ஆரிகாமி பப்பி டாக்ஸ் பகுதி - 2

தேதி: August 23, 2012

5
Average: 4.6 (5 votes)

 

சதுர வடிவ காகிதம் - ஒன்று

 

இதை அப்படியே திருப்பி முக்கோணமாக இருந்த பகுதியை இரண்டாக முன் பக்கமாக மடிக்கவும்.
இனி மேலே நீட்டி நிற்கும் பகுதியை முன் பக்கம் பார்த்தது போல் மடிக்கவும்.
இதை பிரித்து, மடிப்பால் விழுந்த கோட்டை மையமாக கொண்டு உள்ளே அழுத்தி மடிக்கவும்.
இப்போது பார்க்க இப்படி இருக்கும். இப்போது பப்பியின் வால் தயார்.
இப்போது பார்க்க இப்படி இருக்கும்.
நீளமாக இருந்த பகுதியை பாதியாக இடது கை பக்கம் பார்த்தது போல் மடிக்கவும்.
மீண்டும் விரித்து அதை வாலை ஒட்டி மேல் பக்கமாக மடிக்கவும்.
இப்போது விழும் கோடுகளை மையமாக கொண்டு படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.
இப்போது பார்க்க பப்பியின் உருவம் தெரியும்.
இப்போது முக்கோணத்தின் மேல் பகுதியை லேசாக மடித்து உள்ளே அழுத்தவும். டூத் பிக் உதவி கொண்டு அழுத்தவும்.
இப்போது மூக்கு பகுதியை பாதியாக மடிக்கவும்.
அந்த கோட்டை விட்டு மீண்டும் சின்னதாக ஒரு மடிப்பு கொடுக்கவும்.
இப்போது அதற்கு அடுத்ததாக ஒரு சின்ன மடிப்பும் கொடுக்கவும்.
முதல் கோட்டை மையமாக கொண்டு இப்படி வால் மடித்தது போலவே மடிக்கவும்.
முன் பக்கமிருந்த சின்ன மடிப்பை பின் பக்கமாக திருப்பி மடிக்கவும்.
அவ்வளவு தான். அழகான பப்பி டாக்ஸ் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க...அதுவும் கடைசி படத்தோட பப்பியோட க்யூட்னஸ் உங்க வரிகள்லயும் இருக்கு.

அழகாக இருக்கிறது வனி. அமைப்பு நன்றாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

வனிதா ரொம்ப அழகா க்யூட்டா இருக்கு அம்மாவும் குட்டியும் இருக்கற மாதிரி இருக்கு(2மே குட்டிதான்)

வனி
அச்சோ .. பப்பிஸ் ரொம்ப க்யூட்டா இருக்கு ;)
மூக்கு அழகா இருக்கு .எனக்கு அந்த எல்லோ குட்டியை ரொம்ப பிடிச்சிருக்கு .வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் எனது கதை,சமையல் போன்ற படைப்புகளை எப்படி அனுப்பவேண்டும்

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) ரொம்ப கஷ்டப்பட்டு எடிட் பண்ணிருப்பீங்க... ஸ்பெஷல் தேன்க்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் பதிவுக்கு நன்றி யமுனா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. உண்மையில் தாயும் குட்டியுமா வைக்க நினைச்சு செய்தது தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. முக்கையே காணோமே ;) அப்பறம் என்ன மூக்கு அழகா இருக்கு !!! ஹிஹிஹீ. தேன்க்ஸ் ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை படங்களுடனும், கதையை மெயிலில் தட்டியும் arusuvaiadmin @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்புங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பப்பீஸ் க்யூட்டா அழகா இருக்கு. கண் வரைஞ்சு விட்டிருந்தீங்கன்னா இன்னும் அழகா இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. :) பத்மாவும் இதை பார்த்ததும் அதே தான் சொன்னாங்க... நான் தான் இதெல்லாம் பேசிக் ஆரிகமின்னு விட்டுட்டேன். இப்போ வெச்சிருக்கலாமோன்னு தோணுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவையில் மஹிஸ்ரீயும் ஆரிகாமி வைத்து நாய் வடிவம் செய்து இருந்தாங்க. அதப்பார்த்ததும் கேட்க தோணுச்சு.

