பட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி? உறவு?

அன்பு பட்டிமன்ற மக்களே...

கூவி கூவி பார்த்தேன் நடுவர் தேவை என்று :) யாரையும் காணோம். எனக்கும் வேறு வழி இல்லை... உங்களுக்கும் வேறு வழி இல்லை... இம்முறை என்னை நடுவராக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பரவாயில்லை... ஃபீல் பண்ணாதீங்க, அடுத்த பட்டிமன்றத்துக்காவது யாராவது முன் வந்து நடுவரா இருங்க. ;)

இந்த வாரம் நம்ம தோழி கவிசிவா தந்த தங்க தலைப்பு :)

”வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப தயக்கம் காட்டுவது ஏன்? வெளிநாடுகளில் கிடைக்கும் வசதிவாய்ப்புகளா? உறவுப் பிரச்சினைகளாலா?”

திரும்ப வர ஆசைப்படுபவர்களை விட்டுடுங்க, வர காலம் கடத்துறவங்க, அங்கையே இருக்க விரும்புறவங்க... இவங்களை பற்றி தான் இங்க பேச்சு :) காரணம் என்ன... அங்க கிடைக்கும் பணமும், வசதியுமா? இல்ல... நம்ம ஊரில் உறவுகளோடு இருக்க முடியாது பிரெச்சனை நிறைய இருக்கும்னா?

அருமையான காலத்துக்கு ஏற்ற தலைப்பை தந்தமைக்கு ரொம்ப தேன்க்ஸ் கவிசிவா ;) சண்டைக்கு விதை இம்முறை தீவில் இருந்து வந்திருக்கு.

வழக்கம் போல தான்... யாரையும் பேர் சொல்லி அழைக்க கூடாது, அரசியல் கூடாதுன்னு எல்லா பட்டிமன்ற விதிகளும் இந்த பட்டிமன்றத்துலையும் உண்டு. அறுசுவையின் மன்ற விதிமுறைகள் பட்டிமன்றத்திலும் உண்டு.

இப்போ... சிங்கம், புலி எல்லாம் சண்டைக்கு தயாரா?? ஜூட்... வனி வெயிட்டிங்.

மக்களே... பட்டிமன்றம் துவங்கியாச்சு. நடுவரா வராம இருந்த மாதிரி வாதாட வராம இருக்க கூடாது... இருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். :) வனி நம்பிக்கையை காப்பாத்தி, வந்து பட்டையை கிளப்புங்க. ;) வாங்க வாங்க... எல்லாரும் வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே மிகவும் அருமையான தலைப்பு :). நடுவரே கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து திரும்பவர தயங்கும் காரணம் உறவுகளோட பிரச்சனை தான் ! இப்போதைக்கு நான் என் அணியை தேர்வு செய்துள்ளேன். அப்புறமா வந்து விரிவாக விளக்கம் தரேன்.
பின் குறிப்பு : இது தான் நான் முதல்முறையாக பட்டிமன்றதில் பேசுவது அதனால் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
அன்புடன்
ரேகா சுரேஷ்

நடுவர் மேடம், மீண்டும் உங்களை நடுவராக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி :)

வெளிநாட்டில் இருந்து திரும்பும் பொது, உறவு பிரச்சனைகள் உண்டு என்பது உண்மை தான்... ;-) ஆனால் அதையும் மீறி, முக்கியமாக திரும்பி வர தயங்குவதற்கு காரணம் வெளிநாட்டில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் தான்...

விளக்கமான வாதத்துடன் பிறகு வருகிறேன்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நடுவரே!! வெளிநாட்டில் இருந்தாலும் உறவு பிரச்சினை ஐஎஸ்டி யில் வரதான் செய்யும். அதுமட்டுமில்லாம வெளிநாட்டில் இருக்காங்கன்னாலே அவங்களுக்கு தனியா ஒரு மதிப்பு கிடைக்குது. இதுல உறவுகள், ஒன்னு ஒட்டி உறவாடுவாங்க, இல்லையா அவங்க ரேஞ்சு வேறனு சொல்லி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பிரச்சினை தர்றதுக்குனே காத்திருப்பவங்க இல்ல. அவங்க வெளிநாட்டிலிருந்து வர்றாங்கன்னாலே வீடே திருவிழா மாதிரிதான் இருக்கும். சொந்தபந்தமெல்லாம் வரவேற்க ஒன்னு கூடிடுவாங்க. அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்க. இதெல்லாம் உண்மையான அன்பாலதான் முடியும். ஒரு ஆறுமாசம் அப்ராட்ல இருந்துட்டு நம்ம ஊருக்கு வர்றவங்க பண்ற அலப்பரை இருக்கே, ''வெற்றி கொடி கட்டு'' படத்துல வடிவேலு பண்ற அலப்பரைதான். அவங்க பிறந்து வளர்ந்த சொந்த ஊரை, கலாச்சாரத்தை கிண்டல் பண்றதுல அவங்கள மிஞ்சினவங்க யாரும் இருக்க முடியாது.
அதனால உறவுக்கு பயந்தெல்லாம் யாரும் வெளிநாட்டில் இருந்து திரும்பாமல் இல்லை நடுவரே. அங்குள்ள உல்லாசமான, பகட்டான, காஸ்ட்லியான, வாழ்க்கைமுறையே வெளிநாட்டில் அட்டை போல் ஒட்டிக் கொள்ள காரணம்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

