தேதி: August 23, 2012
சதுர வடிவ காகிதம் - ஒன்று
காகிதத்தை முதலில் இரண்டு பக்கமும் முக்கோணமாக மடித்து, பின் செவ்வகமாக மடித்து நடுவில் ”X” மற்றும் “+” கோடுகள் விழும்படி செய்யவும். இனி ஒரு முனையை நடு புள்ளியை மையமாக கொண்டு மடிக்கவும்.

இதே போல் மூன்று பக்க முனைகளை மடிக்கவும்.

இதை அப்படியே பின் பக்கம் திருப்பவும். நடுவில் உள்ள கோட்டை மையமாக கொண்டு இரண்டு பக்க பேப்பரையும் படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.

இதன் கீழே உள்ள முக்கோணத்தை மேல் பக்கமாக மடிக்கவும்.

இரண்டு பக்கமும் இதே போல் மடித்து, அதை விரிக்கவும். விரித்த பக்கத்தை வெளிப்பக்கமாக மடிக்கவும்.

அவ்வாறு மடிக்கும் போது முனைகள் நேர் கோட்டில் இருப்பது அவசியம்.

இப்போது பார்க்க படத்தில் உள்ளது போல் இருக்கும்.

மீண்டும் அடுத்த பக்கம் திருப்பவும்.

அடிப்பகுதியை அப்படியே பாதியாக மடிக்கவும்.

மீண்டும் அடுத்த பக்கம் திருப்பவும். இப்போது முன் பக்கம் மடித்த பாதி பகுதி இங்கே இப்படி இருக்கும்.

அதை முன் பக்கம் மடிக்கவும்.

மீண்டும் திருப்பி பின் பக்கம் உள்ள மேல் பகுதியை கீழ் பகுதியை நோக்கி மடிக்கவும். பக்கங்களில் உள்ள முக்கோணங்கள் தான் பார்டர்.

இதை பிரித்து மீண்டும் ஓரத்தில் இருந்த முக்கோணங்களை படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.

இரு பக்கமும் இப்படி மடித்து கிடைக்கும் கோட்டை இணைத்து பிடிக்கவும்.

அப்படியே மடித்து நீட்டி நிற்கும் வால் பகுதியை வலது கை பக்கம் மடிக்கவும்.

திருப்பினால் முன் பக்கம் இப்படி கிடைக்கும்.

இதை அப்படியே கீழிருந்து மேலாக பாதியாக மடிக்கவும்.
