ஆரிகாமி லில்லி - பாகம் 2

தேதி: August 27, 2012

5
Average: 5 (7 votes)

 

ஆரிகாமி பேப்பர் - விரும்பிய வண்ணங்களில்

 

பின் வெண்மையாக தெரியும் முக்கோணங்களை படத்தில் காட்டியவாறு மடிக்கவும். ஒரு இதழுக்கு இரண்டு வீதம் எட்டு முறை மடிக்க வேண்டி இருக்கும். ஆரஞ்சு பூ அவ்வாறு மடிக்கப்பட்ட நிலையில் உள்ளது .
நான்கு பக்கத்திலும் மடித்த பின், படத்தில் ஆரஞ்சு பூவில் காட்டியபடி, மடித்ததை பிரிக்கவும்.
பிரித்ததும் முன் இருக்கும் வெண்மையான இரு முனைகளை அழுத்தி பிடித்து பிரித்த கீழ் பகுதியை மென்மையாக கீழ் நோக்கி படத்தில் காட்டியபடி இழுக்கவும்.
இழுத்ததை பக்குவமாக, நேர்த்தியாக கீழ் பக்கம் முழுமையாக அமிழ்த்தவும்.
பர்பிள் பூ அவ்வாறு எல்லா பக்கமும் அமிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. பின் மொத்தமாக பூவை விரித்து இளக்கி விட்டு, கீழ் பக்கம் அமிழ்த்தி வைக்கப்பட்ட முனையை எடுத்துக் கொள்ளவும்.
பின் அம்முனையை உள்பக்கம் நன்றாக சொருகி விடவும். நான்கு பக்கங்கள் செய்ய வேண்டி வரும்.
அதை போல நான்கு பக்கமும் செய்தால், படத்தில் காட்டியப்படி கிடைக்கும். இப்போது பூவின் இதழ்கள் தயாராகிவிட்டது. காம்பினை தயார் செய்ய, ஆரஞ்சு பூவில் காட்டப்பட்ட பிளவு இருக்கும் பக்கங்களை விட்டு விட்டு, பர்பிள் பூவின் காட்டப்பட்ட பிளவில்லாத பக்கத்தை எடுத்துக் கொள்ளவும். அதாவது பிளவுள்ள நான்கு பக்கங்களும், பிளவில்லாத நான்கு பக்கங்களும் கிடைக்கும்.
பிளவில்லாத பக்கங்களை மீண்டும் முக்கோணமாக மடிக்கவும். நான்கு பக்கமும் தலா எட்டு முறை மடிக்க வேண்டி இருக்கும். இதனால் கூரான காம்பு பகுதி கிடைக்கிறது.
அனைத்து பக்கங்களையும் மடித்தால் படத்தில் காட்டியபடி கிடைக்கும். இப்போது அனைத்து பாகங்களும் ரெடி.
நான்கு இதழ்கள் தயாரானதும், ஒரு பென்சிலை கொண்டு இதழின் நுனியில் வைத்து வெளிப்புறமாக சுருட்டி விடவும்.
நான்கு இதழ்களையும் இப்படி செய்வதால், சீராக ஒரே மாதிரியாக இதழ்கள் விரிந்து கிடைக்கும்.
கீழே விரும்பிய பொருளில் பூவிற்கு தேவையான குச்சிகளை வைத்துக் கொள்ளலாம்.
அழகான ஆரிகாமி லில்லி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

இமா
உங்க பதிவு பகுதி ஒன்றுக்கு போயிடுத்து
நன்றி இமா :)

சரண்யா
அப்படியா ?
மிக்க மகிழ்ச்சி ;)
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப அழகா இருக்கு... சீக்கிரமே செய்துவிட்டு சொல்கிறேன்...

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

ஆரிகாமி லில்லி பூத்து குலுங்குது சூப்பர் ரம்ஸ். ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

ரம்யா ரொம்ப அழகா இருக்கு கண்ணபரிக்கும் அழகு. பிங்க் லாவண்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரம்யா ஒன்னு கொடுத்தா அப்படியே மைக் பூ மாதிரி தலையில் சொருகிக்குவேன் தரீங்களா

woooooooooooow color colorah kannai kavarum vanna vanna pookal soperbbbbbbbbbbbbbbbb......
vazhthukkal ramya...idha ivlo azhga sejadhinaala idha flower avey ungaluku parisalikiren... he.hee..heee,,,...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

woooooooooooow color colorah kannai kavarum vanna vanna pookal soperbbbbbbbbbbbbbbbb......
vazhthukkal ramya...idha ivlo azhga sejadhinaala idha flower avey ungaluku parisalikiren... he.hee..heee,,,...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரம்ஸ்,

வாவ்... ஆரிகாமி லில்லி ரொம்ப அழகா இருக்கு! கலர் கலரா கண்ணைக்கவரும் விதத்தில், பார்க்கவே லவ்லியா இருக்கு ரம்ஸ்!!

தொடர்ந்து கைவினையிலும் அசத்தறீங்க!... :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அழகான பூக்கள் வாழ்த்துக்கள்.
செபா.

அழகான பூக்கள். கலர்ஸ் ரொம்ப கியூட். நல்ல பொறுமையா எல்லாம் பெர்ஃபெக்ட்டா பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பல வண்ணங்களில் வரிசையாய் அழகாய் பூத்திருக்கிறது ஆரிகாமிக் லில்லி . ரொம்ப அருமைங்க , மேலும் படைக்க வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

ரம்யா அக்கா சூப்பரா இருக்கு பூக்கள் பாகவே சோ கலர்புல்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

ஜெயா

கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க ;)

நன்றி

வினு

ரொம்ப ரொம்ப நன்றிங்க ;)

உமா

ரொம்ப நன்றிங்க

அவசியம் நீங்களே எடுத்துக்கிங்க.. :)

ரேவதி

ரொம்ப நன்றிங்க :)

உங்க பரிசுக்கும் சேர்த்து

செபா

ரொம்ப நன்றிங்க ;)

குணா

ரொம்ப நன்றிங்க ;)

கனி

ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆரிகாமி லில்லி ரொம்ப அசத்தலாக இருக்கு... வாழ்த்துக்கள்!!! ரம்யா

கலை

வண்ண வண்ண லில்லி பூக்கள் கண்ணை பறிக்கிறது.மனதை கொள்ளை கொள்ளும் அழகு. வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பாகம் 2இல் 3ஆம் படத்துல இருந்து புரியல ப்லீஸ் பேபர் கீழ கொண்டு வந்து மடிப்பது புரியல

அது சுடச்சுடப் போட்ட கருத்து. பிறகுதான் பாகம் 2 வெளியாகிற்று.
பூக்கள், கலர் எல்லாம் அழகா இருக்கு. சூப்பர்.

‍- இமா க்றிஸ்

romba supera iruku ramya pakkave attractive colors... origami sheet enga kedaikum pa...im 4m erode yaravathu therija solungaa pls