண்டும் .எனக்கு சிறு சந்தேகம் உள்ளது என்கிறார்.

தோழிகளே ராமசந்திரா மருத்துவமனையில் மிகவும் நல்ல சர்ஜன் பற்றியும்,அவருக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளவது குறித்தும் தகவல்களை தருமாறு மிகவும் தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன்.ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க பா.

சுகந்தி எனக்கு தங்களுடைய அம்மாவை காண்பிததற்கான டாக்டரின் பெயர் மற்றும் அவரிடம் எப்படி அப்பாயின்மெண்ட் வாங்க வேண்டும் என்றும் விவரங்களை தந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.உடனடியாக சர்ஜரி செய்ய வேண்டுமென்று இங்குள்ள டாக்டர் கூறியுள்ளார்.எவ்வளவு நாள் ஹாஸ்பிடலில் தங்க வேண்டும்.சுமாராக எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்ல முடியுமா.

பி.கு: என் தோழி இன்னும் ஒரிரு நாட்களில் இந்தியா போய்விடுவாள்.ப்ளிஸ் ஹெல்ப் .

ப்ளிஸ் யாராவது ஹெல்ப் பண்ணுங்க.ப்தில் சொல்லுங்க பா.மிகவும் அவசரம்.

Expectation lead to Disappointment

கவலைபடாதீங்க... ஒன்னும் இருக்காது. நாங்க பிராத்திக்கிறோம் உங்க தோழிக்காக. சுகந்தின்னு யாரை கேட்கறீங்க? சுகி?? அவங்களா இருந்தா சொல்லுங்க, இந்த பதிவை பார்த்திருக்க மாட்டாங்க, நான் வர சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீனாள், இங்கு திருவனந்தபுரத்தில் Regional cancer centre உள்ளது. இங்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை கிடைக்கும். நம்முடைய வசதியை பொறுத்து நமக்கு பில் போடுவார்கள். நல்ல மருத்துவமனை. சென்னை என்றால் செலவு அதிகமாக ஆகும் என கேள்வி பட்டிருக்கிறேன். உங்கள் தோழியிடம் இது குறித்து சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வனி க்கு தான் முதல் நன்றி சொல்லணும், அவங்க வந்து சொல்லி தான் வந்து பாத்தேன்.

மீனாள்,

நீங்க ரொம்ப பயந்து போய் இருக்கீங்க. பயப்படாதீங்க, நாங்க எல்லாரும் உங்க தோழிக்காக வேண்டிக்கறோம்.

முதலில் உங்க தோழியின் வயது என்ன? 30 குள்ள தான இருக்கும்? இந்த வயதில் வராதுன்னு சொல்ல முடியாதுங்க. மார்பில் வரும் கட்டி எல்லாம் கேன்சர் கட்டி இல்லை, நிறையா கட்டிகள் "நீர் கட்டி" கூட இருக்கலாம். உங்க தோழியின் அம்மா,அப்பா அல்லது வேறு ரத்த சொந்தத்தில் இருப்பவர்களுக்கு கேன்சர் வந்து இருக்கான்னு கேள்ளுங்க. அப்படி இருந்தால் வர வாய்ப்பு இருக்கு.

கட்டியின் ஒரு மிக சிறு பகுதியை எடுத்து பயாப்ஸி செய்வாங்க. அதன் ரிசல்ட் பொறுத்தே கட்டியின் தன்மை,வீரியம் தெரியும். எந்த வகையான கட்டி என்பதும், பயாப்ஸி செய்தது பார்த்தால் தான் தெரியும். பலர் பயாப்ஸி செய்ய பயபடுவாங்க, அதற்கு காரணம் கட்டியை ஒடித்து விட்டால் எல்லா பகுதியிலும் பரவி விடும்ன்னு. அப்படி எல்லாம் இல்லை, மருத்துவ உலகம் எங்கயோ போயிட்டு இருக்குங்க. அதனால் தேவை இல்லாம பயம் வேண்டாம். டாக்டர் அவசர படுத்துவதில் தவறேதும் இல்லை, ஒருவேளை கேன்சர் கட்டியாக இருந்தால் ஆரம்ப நிலை எனில் எளிதாக குணபடுத்தலாம்.

சென்னை -> அடையார் ரொம்ப நல்லா பாப்பாங்க, ராமசந்திரா மருத்துவமனை பத்தி எனக்கு ஐடியா இல்லைங்க. நீங்க அடையார் போன, ரிப்போர்ட் பாத்தா உடனே சொல்லிடுவாங்க. எந்த hospital ல செக் பண்ணினாலும், கடைசியா அடையார் ல ஒரு முறை பாத்துக்கோங்க. எங்க அம்மாக்கு கோயம்புத்தூர் ல தான் பாத்தோம். இங்க "டாக்டர் குகன்" ராமகிருஷ்ணா மருத்துவமனைல இருக்கார். ரொம்ப ரொம்ப அனுபவசாலிங்க. தேவை இல்லாம நம்மளை பயப்படுத்த மாட்டார். நீங்க கோயம்புத்தூர் வரதா இருந்தா சொல்லுங்க நான் அவருடையா அப்பாயின்மெண்ட் பத்தி சொல்றேன்.

