சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

உங்களுடைய கணக்கும் சேர்க்கப்பட்டு விட்டது. சரி பார்த்து கொள்ளுங்கள். அடுத்த முறை, தினமும் என்ன செய்திர்கள் என்பதை பதிவு போடுங்கள்

நன்றி ஸ்கந்தா...அடுத்தமுறை கண்டிப்பா உடனுக்குடன் பதிவு போடுறேன்.

சமைத்து அசத்தலாம் பகுதி ஒன்றில் கலந்துக் கொண்டு அசத்திய தோழிகள் அனுஷ்யா, ரம்யா, சுஸ்ரீ, ஷமீலா, சுவர்ணா, வனிதா, ரூபி, உமா, சரண்யா, இந்திரா, மஹாசிவா, கனிமொழி, வினோஜா, சமீஹா, ஸ்கந்தா, லலிதா, கவிசிவா அனைவருக்கும் மிக்க நன்றி :)

கணக்கு பிள்ளையாகவும் அசத்திய ஸ்கந்தாவிற்கும் நன்றி :)

வெற்றி மாலை:
===============
பகுதி ஒன்றில் வெற்றி மாலையை பகிர்ந்துக் கொள்ளும் அனுஷ்யா மற்றும் ரம்யாவிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் :)

மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் சுஸ்ரீக்கு வாழ்த்துக்கள்...

நான்காம் இடத்தை பிடித்த ஷமீலாவிர்க்கும், இறுதியில் சில நாட்களே பங்கு கொண்ட போதும், அசத்தலாக ஐந்தாவது இடத்தை பிடித்த சுவர்ணாவிற்கும் சிறப்பு வாழ்த்துக்கள் :)

எல்லோரும் எழுந்து நின்று வெற்றி பெற்றவர்களுக்கு கை தட்டி வாழ்த்து தெரிவியுங்கள் :)

இந்த சமைத்து அசத்தலாம் பகுதியின் டாப் த்ரீ குறிப்புகள்:
========================================================
செட்டிநாடு புலாவ் - ரேவதி - 11
குழிபணியாரம் - ரேவதி - 10
பருப்பு ரசம் - மங்கம்மா - 9
புதினா மல்லி சட்னி - ரேவதி - 9

கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி... இந்த பகுதியை மிஸ் செய்தவர்கள் மறக்காது அடுத்த வாரம் கலந்துக் கொண்டு அசத்துங்கள்...

கணக்கு பிள்ளையாக இருந்து, அற்புதமாக கணக்கு போட்டு அசத்திய ஸ்கந்தாவிற்கு எல்லோரும் ஜோரா ஒருதடவை கை தட்டுங்கள்... மிக்க நன்றி ஸ்கந்தா...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சமைத்து அசத்தலாம் பகுதி ஒன்றில் கலந்துக் கொண்டு அசத்திய தோழிகள் எல்லோருக்கும் நன்றி.
எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிந்து மற்றும் வனிதா அக்காவிற்கும் எனது மனமார்த நன்றி.
அடுத்த பகுதிக்கும் கணக்கு பார்க்க நான் தயார்.

மக்களே... வெற்றி பெற்ற தோழிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் :) ஜோரா கை தட்டுறேன் கேட்குதா?? பிடிங்க எல்லாருக்கும் ஒரு ரோஜா பூ. அடுத்தவாட்டி விட மாட்டேன் உங்களை... ;)

ஸ்கந்தா... நன்றி எனக்கு சொல்லாதீங்க, நாங்க தான் உங்களுக்கு சொல்லணும்... புது முகமாக அறிமுகமாகி கணக்கில் அசத்தி அறுசுவையில் உங்களூக்குன்னு நிலையா ஒரு இடத்தை பிடிச்சுட்டீங்க :) வாழ்த்துக்கள். பிடிங்க... அழகான ரோஜா உங்களூக்காக.

பிந்து அக்கா... எடுத்த வேலையை கச்சிதமா முடிச்சுட்டீங்க. இதுவரை இந்த பொறுப்பில் இருந்த எங்களை எல்லாம் விட நீங்க தான் ரொம்ப ஆர்வமா எல்லா குரிப்பும் சமைச்சும் சொல்லி இருக்கீங்க. ஸ்பெஷல் பாராட்டுக்கள். பிடிங்க உங்களூக்கும் ஒரு ரோஜா :)

கலந்து கொண்ட அன்பு தோழிகள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் எல்லாரும் மற்ற தோழிகளை ஊக்குவிக்கும் நல்ல விஷயத்தை செய்திருக்கீங்க... அது மிக பெரிய விஷயம். அதுக்காக உங்க எல்லாருக்கும் ரோஜா... :) அடுத்த முறை போட்டி போடுவோம் மீண்டும். பை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து ஸ்கந்தா

மிக்க நன்றி :)
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
இந்த பகுதியில் பங்கு கொண்ட சிறப்பித்த தோழிகளுக்கு வாழ்த்துக்கள்..

எடுத்த காரியத்தை செவ்வனே முடித்து கலக்கிய பிந்து ஸ்கந்தா இருவருக்கும் பாதாம் அல்வா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய்
சமைத்து அசத்தலாம் பகுதி - 1 வெற்றிகரமாக நடத்தி முடித்த தோழிகள் பிந்து , ஸ்கந்தா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்ட தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி....

அனுஷ்யா, ரம்யா, சுஸ்ரீ மூவருக்கும் மலர்கொத்துடன் என் வாழ்த்துக்களும்.
பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதல் பகுதியா இருந்தாலும் அருமையா நடத்தி சென்று, கனகச்சிதமா கணக்கெடுத்து அசத்திய பிந்து மற்றும் ஸ்கந்தா இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

சமைத்து அசத்தலாம் பகுதியில் வெற்றி பெற்ற அனுஷ்யா, ரம்யா, சுஸ்ரீ மூவருக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் இந்த பகுதியை எடுத்து, பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கும் பிந்து மற்றும் கணக்குப்பிள்ளை ஸ்கந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனுஷ்யா, ரம்யா, சுஸ்ரீ மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... மேலும் இந்த பகுதியை சிறப்பாக நடத்திய பிந்து,ஸ்கந்தா இருவருக்கும் வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்