சின்ன சின்ன சந்தேகங்கள் - 5

சின்ன சின்ன சந்தேகங்கள் 22 பக்கங்கள் ஆகிவிட்டது தொடர்ந்து உங்களின் சந்தேகங்களையும், அதற்கான விளக்கங்களையும் இந்த இழையில் தொடருங்கள்.

முந்தைய இழைகள் :-
http://www.arusuvai.com/tamil/node/13099
http://www.arusuvai.com/tamil/node/17266
http://www.arusuvai.com/tamil/node/19309
http://www.arusuvai.com/tamil/node/21604

அம்முசெளமி உங்களுக்கு என்ன சந்தேகம் ஆனாலும் தனித்தனி இழை ஆரம்பிக்காமல் இந்த இழையில் கேளுங்க நம்ம தோழிகள் பதில் சொல்லுங்க இது போல் நிறைய பகுதி இருக்கு பாருங்க அதுல கூட தேடி பாருங்க உங்களுக்கான பதில் இருக்கலாம்.

கடுகு
எண்ணெய் முடிக்கு உபயோகப்படுத்தலாமா? எதற்கெல்லாம் உபயோகபடுத்தலாம்?தெரிந்த தோழிகள் சொல்லுங்களேன்.plz

மழை காலத்தில் துவைத்த உடையில் நன்கு காயாமல் ஒரு வித வாடை வீசுகிறது அதற்க்கு என்ன செய்ய வேன்டும் தோழிகளே?

கடுகு எண்ணைய் தலைக்கு தேய்க்கலாமா என்று எனக்குத் தெரிய வில்லை,ஆனால் தந்தூரி வகைகளில் மசாலாவுடன் ஒரு ஸ்பூன் எண்ணைய் சேர்த்து ஊற வைப்பேன்.மேலும் பெங்காலி(bengali fish curry) மீன் குழம்பில் தாளிக்கப் பயன் படுத்துவேன்

ஆலிவ் ஆயில் தந்தூரிக்கு சேர்த்திருக்குகேன். கடுகு எண்ணெய் நானும் சேர்த்துப்பார்க்கிறேன் .உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி வாணி

வணக்கம் தோழிகளே , பாதாம் ஆயில் முகம் மற்றும் உடம்பிற்கு பூசுவதால் நல்ல நிறம் கிடைக்குமா ,அதை எப்படி உபயோகிப்பது எனது சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ் ,ப்ளீஸ்

அன்பு சகோதரிகளுக்கு,
உதவுங்கள் pls, குளிர் காலத்தில் கன்னம் வறட்சி என்ன கிரீம் பூசலாம்? Nivea moisturising cream பூசுகிறேன் . நான் வசிப்பது Ireland( cold country).

நன்றிகள் பல,
-அனிதாமுத்து

கடையில் வாங்கிய ஹென்னா இப்போது தான் போட்டேன்.இப்போ தான் கவனிக்கிரேன் .அது வழக்கம் போல உதிராமல் ஏதோ ரப்பர் போல உரிந்து வருகிரது.இது என்ன வகை ஹென்னா தெரிந்தவர் சொல்லுங்கள் .plz

நீங்க் வாங்கினது கருப்பு அல்லது வேறு கலர் ஹென்னாவா?? அல்லது உடனே சிவக்க கூடிய வகையா? இவை எல்லாம் கெமிக்கல் பேஸில் வருபவை, அதனால் ரப்பர் போல் உரிந்து வரும். பயப்படாதீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட அப்படியா சிவப்பு நிற ஹென்னா.உடனே சிவக்கிறது.இப்படி உரித்து எடுப்பது இது தான் முதல் தடவை.இததெல்லாம் உபயோகப்படுத்தலாமா.இது உடன் அழிந்து விடுமா? உடன் பதிலுக்கு நன்றி வனிதா.நீங்க சொல்லித்தான் பிரக்டீஸ் பண்ன அடிகடி போடுகிறேன்.ஏதோ ஒரு கை வேலையாவது தெரிந்து வைக்கலாமே என்று ,ஆர்வமும் கூட.

மேலும் சில பதிவுகள்