சிக்கன் 65

தேதி: August 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
தயிர் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
மைதா - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ரெட் கலர் - ஒரு துளி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து ப்ரீசரில் அரை மணி நேரம் ஊற விடவும். பிசைவதற்கு தண்ணீர் தேவையில்லை தயிரில் இருக்கும் தண்ணீரே போதுமானது அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து வைக்கவும்
பின் கடாயை காய வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் 65 தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சிக்கன் 65 :) நல்லா செய்திருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கனி சிக்கன் 65 சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.ஒரு ப்ளேட் பார்சல் பண்ணு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி ( ஸ்பெஷல் தாங்க்ஸ் டூ பத்மா மேடம் )

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி வனிதா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இந்திரா அக்கா உங்களுக்கு இல்லாததா அக்கா கண்டிப்பா அனுபிடுறேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சூப்பர் சிக்கன் 65 வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.