ஈஸி சிக்கன் கிரேவி

தேதி: August 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - மூன்று தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி

சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை படத்தில் காட்டியவாறு நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை காய வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம், ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி நன்கு கரைந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் சிக்கன் வேகும் வரை வைத்து செமி கிரேவி பதத்தில் வந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கனி வரிசையா குறிப்பா குடுக்குற வாழ்த்துக்கள்.இப்படியே வாரம் 2 குறிப்பு குடுக்க ட்ரை பண்ணு.சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கு.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஈசியான சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி அண்ட் ஸ்பெஷல் தாங்க்ஸ் டூ பத்மா மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இந்திரா அக்கா : நன்றி உங்கள் விருப்பம் போலவே குறிப்புகளை தர முயற்சிக்கிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்வர்ணா மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப சுலபமான சுவையான சிக்கன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம் ரொம்ப தாங்க்ஸ் உங்கள் பதிவிற்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

hai kani akka.

yenaku cheekan idomunave rompa pudikum nenga sonnathu simpla super erukku.thanks nan try pantren.

sayathra

சயத்ரா அக்கானுலாம் கூப்டாதீங்க எனக்கே தான் 20 ஆகுது ஹ்ம்ம் எனக்கும் சிக்கன் புடிக்கும் நீங்க ட்ரை பண்ணிட்டு எப்டி வந்ததுன்னு பதில் எழுதுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கிரேவி அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சிக்கன் கிரேவி
கடைசி படம் பார்க்க நல்லா இருக்கு.
சுடு சாதத்திற்கு ஏற்ற குறிப்பு
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன் க்ரேவி போன வாரமே செய்தேன், பதிவு போட தள்ளி தள்ளி போயிடுச்சு. சாரிங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. தோசைக்கு செய்தேன். சூப்பரா இருந்தது. சுலபமா செய்யவும் முடிஞ்சுது. நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நன்றி நீங்க செஞ்சதும் இல்லாம பதில் பதிவிட்டமைக்கு அக்கா அஆன நீங்க என்ன வாங்க போங்கனு குப்டுறது தான் அக்கா எனக்கு புடிக்கல ப்ளீஸ் வா போ நே குப்டுங்களேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்று உன் சிக்கன் கிரேவி செஞ்சேன் சூப்பர் டேஸ்ட் ரொம்ப பிடிச்சி இருந்தது.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.