சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

ஸ்கந்தா, சூப்பர்ங்க... சரியா தான் இருக்கு கணக்கு...
அப்படியே தொடருங்க...

அப்புறம் நீங்க எதுவும் சமைக்கலையா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

hai bivi akka enkuda pesunga

ஹாய் ஜான்ஸி, வணக்கம். உங்களை இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி.

அரட்டை இழையில் இந்திரா சொன்னது போல், இங்கே இந்த தளத்தில் தமிழில் தான் பதிவு செய்ய வேண்டும்... தமிழில் பதிவு செய்வது மிக சுலபம்.
இந்த லிங்கிற்கு http://www.arusuvai.com/tamil_help.html சென்றால் உங்களுக்கே புரியும்...

அப்புறம் அரட்டை எல்லாம் அரட்டை இழையில் தான்.. இந்த இழையில் மேலே குறிப்பிட்டவர்களின் குறிப்புகளை கொண்டு சமைத்தால் மட்டும் பதிவு செய்யுங்கள்.. :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என் கணக்கு செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் கார்த்திகா,
உங்களின் பதிவை இப்போது தான் பார்த்தேன்...

மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு லிங்க்குகளில் இருக்கும் சமையல் குறிப்புகள் பயன்படுத்தி குறிப்பிட்ட தேதிக்குள் சமையல் செய்து, இங்கே குறிப்பிட்டால், நம்ம கணக்கு பிள்ளை ஸ்கந்தா அதை உங்கள் அக்கவுண்டில் பதிவு செய்து வைப்பார்கள்.

கொடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்து அதிக குறிப்புகளை சமைப்பவரே வெற்றி பெற்றவராவார்..

புரியிற மாதிரி சொல்லி இருக்கேனா????

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
இன்று என்னுடைய அக்கவுண்டில்,
மாங்காய் சாதம் (மங்கம்மா)
பாவ் பாஜி (ரேவதி)
சேர்த்துக் கொள்ளுங்கள் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என் கணக்குல ரேவதியோட வடகறி சேர்த்துக்கோங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நல்ல அருமயான இழை பா பிந்து,முதலில் என்னுடய வாழ்த்துக்கள்,வனிக்கு நன்றி,கனக்கு ,,,கனக்க சரியா வைக்கோனும் புரிதா,எனக்கு இந்திரா சொல்லி மாலை தான் தெரியும்,ஸ்கந்தா நான் ரேவதியோட சப்பாத்தி ரோல் தான் செய்தேன்,தாமதமான பதிவிற்கு மன்னித்து அருளுங்கள் [கிச்சன் வேலை முடிய நேரமாகிவிட்டது] நாலைஉம் செய்து விட்டு வரேன் பா .

ஹேய் ரொம்ப நல்லா இருக்குப்பா இந்த இழை
இதுனால இனி வீட்ல உள்ளவங்களுக்கு தான் குஸி... பின்னே இனி தினமும் வெரைட்டி வெரைட்டியா வெட்டுவாங்கள்லே.(என்னையும் சேர்த்து தான்).

நான் அப்பவே இந்த இழையை வந்து பார்த்தேன் சரி நாமும் ஏதாவ்து செய்து விட்டு தான் வந்து பதிவ போடனும் என்று நினைத்து ரேவதியோட சப்பாத்தி தால் செய்து நல்லா வெட்டிட்டு வரேன்.

எங்கே கணக்கு பிள்ளை குறிச்சிகிடுங்கப்பா.

ம்ம்ம் என்னோட வந்தீங்க இப்போ கணக்கு பிள்ளையா ப்ரொமோசன் ஆயிட்டீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

நான் ரேவதி யின் செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா செய்தேன் லஞ்ச்சுக்கு,

மேலும் சில பதிவுகள்