நெயில் ஆர்ட் - 2

தேதி: August 13, 2012

5
Average: 4.5 (11 votes)

 

பேஸ் கோட் (base coat)
சிவப்பு நிற நெயில் பாலிஷ்
ஆர்ட் டெகோ (Art Deco) - கருப்பு & வெள்ளை
டாப் கோட் (top coat) / கலர் ஸ்டே (colour Stay)
நெயில் பாலிஷ் ரிமூவர் & பஞ்சு

 

நெயில் ஆர்ட்க்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
இந்த டிசைனுக்கு நகமுனைகள் தட்டையாக இருந்தால் நன்றாக இராது. சற்று வளைத்து சீராக்கி விடவும். நகப்பூச்சு இல்லாமல் இருந்தாலும், ஒரு முறை ரிமூவர் கொண்டு நகத்தைத் துடைத்துக் கொள்வது பாலிஷ் நன்றாகப் பிடித்துக் கொள்ள உதவும். முதலில் நகங்களுக்கு பேஸ் கோட் கொடுக்கவும்.
அதன் மேல் சிவப்பு நிறம் ஒரு முறை பூசிக் கொள்ளவும். ஒரு விரலில் ஆரம்பித்து பத்து விரல்களையும் முடிக்கும் போது முதலாவது நகம் அடுத்த பூச்சுக்குத் தயாராக உலர்ந்து இருக்கும். இரண்டாவது முறையும் சிவப்பு வர்ணம் பூசவும். பூச்சு வைக்கும் போது நகத்திற்கு வெளியே வைத்துவிட்டால், உடனே ஆரஞ் ஸ்டிக் கொண்டு வழித்து எடுத்துவிட்டால் பிறகு ரிமூவரை காட்டன் பட்டில் தொட்டுத் துடைத்துக் கொண்டால் போதும்.
இரண்டு விநாடிகள் கழித்து கருப்பு ஆர்ட் டெகோ கொண்டு நடுவில் ஒரு மெல்லிய நீளக் கோடு வரைந்துகொள்ளவும். அது விரலோடு இணையுமிடத்தில் சின்னதாக Y போல வரைந்துமுடிக்கவும். (எப்பொழுதும் ப்ரஷ்ஷில் உள்ள மேலதிக திரவத்தை முடிந்த வரை பாட்டிலில் துடைத்துக் கொண்டு ஆரம்பிக்கவும்.)
முக்கோண இடைவெளியைக் கருப்பு நிறத்தால் நிரப்பிக் கொள்ளவும். மேலே உணர்கொம்புகள் இரண்டு வரைந்துகொள்ளவும். (இவை தோலில் வரையப்படுவதால் சீக்கிரம் உரியப் பார்க்கும். வேலை முடிவில் இவற்றின் மேலும் சிறிது கலர் ஸ்டே வைத்துவிடவும். பிறகு உரியும் போது தேவையானால் இவற்றை மட்டும் சிறிய கத்தரிகோலால் வெட்டி எடுத்துவிட்டு மீண்டும் வரைந்து கொள்ளலாம்.)
உடலில் இரண்டு பாகங்களிலும் ஒரே மாதிரி மூன்று கருப்புப் பொட்டுகள் வைத்துவிடவும். ஆர்ட் டெகோ ப்ரஷ் மெல்லிதாக இருப்பதால் சிறிய பொட்டுகள் சுலபமாக வைக்கலாம். ப்ரஷ்ஷால் வைப்பது சிரமமாக இருந்தால் ஒரு துளி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டு குண்டூசித் தலையால் தொட்டு வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளை நிறத்தால் கண்களுக்கு இரண்டு சிறிய பொட்டுகள் வைத்துக்கொள்ளவும்.
தோலில் பூச்சு பட்டிருந்தால் ரிமூவர் தொட்டுத் துடைக்கவும். பூச்சு உலர்ந்ததும் கலர் ஸ்டே கொடுத்துக் காய விடவும்.
பாத்திரம் தேய்க்கும் பொழுதும் ஈரமான வேலைகள் செய்யும் பொழுதும் கையுறைகள் பயன்படுத்தினால் நகப்பூச்சு சட்டென்று கெட்டுப் போகாமல் வைத்திருக்கலாம். முழுமையான மானிக்யூர் முறைகள் இங்கு கொடுக்கப்படவில்லை. சுலபமாக சட்டென்று வீட்டில் செய்து கொள்ளக் கூடிய முறையில் அடிப்படை விபரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா, சூப்பரா இருக்கு சீமாட்டி வண்டு (!!). நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. எனக்கு இந்த வேலைகள் வரவே வராது. பார்த்து ரசிக்க மட்டும் தெரியும்.
வாணி