யாரு?? இங்க இருக்கா குறிப்பு??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/node/9723 இந்த லிங்க் பாருங்க. மஹிஸ்ரீ கூட்டாஞ்சோறு, யாரும் சமைக்கலாம் பகுதியில் குறிப்பு எல்லாம் கொடுத்து இருக்காங்க. நம்ம கூட சமைத்து அசத்தலாமில் அவங்க ரெசிப்பி எல்லாம் செய்து பார்த்து இருப்போம். கைவினையிலும் அவங்களோட சில ஃக்ராஃப்ட் பார்த்து இருக்கேன்.

தேன்க்ஸ் ஃபார் தி லின்க் :) இப்ப தான் பார்த்தேன். நான் அறுசுவையில் சேரும் முன் உள்ளது, நான் பார்த்ததில்லை. அவங்க ரெசிபி கொடுத்தே 2 வருஷம் ஆச்சு போலிருக்கு... வரதில்லையோ இப்போ? அவங்க கிட்ட பேசி இருக்கனோ என்னவோ தெரியல வினோ. ஆனா எப்படி 4 வருஷம் முன்னாடி பார்த்ததை இன்னும் நினைவில் வெச்சிருக்கீங்க?? என்னால சத்தியமா முடியாது. :) அழகான நாய் குட்டிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

என்னால் அதிலே மூக்கை பார்க்க முடிகிறதுப்பா.. அதான் சொன்னேன். .
அந்த நுனியில் இருக்கும் குட்டி முக்கோணம் என் கண்ணுக்கு அது போல தான் தெரிகிறது. கண்ணில் ஏதாவது குறை இருக்கலாம்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்ணில் ஒன்னும் பிரெச்சனை இல்லை :) அது மூக்கு தான்... இது வனி மாதிரி மொட்டை மூக்கு நாய் குட்டியான்னு எங்க ஆள் என்னை ஓட்டினார், அதான் அதுக்கு முக்கை காணோம்னு சும்ம கிண்டல் பண்ணேன். சீரியசா எடுத்துக்காதீங்க :) சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட, இது எப்படி பார்க்காமல் விட்டேன்?!! பப்பி டாக்ஸ் ஆர் சோ க்யூட் வனி! :) எனக்கும் அதேதான் தோணிச்சி, கண் வரைந்து இருந்தா இன்னும் எடுப்பா இருந்திருக்குமோன்னு?! வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. குட்டியா இருந்ததால் மிஸ் பண்ணி இருப்பீங்க ;) ஹிஹிஹீ. கண்ணு இனி வரைந்தாலும் அறுசுவையில் வராதே... நான் வேணும்னா என் பப்பீஸ்கு கண்ணை வரைந்து உங்களுக்கு தனியா படம் அனுப்பிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
ச்சே ச்சே.. சீரியசான விஷயத்திற்கே, நான் இப்ப எல்லாம் சீரியஸ் ஆவதில்லை. எனக்கு தெரியும் வனி.. நீங்க சும்மா கிண்டல் செய்திங்கனு..
நீங்க மேலே அப்படி சொன்னதும்,எனக்கே சந்தேகம்.. நான் தான் அந்த முக்கோணத்தை மூக்கு என தவறா நினைத்துவிட்டேனோனு..
:) இருந்தாலும் எல்லோ பப்பி சோ ச்வீட் தான்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி அக்கா.. பப்பிஸ் ரொம்ப அழகா இருக்கு... வாழ்த்துக்கள்... குட்டி பப்பி எனக்கு ரொம்ப.. ரொம்ப பிடிச்சிருக்கு...

கலை

நல்ல அழகான அருமையான அற்புதமான அபாராமான படைப்புங்க :-) மேலும் தொடருங்க

நட்புடன்
குணா

தேன்க்ஸ் ரம்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) குட்டி பப்பியை அனுப்பி வெச்சுடுறேன் உங்ககிட்டையே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பாராட்டு மழை...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா