ஆரிகாமி லில்லி - பாகம் 1

தேதி: August 27, 2012

5
Average: 5 (2 votes)

 

ஆரிகாமி பேப்பர் - விரும்பிய வண்ணங்களில்

 

முதலில் ஆரிகாமி பேப்பரை எடுத்து, பேப்பரின் கலர் வெளியே இருக்கும்படி இரண்டாக மடித்து பின்பு நான்காக படத்தில் காட்டியவாறு மடிக்கவும்.
பின்பு பேப்பரின் கலர் உட்புறம் வரும்படி வைத்து முக்கோணமாக (Diagonal) இரு எதிர் முனைகளை மடிக்கவும்.
வெண்மையான பக்கம் உள்ளே இருக்கும் படி பார்த்து, முக்கோணமாக மடித்த இருமுனை படத்தில் காட்டியபடி மடிக்கவும்.
அம்முனைகளை இணைக்கும் போது, மீதம் இருக்கும் இரு முனைகளை, ஏற்கனவே மடித்து இணைக்கப்பட்ட வெண்மையான பக்கத்தின் மேற்புறம் சதுரமாக வரும்படி மடிக்கவும்.
மடித்த பின் படத்தில் காட்டியபடி இருக்கும்.
இந்த சதுரமான வடிவத்தின் ஒரு முனை முழுமையாக இணைந்து இருக்கும். அது பூவின் காம்பு பகுதி. பேப்பரின் நான்கு முனைகளும் தனித்தனியே இருப்பது தான் பூவின் இதழ்களாக வர வேண்டிய பகுதி. எனவே படத்தில் உள்ள ஆரஞ்சு பூவின் காம்பு பகுதியை படத்தில் காட்டியபடி மேற்புறமாக முக்கோணமாக மடிக்க வேண்டும். அதை போலவே அடிபாகத்திலும் மடிக்க வேண்டும். முதல் பக்கம் இரண்டு முறையும், அடிபகுதியில் இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை மடிக்க வேண்டி இருக்கும். பர்பிள் பூவின் இதழ் பகுதியின் முன் பக்கம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. பர்பிள் பூ நான்கு பக்கமும் மடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
பின் மடித்த ஒரு முனையை பிரித்து எடுத்து, அதன் இடையில் ஒரு விரலை விட்டு, அதை பிரித்து உட்புறம் அமிழ்த்த வேண்டும்.
அப்படி அமிழ்த்தும் போது படத்தில் காட்டியபடி கீழ் பகுதியில் வெண்மையான பக்கம் முக்கோண வடிவில் கிடைக்கும்.
அதை போல நான்கு மடிப்புகளையும் பிரித்து, விரல் கொண்டு உள்புறம் அமிழ்த்தினால் படத்தில் காட்டிய ஆரஞ்சு பூ போல கிடைக்கும்.
பின் அதை கையில் எடுத்து பார்த்தால் பூவின் நான்கு இதழ்களும் தனித்தனியாக தெரியும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எளிமையாக அழகாக ஒரு கைவினை கொடுத்து இருக்கிறீங்க, பாராட்டுக்கள். ;)

‍- இமா க்றிஸ்

ஆஹா,அருமை,உங்கலோட ஜெம்ட்ரீ செஇது வைத்துல்லேன் ,இதும் ட்ரை பன்ட்ரேன் பா,வாழ்த்துக்கல் ரம்யா ,யென்னோட க்லோஸ் friend name