என்ன காய்கறிகள் , பழங்களை சாப்பிட்டால் உடம்பு குறையும்.

உடல்பயிற்சி செய்யமால் உடம்பு குறைக்க முடியுமா ?
என்ன காய்கறிகள் , பழங்களை
சாப்பிட்டால் உடம்பு குறையும்.

ஏம்மா இந்த ஆசை ? முடியும் ஆனா முடியாது இப்படிதான் பதில் சொல்லலாம் {சும்மா ஜாலிக்கு } உணவின் மூலம் நிறையை குறைக்கலாம் அனால் அது நிலைத்திருக்க உடற்பயிற்சி அவசியம் .பழங்களில் பப்பாசி ,தர்பூசணி .போன்ற குறைந்த கலோரி உள்ள பழங்கள் நல்லது .இதனை விட grapes ஜூஸ் நல்லது .வாழை பழத்தினை தவிர்ப்பது நல்லது .மரக்கறிகளில் கபோவைதரெட் உள்ள மரக்கறிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது .கரட். பீன்ஸ் ,ப்ரோகலி ,கீரை வகைகள் ,வெள்ளரிகாய் .கோவா லீக்ஸ் என்பவை நல்லது .எனினும் இவற்றை எண்ணெய், பால் விடாமல் சாப்பிடாமல் ஸ்டீம் பண்ணி சாப்பிட்டால் மகவும் நன்று .நன்றாக தண்ணீர் குடியுங்கள்.நீங்கள் ஓட்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் . .இது தொடர்பில் நிறைய விடயங்கள் இந்த தளத்தில் உள்ளது .தேடிப்பாருங்கள்.(புதிதாக ஒரு இழையை தொடங்க முன் அது தொடர்பில் உள்ள பழைய இழைகளைபாருங்கள் தோழியே } ஒவ்வொரு புதிய இழைக்கும் அட்மின் அண்ணா பணம் கட்ட வேண்டும் என்று வனிதா எங்கோ சொன்ன ஞாபகம் .அதனால் தான் சொன்னேன் தோழியே .

எல்லாப் புகழும் இறைவனுக்கே

//ஒவ்வொரு புதிய இழைக்கும் அட்மின் அண்ணா பணம் கட்ட வேண்டும் என்று வனிதா எங்கோ சொன்ன ஞாபகம்// - நானில்லை நானில்லை :) ஒரே விஷயத்துக்கு நிறைய புது புது இழை துவங்க வேணாம்னு மட்டும் தான் சொன்னேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களூட பல பதிவுகளில் நான் பார்த்திருக்கிறேன் ., மரக்கறி நு ஒரு வார்த்தை சொல்றீங்களே அப்ப்டின என்ன ?
//மரக்கறிகளில் கபோவைதரெட் உள்ள மரக்கறிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது// ???????

அன்புடன் அபி

மரக் கறி என்றால் காய் கறி என்று அர்த்தம்,கார்போ ஹைட்ரேட் உள்ளது என்றால்,கிழங்கு வகைகள்.பூமிக்கு கீழே விளையும் காய் கறிகள் உண்பதை தவிர்ப்பது நல்லது.

ஒ காய் கறியா நான் வேற ஏதோ உணவுப் பொருள் நு நினைத்து விட்டேன் நன்றி வாணி

அன்புடன் அபி

அப்போ பூமிக்கு கீழே விளையும் காய் கறிகள் என்றால் முள்ளங்கி,beetroot இது எல்லாம் கூடவா இல்லை கிழங்கு வகைகள் மட்டுமா?தெரியலை அதான் கேட்டென்...

சாரி வனிதா நான் தப்பா சொல்லிவிட்டேனா.ரொம்ம்ப சாரிடா .நான் இப்பொது தான் உங்கள் பதிவினை பார்த்தேன் .

எல்லாப் புகழும் இறைவனுக்கே

வித்யா,

பூமிக்கு கீழே விழையும் கிழங்கு வகைகளை தவிர்த்தாலே போதும்.முள்ளங்கி,காரட் மற்றும் பீட்ரூட் போன்றவை கிழங்குகள் இல்லை.உருளை,சேனை,சேப்பங் கிழங்கு ,கருணை,சிறு கிழங்கு,மர வள்ளி,சர்க்கரை வள்ளி கிழங்கு வகைகள்.

ennaku konjam soille kodugal

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

மேலும் சில பதிவுகள்