சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

என் கணக்குல குழிபணியாரம் சேர்க்கல அத சேர்த்தா மொத்தம் 7.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா மனிக்கவும், சேர்த்துவிட்டேன்

நன்றி....இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க. நீங்க எத்தனை பேரோடத கண்க்கு எடுக்குறீங்க இது எல்லாம் ரொம்ப சின்ன தப்பு இதுக்கு போயி மன்னிப்பு கேட்டுட்டு..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த இழையை சிறப்பாக வழி நலத்டி சென்ற பிந்துவிற்கும், கணகச்சிதமாக கணக்கு பார்த்த ஸ்கந்தாவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஸ்கந்தா எனக்கு ஒரு சந்தேகம்பா மங்கம்மா குறிப்பு மொத்தமே 29 தான் இருக்கு நீங்க மொத்த குறிப்பு 40 சொல்லி இருக்கீங்களே அது புரியல. பிந்துவோட ஒரு குறிப்பு தான் ஆனா நீங்க 2 ன்னு சொல்லி இருக்கீங்க. சாரி கொஞ்சம் புரியாத மாதிரி இருந்துச்சு அதான்பா கேட்டேன்

பிந்து&ஸ்கந்தா நானும் ரேவதி,மங்கம்மா,கமர்நிஷா&பிந்து,குறிப்புகள் செய்தேன் ஒன்றா பதிவு போடலாம் என்று இருந்தேன் ஆனால் சனிக்கிழமை இவேநிங் ல இருந்து நெட் சுத்தமா கட் ஆகிடுச்சு இப்போதான் கனெக்சன் வந்தது வந்து பார்தால் ரிசல்ட் வந்திருக்கிறது ஓகே நெக்ஸ்ட் டைம் ஆவது கலந்டுகுரேன்.

பிந்து:பூண்டு தொக்கு ரேவதி:சப்பாத்தி ரோல்,குழிப்பனியாரம்,குல்ஃபி,சப்பாத்தி தால்,வடைகறி மங்கம்மா:பருப்பு ரசம்,கருணைகிழங்கு கட்லெட் கமர்நிஷா:எலுமிச்சை ரசம் ,சிக்கன் நூடுல்ஸ் இவைகள் தான் நான் செய்தும் பதிவு போடாமல்விட்டது

நான் சொல்லிருப்பது அவர்களின் குறிப்புகள் எத்தனை முறை செய்யபடிறுகுது என்பது. அவர்களின் குறிப்பு எண்ணிக்கை இல்லை. இப்போது புரிகிறதா

இதுதான் நீங்கள் செய்த மொத்தம் எண்ணிகையா

ஆமாம் ஸ்கந்தா

மேலும் சில பதிவுகள்