மெகந்தி டிசைன்னை எப்படி அலைப்பது?

கையில் போட்ட மெகந்தி டிசைன்னை எப்படி அலைப்பது? வேறு டிசைன் போட வேன்டும் உதவுங்கள் தோழிகளே.

தினமும் பாத்திரமும் கழுவுற வேலையையும், துணி துவைக்கும் வேலையையும் நீங்களே செய்யுங்க... சீக்கிரம் போயிடும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி எப்படி இருக்கீங்க? நான் தினமும் பாத்திரம் கழுவுறேன். ஆனால் துணி துவைப்பது ஞாயிறு மட்டும் தான்.

நான் நலம். நீங்க நலமா? அது அதுவா தான் போயாகணும்... நம்மை என்ன பண்ண முடியும் சொல்லுங்க :) விடுங்க, தானா போகட்டும். சில நேரம் கொஞ்சம் போக ஆரம்பிச்ச பிறகு (கோன் பயன்படுத்தி இருந்தால் மட்டும்) உடம்பு தேய்க்கும் ஸ்க்ரப் கொண்டு தேய்ச்சா போயிடும். ஆனா மெதுவா... அப்பறம் புண்ணாகிடாம... ஏன்னா எல்லா கோனும் இப்படி போகாது, ஒரு சில தரம் இல்லாத கோன் என்றால் இப்படி செய்தா போக கூடும். இதுவும் இரண்டுங்கெட்டானா கையில் நின்னா அசிங்கமா இருக்கும்... அதனால் அதுவா போறது தான் நல்ல வழி. என்ன அவசரம்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... போகட்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கேன் பா. அடுத்த வாரம் என் அண்ணணுக்கு கல்யாணம் அதான் பா கை கொஞ்சம் அழகா இருக்கட்டுமேனுதா கேட்டேன். ஆனாலும் உங்களுக்கு நன்றி

கலியாணத்துக்கு முதல் நாள் வரை மீதி கோடுகள் இருந்தால், அதன் மேல் கோடுகள் வருவது போல புது டிசைன் போடுங்க. இல்லாவிட்டால் முன்பு இருந்த அதே டிசைனை திரும்பவும் போடுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்