சுற்றுலா தளங்கள்

தமிழ்நாட்டுல "tourist spot "னு சொன்னாலே நமக்கெல்லாம் சட்டுன்னு தோணுறது
ஊட்டி..கொடைக்கானல் அப்புறம் குற்றாலம்...தேனிய சுற்றி கூட நிறைய spot இருக்குனு கேள்விபட்டுருக்கேன்..நமக்கெல்லாம் அவ்வளவு பரிட்சயம் கிடையாது...அது போல உங்களுக்கு தெரிந்த
அல்லது நீங்கள் சென்று வந்த சுற்றுலா தளங்களை இங்கே பஹிர்ந்து கொள்ளுங்கள்...மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

எனக்கு தெரிந்தது, தேனி பக்கத்தில் தேக்கடி, கும்பக்கரை அருவி, மூணார் இன்னும் இருக்கு ஆனால் இப்போ சட்டுன்னு ஞாபகத்தில வரல., யோசிச்சு அப்பறமா சொல்றேன்.,

அன்புடன் அபி

ஊட்டியில் பைக்காரா அணை,பைக்காரா லேக்(போட் ஹவுஸ்),மெழுகு உலகம்,குன்னூரில் டால்ஃபின் நோஸ்,கோடநாடு,குந்தா செல்லும் வழியில் உள்ள கிருஷ்ணன் கோவில்,வெலிங்டன் முருகன் கோவில்,அருவன்ங்காடு பாறை முனீஸ்வரர் கோவில்,முதுமலை,இப்படி நிறைய இடங்கள் உள்ளன...இன்னும் நிறைய இடங்கள் உள்ளன வந்து சொல்கிறேன்.........

நாங்கள் போன வருடம் கொல்லிமலை, கொடுமுடி, மூணார், முக்கொம்பு, சுருளி பால்ஸ், திரிசங்கோடு, நாமக்கல் இன்னும் நிறைய பார்த்தோம். அருமையான இடம்ங்க

கும்பக்கரை அருவி இதுவரை நான் கேள்வி பட்டது இல்லை..
எந்த மாதத்தில் சீசன் என்று சொன்னால் இன்னும் பயனுள்ளதாக
இருக்கும்

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

அருவங்காடு பாறை......எந்த பாவட்டத்தில் உள்ளது,,

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

நாமக்கலில் எந்த சுற்றுலா தளத்தை பார்த்தீர்கள் என்று குறிப்பிட்டால்
பயனுள்ளதாக இருக்கும்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

முடிந்தால் நீங்கள் ரசித்த சுற்றுலா தளங்களுக்கு ஏதெனும் சிறப்புகள் இருந்தால்
அதையும் குறிப்புடுகள்....புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் கோட்டை என்ற சுற்றுலா தளம்
உள்ளது...கட்டபொம்மன் சில காலம் இதை மறைவிடமாக பயன்படுத்தியதாக வரலாறு உண்டு..
இதே மாவட்டத்தில் சித்தனவாசல் சுற்றுலா தளமும் புகழ் பெற்றது...

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

அருவங்காடு
பாறை முனீஸ்வரர் கோவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது..குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் சுமார் 7கி.மீ தொலைவில் உள்ளது.அதாவது அருவங்காடு ரயில்நிலையம் அருகில்......

சித்தன்னவாசல்,
இங்கு குகை ஓவியங்கள் அஜந்தா போன்றே இருக்கும்னு கேள்விபட்டேன்.ஆனால் இன்னும் போனதில்லை.

ஐரோப்பாவில் உள்ள தோழிகள் அல்லது அங்கு சுற்றுலா சென்று வந்த தோழிகள் அங்குள்ள மனங்கவர்ந்த ஒரு சில அழகிய இடங்கள்,நாடுகள்,உங்கள் அனுபவம் மற்றும் குழந்தைகள் ரசித்து பார்த்த நகரங்கள் பற்றி

அனுபவம் இருந்தால் கொஞ்சம் எனக்கு சொல்லுங்கோ ..

அப்படியே ஜெர்மனியில் இருக்கும் அம்முலு,யோகராணி இதை பார்த்தா பதிவு போடுங்கோ ..உங்கள் இமெயில் ஐடி யாரிடம் கிடைக்கும்..என சொன்னால் நான் தொடர்பு கொள்ள உதவியாய் இருக்கும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் கோட்டை என்ற சுற்றுலா தளம்
உள்ளது...
கட்டபொம்மன் சில காலம் இதை மறைவிடமாக பயன்படுத்தியதாக வரலாறு உண்டு..
இதே மாவட்டத்தில் சித்தனவாசல் சுற்றுலா தளமும் புகழ் பெற்றது...///

திருமயம் பக்கத்துல இருக்க கானாடு காத்தான் ல ஒரு palace இருக்கு. நிறைய படம், சீரியல் ல கூட இங்க எடுத்து இருக்காங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்