சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

பிந்து,

எல்லா விஷயங்களையும் விரைவில் கேட்டறிந்து, வெற்றிகரமாக இழை தொடங்கியதற்கு முதலில் என் வாழ்த்துக்கள்!! ஐ நோ, இதில் பாதியை நீங்க வனிக்கு கொடுத்துடுவிங்க!! :) :)

நான் தனியாக‌வும் வனிக்கு சொல்லிக்கறேன். புது வரவுகளை ஊக்குவிக்கும் உங்க தொடர் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் வனி!

ஸ்கந்தா,

புதிய கணக்குபிள்ளை பொறுப்பேற்க முன்வந்தமைக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அப்படியே என் கணக்கையும் தொடங்கிக்கோங்க‌... :)

இன்று ரேவதியின் ஈஸி பீஸா & முட்டை பூஜ்யா! மீண்டும் நாளை வருகிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இந்திரா, சரண்யா, சமீஹா, மஹா சிவா, சுஸ்ரீ,
சமைத்து அசத்தலாம் இழைக்கு ஆதரவு அளிக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரம்யா, ரொம்ப மும்முரமா இறங்கி இருக்கீங்க போல ;-) ஆனாலும் நாங்க எல்லாம் அவ்வளவு ஈசியா விட்டுட மாட்டோம்ல :)

சூப்பர்ங்க இந்திரா... ரொம்ப சுறுசுறுப்பா இருக்கீங்க... பார்ப்போம் பார்ப்போம், ஜெய்க்க போறது யாருன்னு :)

சரண்யா, மன்னிப்பெல்லாம் வேண்டாம்... தினமும் சமைத்து அசத்தினால் சரி தான் :)

சமீஹா, உங்களுக்கு தான் அடுத்து பகுதி இரண்டில் பிரமோஷன்... தயாரா இருங்க ;-)

மஹா சிவா, நீங்களும் அக்கவுன்ட் தொடங்கியாச்சா? சந்தோஷம்... ஆல் தி பெஸ்ட்...

சுஸ்ரீ, மிக்க நன்றி :) உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட் :)

P.S - சரி இந்த பட்டியலில், வனிதாவின் பெயர் இடம் பெறாததற்கு காரணம் என்ன அப்படின்னு உங்க யாருக்காவது கேள்வி எழுந்தால், உடனே உங்கள் மூளையை தட்டி விடுங்கள்... உங்களுக்கு கிடைக்கும் பதிலை அப்படியே நம்ம அரட்டை இழையில் பதிவு செய்யுங்கள்... சரியான விடை அளிப்பவருக்கு முன்பு வேறு ஒரு போட்டிக்கு தருவதாக அறிவிக்க பட்டு இன்னமும் ஸ்டாக்கில் இருக்கும் இரண்டு கடி ஜோக்குகள் பரிசாக வழங்கப் படும் :d

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் பிந்து,ஸ்கந்தா..
நான் நேற்று இரவு ரேவதியோட மினி பூரி மசாலா செய்தேன்...சூப்பரா இருந்துச்சு...

என் கணக்கு இன்றூ காலை:

ரேவதியின் புதினாமல்லி சட்னி
மங்கம்மாவின் தேங்காய் பொடி

சேர்த்துடுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இரவு ரேவதியோட மினி பூரி மசாலா செய்தேன்...டேஸ்டி :)..
சேர்த்துக்கோங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நேற்று மங்கம்மாவின் பருப்பு ரசம், ரேவதியின் முட்டை பூஜ்யா
இன்று ரேவதியின் புதினாமல்லி சட்னி

எல்லா அக்காக்கும் இனிய காலை வணக்கம் நான் நேத்து நைட் காமர் நிஷா அக்காவோட சிக்கன் நூட்லஸ் பனேன் செம டேஸ்டி அக்காஸ்
இணைக்கு காலைல மங்கம்மா அவங்களோட சம்பா கோதுமை ரவை அடை அண்ட் தேங்காய் பொடி செய்தேன்
இன்னைக்கு லஞ்ச்க்கு தேங்காய்பால் புளிசாதம் பனேன் எல்லாமே நல்லா அவுட்புட் வந்துச்சு டெஸ்ட் பணி பார்த்தேன் சூபரா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்னைக்கு நானும் ரேவதியோட வடகறி செஞ்சு பாத்தேன் டின்னருக்கு .

மங்கம்மா - மசாலா கறி (இனிமே தான் செய்ய போறேன்)
கமர்நிஷா - பொங்கல் சாம்பார் (காலையில செய்தாச்சு சூப்பர்ப்)
ரேவதி - சப்பாத்தி ரோல், சப்பாத்தி தால் (சப்பாத்தி செய்ததால இது ரெண்டையும் செய்துட்டேன். பசங்களுக்கு ரோல் எங்களுக்கு தால்)

மேலும் சில பதிவுகள்