இமா, ரொம்ப அழகாக இருக்கிறது... சான்சே கிடையாது...

Superb innovative + imagination power உங்களுக்கு:)

பேசாமல் உங்கள் வீட்டை மியூசியமாக மாற்றி விடலாம், உங்களின் கைவினை + கேக் ஐட்டங்களை பார்த்தே காலத்தை ஓட்டி விடலாம் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னே கற்பனை வளமும் பொறுமையும். படங்கள் மனதை அள்ளுது.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

இமா

சோ க்யூட் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமை....அருமை...

கைகளுக்கு சுத்தி போடுங்க...யார் கையாக இருந்தாலும் சரி..அவ்வளவு அழகு...முக்கியமா கடைசி படம்..so cute....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அந்தப் பெயரைத்தான் முதலில் கொடுக்க இருந்தேன் வாணி. ;))
கருத்துக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

;) நன்றி. ஆனால்... குளிருது. ;))

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி ஜெயந்தி, ரம்ஸ் & ராஜி செந்தில்.
என் கைதான் அது. :)

‍- இமா க்றிஸ்

சூப்பரப்பு..கையில் மருதாணியும் ,வளைகாப்பு வளையலும் போட்ட காலம் போய்டு...வண்டு வந்துட்டு..ஹீ ஹீ ! எப்போ கலர்கலரா வண்டு,பாம்பு வரும்? ...தனிஷ்காவின் ஒரு விரலில் மட்டும் போட போறேன்ப்பா அடுத்த ஏதாவதொரு பங்சனுக்கு ...

" இமா வீடு மீயுசியம் " பார்க்க போவோமா bivi? லன்ச் கேக். ஸ்பான்ஸர்டு பை நம்ம வனிதா

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

woooooooooooow imma ama chupero chuperu... ponga imma amma idha 2 days before potirukalamala paarunga naan nethu dhan nail cut panunen.. avuuuuuuuuuuuu...... nail valandhadhuku aparam dhan try panna mudiyum. inum idhu madhiri niraya yosichu solli kudunga....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Arumai... Arumai... Arpudham.... Arpudham... Supero superappu:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக அழகு.

வாவ் ரொம்ப அழகா இருக்குங்க,இமா....வாழ்த்துக்கள்.....

இமா
சீமாட்டி வண்டு ஆர்ட் அற்புதமாக உள்ளது. விரைவில் நானும் அனுப்ப ட்ரை பன்னுரேன்

மிக அழகா அருமையாக இருக்குங்க'மா நகங்களை இவ்வளவு அற்புதமாக அழகாக்கியிருக்கீங்க' மேலும் தொடர வாழ்த்துக்கள் மா :-)

நட்புடன்
குணா

சூப்பர்... செம க்யூட்.....

வாழ்த்துக்கள்....

தனிஷ்கா குட்டிக்கு வண்டு வேணாம். க்யூட்டிக்கல்ல படாத மாதிரி க்யூட் டிசைனா போட்டுவிடுங்க. எனக்கும் ஃபோட்டோ அனுப்பிவைங்க.

