இனிப்பு போண்டா

தேதி: August 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
பச்சை வாழைப்பழம் - ஒன்று
புளித்த இட்லிமாவு - அரை கப்
சீனி - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கலர் பவுடர் - 2 சிட்டிகை
எண்ணெய் - ஒன்றரை கப்


 

மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் மைதா, சீனி, ஏலக்காய் தூள், உப்பு, கலர் பவுடர், வாழைப்பழம், புளித்த மாவு எல்லாவற்றையும் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
எடுத்து எண்ணெய்யில் ஊற்றும் பதத்தில் திக்காக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி தீயை குறைத்து வைத்து வேக விடவும்.
3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 3 நிமிடம் கழித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சுவையான ஸ்வீட் போண்டா ரெடி. இதனை சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஸ்வீட் போண்டா. இன்னைக்கே செய்துருவோம்ல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா பார்க்கவே குண்டு குண்டா நல்லா இருக்கே இதோ செய்ய ரெடியாகிட்டேன் எல்லாமும் இருக்கு. செய்துட்டு சொல்றேன்

நான் கிளம்பிட்டேன் எங்கயா இனிப்பு போண்டா செய்யாதான் .சூப்பர்ரா அழகான வடிவாமா இருக்கு

Be simple be sample

ஹாய் பெற்றோரை போற்று தலைப்புல கட்டுரை வேணும் எதாவது லிங்க் இருந்தா சொல்லுங்கப்பா ப்ளீஸ்

போண்டா அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நேற்று மாலை உங்க போண்டா செய்தேன், அருமை.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்