கடாய் மஷ்ரூம்

தேதி: August 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
குடை மிளகாய் - பாதி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

ஒரு வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
காளானை நறுக்கி கழுவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு காளானை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
காளான் சிறிது வதங்கியதும் தூள் வகைகளை எல்லாம் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
பின்பு தேவையான அளவு நீர் விட்டு மேலே கொத்தமல்லி தூவி காளான் வேகும் வரை கொதிக்க விடவும்.
இன்னொரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி அடுக்கடுக்காக பிரித்தெடுத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும் (பாதி வதங்கும் வரை)
வதக்கிய வெங்காயத்தை காளான் கிரேவியில் கொட்டி கிளறி இறக்கவும்
இப்போது சுவையான கடாய் மஷ்ரூம் தயார். பரோட்டா, சப்பாத்தி, நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா... முதல் குறிப்பு!! அட்டகாசமான படங்கள். பார்க்கவே ஆசையா இருக்கு. சூப்பர். இன்னும் பல 100 குறிப்புகள் கொடுத்து உங்களுக்குன்னு ஒரு தனி இடம் பிடிக்க வாழ்த்துக்கள். :) கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இந்து அக்கா சூப்பர் டிஷ் பாகவே சாப்டனும் போல இருக்கே அக்கா ஹ்ம்ம் ட்ரை பணிட வேண்டியதான்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் இந்து

முதல் குறிப்பு கொடுத்து அசத்தி இருக்கீங்க ,இன்னும் பல நூறு குறிப்புகள் தர வாழ்த்துக்கள் , டிஸ் சூப்பரா இருக்கு படங்கலும் அருமை .......

பார்க்கவே சூப்பர்.சுவையான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனது முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முதலாவதாய் வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி வனிதா. 100 குறிப்பா முடியுமானு தெரியல முயற்சி பன்னுறேன்.//அட்டகாசமான படங்கள். // இந்த பாராட்டு என் கணவருக்கு தான் சொல்லனும் ஏனென்றால் போட்டோ எடுத்தது அவர் தான்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு நன்றி கனி. ட்ரை பண்ணிட்டு எப்படி இருந்துச்சினு சொல்லு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு மிக்க நன்றி சங்கரி. உடம்ப பார்த்துக்கோங்க.. நல்லா சாப்பிடுங்க...படத்துக்கான காரணத்த வனிதாக்கு குடுத்த பதில்ல சொல்லி இருக்கேன் பாருங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்க பேரு என்னனு தெரிஞ்சிக்கலாமா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முதல் பதிவை சுவையா பதிச்சிருக்கீங்க.....படங்களும் அருமை...வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி யமுனா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கடாய் மஷ்ரூம் ஈசியான சுவையான குறிப்பு நான் மஷ்ரூம் வாங்கினால் கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்

Simply superb mushroom dish indhu... Thodarndhu neraya kurippugal anupunga. Anna kitta photos ellam super nu sollidunga. Vazhthukkal indhu...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

முதல் குறிப்பே நல்ல அசத்தலா அனுப்பி இருக்கீங்க இந்திரா. மஷ்ரூம் வாங்கினது செய்துட்டு சொல்றேன் பார்க்கவே ரொம்ப பிடிச்சிருக்கு போட்டோஸ் நல்லா இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து அசத்துங்க

வாழ்த்துக்கு மிக்க நன்றி மகாசிவா.ட்ரை பன்னிட்டு எப்படி இருந்துச்சினு சொல்லுங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு மிக்க நன்றி நித்யா. உங்க வாழ்த்த என் கணவருக்கு தெரிவிச்சிடுறேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு மிக்க நன்றி உமா.ட்ரை பன்னிட்டு எப்படி இருந்துச்சினு சொல்லுங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

my name is musina.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thank you verymuch sir and medam very useful tips because i'm bauchler...