அதுக்கென்ன, வாங்க எல்லாரும். (ஜெயா முன்னால வந்து வீடு டெகரேட் பண்ணி வைப்பாங்களாம்.) ;)

‍- இமா க்றிஸ்

//2 days before potirukalamala// அப்போ 'ஜெம் ட்ரீல' இது முட்டையா இருந்துது. இப்பதான் பொரிச்சிருக்கு. ;) ம்.. வளர்த்துட்டே போடுங்க. எங்கயாச்சும் ஃபோட்டோ வரும்ல!

‍- இமா க்றிஸ்

நன்றி நிகிலா. இங்க வண்டு அனுப்பினதும் அங்க உங்கள் டிசைன்ஸ் கண்டேன். ஆனால் சொல்லல. ;) எல்லாம் நல்லா இருந்துது. அனுப்புங்க கட்டாயம்.

‍- இமா க்றிஸ்

பசங்க போடறது போல ஒரு டிசைன் குணாவுக்காக ஸ்பெஷலா கொடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். போடுவீங்கல்ல!!

தாங்ஸ் குணா. ;)

‍- இமா க்றிஸ்

கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. சந்தோஷமா இருக்கு. :)

‍- இமா க்றிஸ்

சுருக்கமாகக் கருத்துச் சொன்ன செபாவுக்கு... பெரியதொரு நன்றி.
எப்போவாவது எட்டிப் பார்க்காமல் அடிக்கடி அறுசுவைக்கு வரவேண்டும். ;)

‍- இமா க்றிஸ்

மேடம் கலக்கீட்டீங்க போங்க சூப்பரா இருக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, பக் னால கை அழகா? கை னால பக் அழகானே தெரியலையே. கலக்கல். கடைசி படம் கண்ண விட்டு விலகவே இல்ல

nandraga ulladhu Ima :)

வாவ்... செம க்யூட்டா இருக்கு! :)

உங்க இமாஜினேஷனுக்கும், க்ரியேட்டிவிட்டிக்கும் நிகர் நீங்களேதான் இமா! ரொம்ப அருமையா இருக்கு. பாராட்டுக்கள்!
கட்டாயம் இன்னைக்கு ஈவினிங் பொண்ணுக்கிட்ட காட்டணும்! :)

அன்புடன்
சுஸ்ரீ

கருத்துக்கு நன்றி உமாகுணா & இந்திரா கணேஷன்.

bhuvisrini... அறுசுவைக்குப் புதுவரவா! _()_ நல்வரவு. கருத்துக்கு மிக்க நன்றி.

மிக்க நன்றி சுஸ்ரீ. சந்தோஷம் :)

‍- இமா க்றிஸ்

really great idea.....

அதிரா செய்த லேடி பக்கும், நீங்க என்னோட நெயில் ஆர்ட் குறிப்பில் போட்ட பதிவும் நினைவு வருது :) அது ஒரு இனிமையான காலம். ரொம்ப அழகா இருக்கு பக்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருத்துக்கு நன்றி மீரா & வனி.

//அது ஒரு இனிமையான காலம்.// இப்போ கூட இனிமையான காலம்தான் வனி. அறுசுவைதான் எனக்கு நிறைய நட்புக்களைப் பெற்றுக் கொடுத்தது, கொடுக்கிறது.

‍- இமா க்றிஸ்

இமாம்மா க்ரேட். நெயில் ஆர்ட் அருமை. உங்க க்ராஃப்ட் எப்போதுமே ஸ்பெஷல் தான். வாழ்த்துக்கள்.

நன்றி வினோஜா. :)

‍- இமா க்றிஸ்

//பசங்க போடறது போல ஒரு டிசைன் குணாவுக்காக ஷ்பெஷலா கொடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். போடுவீங்கல்ல!! //
கண்டிப்பாக இமா'மா உங்க பேச்சுக்கு மறுபேச்சு ஏது, :-) சீக்கிரம் டிசைன் அனுப்புங்க , :-) ;-)

நட்புடன்
குணா