உடனடியாக சர்ஜரி எல்லாம் பண்ண மாட்டங்க. முதலில் பயாப்ஸி செய்வாங்க, ரிசல்ட் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பாங்க. ஆரம்பநிலைக்கு பெரிய அளவில் பயமோ,பணமோ தேவை இல்லை. ட்ரீட்மென்ட் ஒரு ஒருதங்களின் ரிசல்ட் பொறுத்தே அமையும். நீங்க மனதை போட்டு குழப்ப வேண்டாம், கேன்சர் என்பது இப்ப எல்லாம் காய்சல் மாதிரி எல்லாருக்குமே வருதுங்க. பிறந்து ஒரு வயது முடியாத குழந்தைக்கு கூட வருது. ஆரம்பநிலைக்கு பயமோ,கவலையோ வேண்டவே வேண்டாம்.....கடவுள் கூடவே இருப்பார்.

வேற ஏதாவது சந்தேகம்ன்ன கேளுங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்க தோழியை முதலில் பயப்படாமல் இருக்க சொல்லவும். இங்கு என் தோழி ஒருவருக்கும் மாமோகிராம் எடுத்த போது சிறு கட்டி இருந்ததாம்...சில வாரங்களுக்கு முன்புதான் சர்ஜரி செய்து வெளியில் எடுத்தார்களாம்..பயாப்ஸி பார்த்து நார்மல் கட்டி என்று தெரிந்து கொண்டார்க்ளாம்..ஒரு நாள் மட்டுமே ஆஸ்பிட்டலில் தங்கியிருந்தாராம்....மார்பில் கட்டி என்றாலே கேன்சர் என்று எண்ண வேண்டாம்...தைரியமாக இருக்க சொல்லுங்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப நன்றிபா.என் தோழி தான் பயந்து போயிருக்கிறாள்.இங்குள்ள டாக்டர்கள் கான்சர் கட்டியாக தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.அது எந்த அளவு பரவியுள்ளது என்பதை உடனடியாக கண்டுப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்.பிராத்தனை செய்து கொள்ளுங்கள் பா.

Expectation lead to Disappointment

ரொம்ப நன்றி பா பதில் கொடுத்ததற்கு.என் தோழிக்கு திருவனந்தபுரத்தில் தெரிந்தவர்கள் யாருமில்லை.சென்னை என்றால் அவளின் அம்மா வழி தங்கை,தம்பி எல்லாம் இருக்கிறார்கள்.அதனால் அங்கேயே பார்க்கிறேன் என்கிறாள். பிராத்தனை செய்து கொள்ளுங்கள் தோழியே.

Expectation lead to Disappointment

ரொம்ப நன்றிபா.என் தோழிக்கு வயது 32.அவள் குடும்பத்தில் யாருக்கும் கான்சர் இல்லை.ஆமாம் சுகி என் தோழியின் டாக்டர் அது கான்சர் கட்டியாக தான் இருக்கும் என்று இங்குள்ள டெஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது.அதனால் அவர்கள் உடனே ஊருக்கு போக சொல்லிவிட்டார்கள்.

சுகி பயாப்ஸி ரிசல்ட் எத்தனை நாட்களில் கிடைக்கும்.அவர்களின் சாப்பாடு எப்படி இருக்க வேண்டும்?அடையார் தான் போக போகிறார்கள்.பயாப்ஸி பண்ணுவதற்கு எத்தனை நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டும்.வலி ரொம்ப இருக்குமா பா.கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

Expectation lead to Disappointment

கேன்சர் கட்டின்னு முன்னாடியே கண்டு பிடித்து விட்டா, ரொம்ப நல்லது தான். பயாப்ஸி ரிசல்ட் சீக்கரம் தந்துடுவாங்க. அந்த லேப் பொறுத்தது. ஒருநாளிலும் தரலாம், ரெண்டு நாளும் ஆகலாம்.பயாப்ஸி பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடலாம், ரிசல்ட் வாங்கரக்கு போனா போதும்.

எந்த நோய்க்கு ட்ரீட்மென்ட் எடுத்தாலும், மாத்திரை,மருந்தால் உடலில் பக்கவிளைவுகள் வருவது சகஜமே.ஒருவேளை கேன்சர் கட்டியா இருந்தா மட்டும், சத்தான சாப்பாடை எடுத்துக்கணும். உடலுக்கு குளுர்ச்சி தர மாதிரி உணவை சாப்பிடனும்.கேன்சர் ட்ரீட்மென்ட் பல விதம் இருக்கு.கேன்சர் பொறுத்த வரை, ட்ரீட்மென்ட் எடுப்பதன் மூலம் உடம்பில் இருந்து ஹீட் ரொம்ப வெளியே வரும். அதுக்கு தான் நிறையா ஜூஸ், இளநீர், இப்படி சாப்பிடனும். ரத்தம் ஊறக்கூடிய எல்லாம் சாப்பிடலாம். முடிந்தவரை fruits நிறையா சாப்பிடனும். இது எல்லாம் உடலுக்கு தெம்பு தர சாப்பிடனும், முதலில் மன தைரியம் தான் மிக பெரிய பலம். அது இருந்தா போதுங்க, பாதி நோய் குணமாயிடும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப நன்றி பா.உங்க பதில் பார்த்தபின் எங்களுக்கு சிறு சந்தோஷம்.ஆனால் இங்குள்ளவர்கள் இங்கு எடுத்த fnac டெஸ்ட் பார்த்துவிட்டு அது கேன்சர் கட்டி என்று தான் உள்ளது.ப்ளிஸ் உடனே இந்தியா போங்க என்று சொல்லியிருக்காங்க பா.கடவுளிடம் தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்