நடுவருக்கு வனக்கம், நான் வசதி வாய்ப்பே என்ற அனியில் கலந்துகொள்கிறேன்.....கொஞ்சம் நேறம் கலிது வர்றேன்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடுவர் சீட்டில் நாட்டாமையாய் உட்கார்ந்திருக்கும் வனிதா மேம் அவர்களுக்கும் வாதாட குவிந்திருக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்,
வெளிநாடுசென்ற இந்திய மக்கள் திரும்ப வர தயங்குவதற்கு காரணம் அங்கே இருக்கிற வசதி வாய்ப்புகளே.!! என்ற என் வாதத்தின் முதல்தொடக்கமாய் பட்டிமன்றத்தில் இணைகிறேன்.

நட்புடன்
குணா

வெலிநாட்டிலிருந்து திரும்பவர தயங்குவதர்க்கு காரணம் வெலிநாட்டில் நள்ள சம்பளம் நிம்மதியான வாழ்க்கை குழந்தைகளின் கல்வி அனைத்தும்,
வெலிநாட்டில் எந்த ட்ராஃபிக் ப்ரச்சனையிம் கிடையாது நிம்மதியாக வேலைக்கு போய் வறலாம் . குழந்தைகளுக்கு நள்ள தரமான கல்வி யை கொடுக்க லாம். வேலையென்ரு எடுதுக்கொன்டால் எட்டுமனி நேரம்தான் மித்த டைமில் குடும்பத்தோடு நேறம் செலவிடலாம்...... இவ்வலவ்வு வசதி வாய்ப்புகலை விட்டு வர யாருக்கு மனசு வரும் நடுவரே.

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் !!! நடுவரே நான் வசதி வாய்ப்பே காரணம் னு தான் பேச வந்துருக்கேன்...

மனிதனோட ஆசை இருக்கே அதை குறையவே குறையாது... கடன் எல்லாம் அடைக்கணும் னு தான் வெளிநாட்டுக்கு போவாங்க... கடன் அடைஞ்சதும், அடுத்து தனக்குன்னு ஒரு வீடு வாங்க நினைப்பாங்க.... வீட்டு கிரகபிரவேஷத்துக்கு கூட வர நேரம் கிடைக்குமோ இல்லையோ அடுத்து பொண்ணுக்கு கொஞ்சம் நகை சேர்த்துரனும் னு நினைப்பாங்க... அடுத்து பையன் படிப்பு செலவுக்கு கொஞ்சம் பணம் பாங்க் ல டெபாசிட் பண்ண நினைப்பாங்க... எல்லா கடமையும் முடிஞ்சதா!! அப்பாவது ஊருக்கு போவாங்கன்னு நினைக்கிறீங்க!! ஹூம் ஹூம்!! அடுத்து தனக்குன்னு ஊருக்கு போயி தொழில் தொடங்க ஒரு அமெளண்ட் வேணும் னு அதுக்கு பணம் வேணும் னு உட்கார்ந்து இருப்பாங்க.... இப்படி ஒண்ணை தொட்டு ஒண்ணு வந்துக்கிட்டே தான் இருக்கும்...

உறவுகளுக்கு இடையேயான பிரச்சனை எங்க இருந்தாலும் ஃப்ளைட் பிடிச்சோ இல்லை ஐ‌எஸ்‌டி மூலமாவோ கூரியர் மூலமாவோ வந்துக்கிட்டே தான் இருக்கும். அதெல்லாம் அப்புடி தொடைச்சு தூர போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க....

திரும்ப வருவேன் ..............................................

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவர் அவர்களே அருமையான தலைப்பு வெளிநாடுக்கு சென்றவர்கள் தாய்நாடுக்கு திரும்ப தயக்கம் காட்டுவது உறவு பிரச்சனைகளாலே என்பது என் கருத்து..வசதி வாய்ப்புகள் எங்கு இருந்தாலும் நமக்கு கிடைக்கும்....விரிவான கருத்துக்களுடன் மீண்டும் பதிவு செய்கிறேன்..

முதல் முறையாக பட்டிம்னறத்தில் கலந்து கொள்ளும் உங்களை வருக வருகன்னு வரவேற்கிறோம்... ரூல்ஸ் மட்டும் ஒரு முறை படிச்சுக்கங்க, அப்பறம் தப்பு என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை :) பயப்படாம பூந்து விளையாடுங்க.

முதல் ஆளாக வந்து தெளிவா ”உறவு” தான்னு சீட்டு பிடிச்சிருக்கீங்க... வாதங்களோடு வாங்க. காத்திருக்கேன். நன்றி ரேகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்