உதவி தேவை தோழிகளே

நமது தோழிகள் யாராவது சிகாகோ அருகில் குறிப்பாக Arlinton Heights பகுதியில் இருக்கிறிர்களா?சில சந்தேகங்கள் உள்ளது ,தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
எனது கணவர் H1 விசாவில் US சென்றுள்ளார். முதலில் வீடு எல்லாம் பார்த்து எல்லா ஏற்பாட்டையும் செய்த பின் எங்களையும் அழைத்து செல்வதாக முடிவு. பெரியவளுக்காக (வயது 6 1 /2 , சின்னவளுக்கு சரியாக ஒரு வயது ) பள்ளிகூடம் பற்றி விசாரித்த போது அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் நல்ல பள்ளிகள் இல்லாததால், Arlington பகுதியில் வீடு பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கிருந்து அவர் அலுவலகத்திற்கு காரில் மட்டுமே செல்லும்படியாக உள்ளது . பஸ், இரயில் வசதிகள் இல்லை. அங்குள்ளவர்கள் ,இங்கு car pulling உண்டு விசாரியுங்கள் என்று சொல்லுகிறார்கள். நான் எனக்கு தெரிந்தவரை இணையத்தில் தேடினேன் . பிரயோஜனம் இல்லை.

இந்த பகுதியில் யாராவது உள்ளீர்களா? அல்லது விவரம் தெரிந்தவர்கள் உதவுங்களேன் .....

1 .பஸ் ,car pulling பற்றி சொல்லுங்கள் ,இல்லை இணையதளத்தில் எந்த பக்கத்தில் தேடுவது ?

2 . பெரியவாளுக்கு இந்த ஜனவரி வந்தால் 7 வயது . அங்கு அவளை இரண்டாவது சேர்ப்பார்களா?

சிவகாமி.
\

http://www.google.com/intl/en/landing/transit/#mdy
http://www.transitchicago.com/travel_information/trip_planner.aspx

neenga schaumburg il veedu paarthal sariyaga irukkum...naangal angu dhan irukkom..en ponnu first grade pora...unga ponna second gradela serthukkaradhu doubt dhan..

நன்றி dhanushab

உங்கள் தகவலுக்கு நன்றி. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? . உங்கள் பெயர் என்ன?

நன்றி நித்யபாரத் ,

அப்பாடா ....அங்க வரத்துக்கு முன்பே அறுசுவை மூலம் ஒரு தோழி (தோழியாக ஏற்று கொள்வீர்களா ?) கிடைச்சாச்சு .... சந்தோஷமா இருக்குங்க . உங்களுக்கும் பொண்ணா ? ரொம்ப நல்லதா போச்சு. ஒரு பொண்ணு தானா? schaumburg பற்றி அவரிடம் பேச வேண்டும். பேசிவிட்டு சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்